இன்று பூமியை நெருக்கமாக கடக்கும் 2 விண்கற்கள்! கொஞ்சம் மிஸ் ஆனாலும் மொத்தமும் காலி! நாசா வார்னிங்
நியூயார்க்: பூமிக்கு மிக நெருக்கமாக இன்று இரண்டு பெரிய விண்கற்கள் கடந்து செல்ல இருக்கிறது என விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனை நாசா கண்டுபிடித்திருக்கிறது.
உலகம் முழுவதும் விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏன் நாம் விண்வெளி துறையின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம்? என்று அடிக்கடி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கிறோம் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை விஞ்ஞானிகள் இவ்வாறு கூறினர்.

அதாவது, "நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக்கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது" என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இவர்கள் கூறியதை போல எதிர் காலத்தில் விண்கற்கலால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன. அப்படி ஒரு ஆய்வுதான் நேற்று பூமிக்கு அருகே விண்கற்கள் இரண்டு கடந்து செல்ல இருப்பதை கண்டு பிடித்திருக்கிறது.
'2024 OE' மற்றும் '2024 OO' எனும் பெயர் கொண்ட விண்கற்கள்தான் இன்று பூமியை கடந்து செல்ல இருக்கிறது. இதில் '2024 OE' விண்கல் 190 அடி கொண்டதாகவும் '2024 OO விண்கல் 88 அடி கொண்டதாகவும் இருக்கிறது. தொலைவை பொறுத்த அளவில், இவை பூமியிலிருந்து சுமார் 75 லட்சம் கி.மீ தூரத்தில் பூமியை கடக்க இருக்கிறது. இந்த தொலைவு மிக நீண்டதாக தெரியலாம். ஆனால் விண்வெளியை பொறுத்த அளவில் இது மிகக் குறைவான தூரம்தான். பூமியிலிருந்து செவ்வாய்க்கு 5.4 கோடி கி.மீ தொலைவு இருக்கிறது. அப்படியெனில் 75 லட்சம் கி.மீ என்பது பூமிக்கு மிக நெருக்கம்.
நிலவுடன் ஒப்பிடும்போது, பூமிக்கும் நிலவுக்கும் இடையே இருக்கும் தொலைவை விட 15 மடங்கு தூரத்தில் இந்த விண்கல் கடந்து சென்றிருக்கிறது. அசுர வேகத்தில் செல்லும் இந்த விண்கல், அதன் பாதையில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட பூமிக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆனால், இப்படியான ஆபத்து எதுவும் இல்லை என நாசா கூறுகிறது.
ஒருவேளை இது பூமியை இது தாக்கினால், விண்கல் விழுந்த இடத்தில் 5-8 கி.மீ தொலைவில் கான்கிரீட் கட்டிடங்கள் எதுவும் இருக்காது. அதாவது நவீன அணு குண்டுக்கு சமமான அளவு வெப்பத்தை இது வெளிப்படுத்தும் என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications