காரில் வைத்து.. என் ஆடையை கிழித்தார்.. மைக் டைசன் என்னை பலாத்காரம் செய்தார்.. பெண் பரபர புகார்
பிரபல முன்னாள் குத்துசண்டை வீரர் மைக் டைசன் தன்னை கார் ஒன்றில் வைத்து கொடுமை செய்து பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு பின் புகார் கொடுத்துள்ளார்.
நியூயார்க்: முன்னாள் குத்துசண்டை வீரர் மைக் டைசன் மீது பெண் ஒருவர் பலாத்கார புகார் கொடுத்துள்ளார். 1990 களில் இந்த பலாத்காரம் நடைபெற்றதாக அந்த பெண் புகார் கொடுத்துள்ளார்.
குத்துசண்டை உலகின் ஜாம்பவான்களின் ஒருவர் மைக் டைசன். கோபக்காரர், மூர்க்கமானவர், Iron Mike" மற்றும் "Kid Dynamite" என்ற பெயர்களில் எல்லாம் அழைக்கப்பட்டவர் மைக் டைசன்.
உலகிலேயே மிக மோசமான மனிதர் என்றும் ஒரு காலத்தில் மைக் டைசன் கருதப்பட்டார். 1987 - 1990 வரை இவர் குத்துசண்டை உலகின் சாம்பியனாக திகழ்ந்து வந்தார்.

சாம்பியன்
உலக சாம்பியனாக இவர் திகழ்ந்த காலத்தில் 19 போட்டிகளில் எதிரிகளை நாக் அவுட் செய்து இருக்கிறார். பாக்சிங் உலகில் முடி சூடா மன்னனாக இவர் திகழ்ந்து வந்தார். 12 போட்டிகளில் முதல் சுற்றிலேயே வென்றுள்ளார். 20 வயதிலேயே ஹெவி வெயிட் சாம்பியன் பட்டம் வென்று, உலகிலேயே மிக இளம் வயதில் ஹெவி வெயிட் சாம்பியன் பட்டம் பெற்றவர் என்ற புகழை பெற்றார். இந்த நிலையில்தான் மைக் டைசன் மீது பெண் ஒருவர் பலாத்கார புகார் கொடுத்துள்ளார். 1990 களில் இந்த பலாத்காரம் நடைபெற்றதாக அந்த பெண் புகார் கொடுத்துள்ளார்.

மைக் டைசன்
அந்த பெண் கொடுத்துள்ள புகாரில் மைக் டைசன் தன்னை வன்புணர்வு செய்துவிட்டார். அதனால் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கிறேன். அவருக்கு எதிராக பலாத்கார பிரிவில் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய கஷ்டங்களுக்கு இழப்பீடாக 5 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும். அவரால் நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். இத்தனை வருடங்களாக அவரால் நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டேன்.

என்ன நடந்தது?
தான் பலாத்காரம் செய்யப்பட்ட நாள் நினைவில் இல்லை. 1990ல் தான் அது நடந்தது. 1990 தொடக்கத்தில் அது நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார் அந்த பெண். அதே வருடத்தில்தான் அழகிரி டெகிரி வாஷிங்க்டன் டைசனுக்கு எதிராக பலாத்கார புகார் கொடுத்தார். இந்த புகாரில் டைசன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது. இதில் டைசன் மூன்று வருடம் சிறையில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1992 முதல் 1995 வரை அவர் சிறையில் இருந்தார். இந்த நிலையில் டெகிரி பலாத்காரம் செய்யப்பட்ட அதே காலத்தில் தானும் பலாத்காரம் செய்யப்பட்டதாக அந்த பெண் கூறி உள்ளார்.

கொடுமை
டைசனுடன் காரில் இருந்த போது அவர் தன்னை பலாத்காரம் செய்தார். என்னால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் மிகவும் வலுவாக இருந்தார். நான் அவரிடம் பலமுறை நோ நோ என்று கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. அவர் தொடர்ந்து என்னை தாக்கி பலாத்காரம் செய்தார். என்னுடைய கால் சட்டையை அவர் கிழித்துவிட்டார், என்று அவர் புகார் கொடுத்துள்ளார். அந்த பெண் தனது பெயரை வெளியிட கூடாது என்று புகாரில் தெரிவித்துள்ளதால் ஊடகங்களில் அவரின் பெயர் வெளியாகவில்லை. இது தொடர்பாக வழக்கும் பதியப்பட்டு உள்ளது. அந்த பெண்ணின் புகாரில் உண்மை இருப்பதாலும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாலும்தான் அவரின் வழக்கை எடுக்க சம்மதித்தாக அந்த பெண்ணின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications