நிலவில் நீர் எங்கெல்லாம் இருக்கிறது? மேப் செய்யும் பணியை தொடங்கியது நாசா!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நிலவில் நீர் இருக்கிறது என்பதை இந்தியாவின் சந்திரயான் விண்கலம் கண்டறிந்து சொன்னது. இதனையடுத்து எங்கெல்லாம் நீர் இருக்கிறது? எவ்வளவு இருக்கிறது என்பது குறித்த ஆய்வை நாசா மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இதற்காக அனுப்பப்பட்டுள்ள சிறப்பு செயற்கைக்கோள் நீர் இருக்கும் பகுதிகளை மேப் செய்யும் பணியை மேற்கொண்டிருக்கிறது.

பூமியில் மட்டுமே நீர் இருப்பதாக நம்பப்பட்டு வந்த நிலையில், இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் விண்கலம், நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது. அதுவரை நிலவு வெறும் மண்ணும், பாறைகளும் நிரம்பியுள்ள பகுதி என்று நினைத்திருந்த உலக நாடுகள், சந்திரயான் ஆய்வுக்கு பின்னர், நிலவை புதிய கோணத்தில் ஆய்வு செய்ய வித விதமாக செயற்கைக்கொள்கை தொடர்ச்சியாக அனுப்பி வைத்தன. அதில் ஒன்றுதான் நாசாவின் 'லூனார் டிரெயில்பிளேசரும்'. 200 கி.கி எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், நிலவை சுமார் 100 கி.மீ உயரத்தில் சுற்றி வருகிறது.

moon water nasa

இதில் இரண்டு சோலார் பேனல்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் 1.2 மீ நீளம் இருக்கும். சோலார் பேனல்கள் மூலம் சூரியனிலிருந்து தனக்கு தேவையான சக்தியை இந்த செயற்கைக்கோள் எடுத்துக்கொள்கிறது. இதன் வேலை, நிலவில் எங்கெல்லாம் நீர் இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதுதான். நிலவில் நீர் இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அது எங்கு இருக்கிறது என்பதுதான் தெரியாது. இதை இந்த செயற்கைக்கொள் கண்டுபிடித்து சொல்லிவிடும்.

நிலவில் நீர் கண்டு எடுக்கப்பட்டால், மனித குலத்தின் மிகப்பெரிய சாதனையாக இதை கருதலாம். ஏனெனில் மற்ற கிரகங்களில் ஆய்வு மேற்கொள்ள பூமியிலிருந்து விண்கலணை அனுப்புவதைவிட, நிலவிலிருந்து விண்கலனை அனுப்புவதுதான் சுலபம். அதாவது பூமியின் விடுபடு வேகம், விநாடிக்கு 11 கி.மீ. இன்னும் விளக்கமாக சொல்வதெனில் பூமியிலிருந்து ஒரு பொருள் விண்வெளிக்க பறக்க வேண்டும் எனில், குறைந்தபட்சம் விநாடிக்கு 11 கி.மீ வேகத்தில் உந்தப்பட வேண்டும்.

இதே நிலவில் எனில் மணிக்கு 2.38 கி.மீ வேகத்தில் சென்றால் போதும். அதாவது பூமியை விட குறைவான உந்துவிசையில் நிலவிலிருந்து ராக்கெட் ஏவ முடியும். இதற்கு எரிபொருளும் குறைவாகவே செலவாகும். ஆனால் நிலவுக்கு எரிபொருளை எப்படி எடுத்து செல்வது, அதற்காகத்தான் நீரை விஞ்ஞானிகள் தேடுகின்றனர். நீரில் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் என இரண்டு மூலக்கூறுகள் இருக்கின்றன. இதை மின்னூட்டம் கொண்டு ஹைட்ரஜன் (H₂) மற்றும் ஆக்சிஜன் (O₂) என தனியாக பிரிக்க முடியும்.

இவை இரண்டையும் ராக்கெட்டில் திரவ எரிபொருளாக பயன்படுத்த முடியும். அந்த வகையில் நிலவில் நீரை தேடுவது மிக முக்கியமானதாக இருக்கிறது. இதற்கு நாசாவின் 'லூனார் டிரெயில்பிளேசர்' நிச்சயம் நல்ல பதிலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+