சரியா போச்சு போங்க.. உருமாற்றம் அடைந்த கொரோனா.. கிடுகிடுவென 27 நாடுகளில் பரவியதால் பரபரப்பு
நியூயார்க்: கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகத்தையே புரட்டி போட்டுவிட்டது. தற்போது இதன் பாதிப்பு அவ்வளவு தீவிரமாக இல்லாத நிலையில், இதிலிருந்து உருமாற்றம் அடைந்த 'XEC' எனும் புதிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
சுமார் 70 லட்சத்திற்கும் அதிகமான உயிர்களை பலி கொண்ட கொரோனா தொற்று தற்போது மீண்டும் தீவிரமெடுக்க தொடங்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் சீனாவில் முதன் முதலில் பரவ தொடங்கிய இந்த தொற்று அடுத்தடுத்த ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில், இப்போது வரை 70 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் 6.75 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் காரணமாக இந்த தொற்று மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இப்படி இருக்கையில், தற்போது மீண்டும் தொற்று பரவல் தீவிரமெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள. அதாவது கொரோனா வைரஸிலிருந்து உருமாறிய XEC எனப்படும் புதிய வைரஸ், தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் முதன் முதலில் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்டார்கள். இப்போது அமெரிக்கா, பிரிட்டன் என 27 நாடுகளில் இந்த தொற்று பரவியிருக்கிறது.
இது குறித்து விளக்கிய ஆய்வாளர்கள், "ஓமிக்ரான் துணை வகைகளான KS.1.1 மற்றும் KP.3.3 ஆகியவை ஒன்று சேர்ந்து இந்த புதிய XEC எனும் கொரோனா வைரஸ் உருவாகியுள்ளது. இது ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், போலந்து, நார்வே, லக்சம்பர்க், உக்ரைன், போர்ச்சுகல் மற்றும் சீனா என 27 நாடுகளில் பரவியிருக்கிறது. டென்மார்க், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்தில் இது வேகமாக பரவி வருகிறது" என்று கூறியுள்ளனர்.
குளிர்காலம் தொடங்க இருக்கும் நிலையில், இந்த தொற்று பாதிப்பு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே கொரோனா தொற்றுக்காக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் இந்த தொற்றையும் தடுக்கும் வகையில் இருந்தால், தொற்று பாதிப்பை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இல்லையெனில் புதிய கோவிட் அலையை இந்த வைரஸ் ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளனர். அப்படி நடந்தால் மீண்டும் உலகம் முடங்கும்.
இந்த தொற்று குறித்த எச்சரித்துள்ள ஆய்வாளர்கள், தொற்றுக்கான அறிகுறிகளையும் விளக்கியுள்ளனர். அதாவது, காய்ச்சல், தொண்டை வலி, இருமல், வாசனை உணர்வு இழப்பு, பசியின்மை மற்றும் உடல்வலி ஆகியவை அறிகுறிகளாக இருக்கும். இன்னும் விளக்கமாக சொல்வதெனில், முந்தைய கோவிட் தொற்று பாதிப்பின் போது ஏற்பட்ட அறிகுறிகளே இதற்கும் இருக்கும் என்று கூறியுள்ளனர்.
ஆய்வாளர்களின் இந்த எச்சரிக்கை காரணமாக, அமெரிக்காவில் தனிமனித கோவிட் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகின்றன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications