உலகமே எதிர்பார்க்கும் 5:23 மணி.. கடலில் விழும் நாசா விண்கலம்; 14 நிமிடத்தில் தப்பிப்பார்களா வீரர்கள்
நியூயார்க்: நிலவைச் சுற்றி வரலாற்றுப் பயணம் மேற்கொண்ட நாசாவின் 'ஆர்டெமிஸ் 2' விண்கலம், தனது சாகசத்தை முடித்துக்கொண்டு நாளை அதிகாலை பூமிக்குத் திரும்புகிறது.இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5:23 மணிக்கு இந்த விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைகிறது. விண்வெளியில் இருந்து மணிக்கு சுமார் 38,367 கிலோமீட்டர் வேகத்தில் பந்து போல உருண்டு வரும் இந்த விண்கலம், அதிகாலை 5:37 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் வந்து விழும்.
பூமிக்கும் நிலவுக்கும் இடையே நடந்த அந்த நீண்ட நெடிய பயணத்தில், இப்போது அந்த நான்கு விண்வெளி வீரர்களும் தங்களின் இறுதிப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். ஆனால், பூமிக்குள் நுழையும் அந்த கடைசி நிமிடங்கள் இருக்கிறதே.. அதுதான் இப்போது உலகையே பதைபதைக்க வைத்துள்ளது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5:23 மணிக்கு இந்த விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைகிறது. விண்வெளியில் இருந்து மணிக்கு சுமார் 38,367 கிலோமீட்டர் வேகத்தில் பந்து போல உருண்டு வரும் இந்த விண்கலம், அதிகாலை 5:37 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் வந்து விழும்.
வளிமண்டலத்திற்குள் நுழைந்ததில் இருந்து கடலில் விழும் வரை அந்த 14 நிமிடங்கள் இருக்கிறதே.. அதுதான் உச்சக்கட்ட சவால். அந்த நேரத்தில் விண்கலத்தைச் சுற்றி நெருப்புப் பிழம்புகள் சூழ்ந்திருக்கும். விண்வெளி வீரர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
அந்த 14 நிமிடங்கள் ஏன் 'திக் திக்' நிமிடங்கள்?
விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்புவது என்பது சாதாரணமான காரியம் இல்லை. அந்த 14 நிமிடங்களில் தான் விண்வெளி வீரர்களின் உயிர் நூலிழையில் ஊசலாடும்.
வளிமண்டல உராய்வு தான் முதல் பாயிண்ட்: விண்கலம் மணிக்கு 38,000 கிலோமீட்டர் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது, காற்றுடன் பயங்கரமாக மோதும். நீங்கள் வேகமாக ஓடினால் காற்று உங்கள் முகத்தில் மோதுமே, அதைவிடப் பல லட்சம் மடங்கு வேகத்தில் காற்று விண்கலத்தின் மீது மோதும். இது விண்கலத்தின் வேகத்தைக் குறைக்க உதவும் என்றாலும், அந்த உராய்வு மிகப்பெரிய ஆபத்து.
கனவிலும் நினைக்காத வெப்பம்: அந்த உராய்வினால் விண்கலத்தின் வெளிப்பகுதி சுமார் 2,700 டிகிரி செல்சியஸ் வெப்பமடையும். அதாவது, இரும்பையே உருக்கும் அளவுக்குத் தீப்பிழம்புகள் விண்கலத்தைச் சூழ்ந்திருக்கும். விண்கலத்தின் கவசத்தில் ஒரு சிறிய ஓட்டை விழுந்தால் கூட உள்ளே இருக்கும் வீரர்கள் சாம்பலாகிவிடுவார்கள். அதனால்தான் இந்த 14 நிமிடங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உலகமே காத்திருக்கிறது.
தகவல் தொடர்பு துண்டிப்பு : இதுதான் உச்சக்கட்ட பயம். விண்கலத்தைச் சுற்றி நெருப்புப் பிழம்புகள் சூழ்ந்திருக்கும்போது, பூமியில் இருக்கும் நாசா கட்டுப்பாட்டு மையத்திற்கும் விண்கலத்திற்கும் இடையேயான ரேடியோ தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். சுமார் 6 முதல் 7 நிமிடங்கள் வரை வீரர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வராது. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்பதே தெரியாத அந்த நிமிடங்கள் தான் உலகையே நடுங்க வைக்கும் நிமிடங்கள். இந்தத் தடைகளைத் தாண்டி, விண்கலத்தின் பாராசூட்கள் சரியாக விரிந்து, பசிபிக் கடலில் குதித்தால் மட்டுமே இந்த வரலாற்றுப் பயணம் வெற்றியில் முடியும்.
விண்கலத்தின் கமாண்டர் ரீட் வைஸ்மேன், தனது இறுதி உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு, "இனி பேக்கிங் செய்யலாமா?" என நாசா கட்டுப்பாட்டு மையத்திடம் கேட்டுள்ளார். ஆம், இப்போது விண்கலத்திற்குள் உள்ள பொருட்களைக் கட்டி வைப்பதுதான் மிக முக்கியமான வேலை.
ஏனென்றால், மணிக்கு 40,000 கி.மீ வேகத்தில் விண்கலம் வரும்போது, உள்ளே இருக்கும் ஒரு சிறிய ஸ்பூன் கூட ராக்கெட் வேகம் போல விண்வெளி வீரர்களைத் தாக்க வாய்ப்பு உள்ளது. கனவிலும் நினைக்காத விபரீதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதில் வீரர்கள் மிகக் கவனமாக உள்ளனர்.
1969-ல் அப்பல்லோ விண்கலம் மணிக்கு 39,938 கி.மீ வேகத்தில் வந்து சாதனை படைத்தது. அந்த வேகத்தை இந்த ஆர்டெமிஸ் 2 முறியடிக்க முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக வேகத்தைக் குறைத்து நாசா திட்டமிட்டுள்ளது. வேகம் முக்கியமல்ல, வீரர்களின் உயிர்தான் முக்கியம் என்பதே அனைவரின் எண்ணம்
விண்வெளியில் பல லட்சம் மைல்கள் கடந்து வந்தாலும், அந்த கடைசி 14 நிமிடங்கள்தான் வாழ்வா? சாவா? என்பதைத் தீர்மானிக்கும். நான்கு மனித உயிர்களுக்காக ஒட்டுமொத்த உலகமே பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறது. இன்று அதிகாலை அவர்கள் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கும்போதுதான் மக்களுக்கு நிம்மதியை தரும்.












Click it and Unblock the Notifications