பாலியல் குற்றம் செய்தேனா?.. அந்த சம்பவம் நடக்கவே இல்லை.. அமெரிக்க அதிபர் வேட்பாளர் பிடன் மறுப்பு
எனக்கு எதிராக பாலியல் புகார் வைக்கப்பட்டுள்ளது, அது முழுக்க முழுக்க பொய்யானது, அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள
நியூயார்க்: எனக்கு எதிராக பாலியல் புகார் வைக்கப்பட்டுள்ளது, அது முழுக்க முழுக்க பொய்யானது, அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அமெரிக்க அதிபர் தேர்தல் தற்போது அந்நாட்டில் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. கொரோனா பரவல் அமெரிக்காவில் தீவிரம் அடைந்து இருந்தாலும், இன்னொரு பக்கம் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அமெரிக்காவில் விரைவில் பெரிய பிரச்சார கூட்டத்தை நடத்த போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் பெரிய சிக்கலை சந்திக்கும் நிலைக்கு உள்ளாகி உள்ளார். அவருக்கு எதிரான பாலியல் புகார் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன பாலியல் புகார்
பொதுவாக அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் நபர்களுக்கு எதிராக பாலியல் புகார் அல்லது நிதி மோசடி புகார்கள் வைக்கப்படுவது வழக்கம். எப்போதோ நடந்த சில விஷயங்கள் திடீர் என்று விஸ்வரூபம் எடுப்பது வழக்கம். அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடனுக்கு எதிராக தாரா ரீட் என்ற பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். 1993ல் நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

பெண் புகார்
1973ல் இருந்து 2009 வரை அமெரிக்காவின் டெல்வார் பகுதியில் செனட் உறுப்பினராக இருந்தவர்தான் ஜோ பிடன். இந்த நிலையில் 1993ல் அந்த பெண் தாரா ரீட் ஜோ பிடன் அலுவலகத்தில் வேலை பார்த்த போது ஜோ பிடன் அவரிடம் தவறாக நடந்து கொண்டார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் இருக்கும் சுவர் ஒன்றில் தன்னை தள்ளி, தன்னுடைய ஆடைக்குள் ஜோ பிடன் கைவிட்டார் என்று அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

சர்ச்சை
இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அந்த பெண் தாரா இந்த புகாரை அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் உறவினர்களும் தற்போது சாட்சி அளிக்க தொடங்கி உள்ளனர். ஜோ பிடனுக்கு எதிராக வைக்கப்பட்டு இருக்கும் இந்த புகார் அந்நாட்டு தேர்தல் முடிவையே மாற்றும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த பாலியல் புகார் தொடர்பாக தற்போது ஜோ பிடன் விளக்கம் அளித்துள்ளார்.

விளக்கம் அளித்தார்
ஜோ பிடன் அளித்த பேட்டியில், நான் என் வாழ்நாள் முழுக்க நான் பல பெண்கள் உடன் பணியாற்றி இருக்கிறேன். ஒரு அரசியல்வாதியாக பெண்களுக்கு எப்படி அடிப்படை சுதந்திரத்தை உருவாக்குவது, அவர்களின் பணிகளை எளிமையாக்குவது, அவர்களுக்கு சமமான ஊதியம் அளிப்பது, அவர்களுக்கு எப்படி பாதுகாப்பான பாலியல் தொல்லை இல்லாத சூழ்நிலையை உருவாக்குவது என்று ஆலோசனை செய்து இருக்கிறேன்.

சிறப்பாக செயல்படுவேன்
இதற்கான முயற்சிகளை எடுத்து இருக்கிறேன். பெண்களின் உரிமை என்ன என்பது குறித்த நான் அறிவேன். பெண்களின் உரிமையை நிலைநாட்டுவதில் ஒரு அதிபராக நான் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவேன். பெண்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவும், அவர்களை பின் தொடரவும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கவும், பெண்களின் குரலை உலகிற்கு எடுத்துரைக்கவும் நான் கண்டிப்பாக உழைப்பேன்.

முழுக்க முழுக்க பொய்
எனக்கு எதிராக பாலியல் புகார் வைக்கப்பட்டுள்ளது. அது முழுக்க முழுக்க பொய்யானது. அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. உண்மைதான் முக்கியம்.நான் உங்களிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அந்த பெண் கூறும் விஷயங்கள் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. இதை நாம் கவனமாக கருத்தில் கொண்டாலே, ஆராய்ந்து பார்த்தாலே இதில் எவ்வளவு பொய் இருக்கிறது என்பது தெரிந்துவிடும்.

அப்படி நடக்கவில்லை
மக்கள் இந்த ஆராய்ந்து பார்த்தாலே அப்படி ஒரு விஷயம் நடக்கவில்லை என்பது தெரிந்துவிடும். அப்படி விஷயம் நடந்து இருந்தால் அந்த பெண் புகார் அளித்து இருப்பார். அல்லது செனட் அலுவலகத்தில் புகார் அளித்து இருப்பார். அந்த வருட செனட் அலுவலக கோப்புகள் எல்லாம் பொதுவில்தான் மக்களுக்காக டெல்வேர் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை எடுத்து பார்த்துக்கொள்ளலாம். உங்களுக்கே உண்மை தெரியும் என்று பிடன் தெரிவித்துள்ளார்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications