தனித்து விடப்படுகிறதா "ரஷ்யா".. இந்தியாவிடம் ஓபனாகவே உதவி கேட்குதே அமெரிக்கா.. சாத்தியமாகுமா?
சோவியத் யூனியன் செய்த வேலையை தற்போது நேட்டோ கையில் எடுத்து முன்னாள் சோவியத் நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துவருகிறது.
நியூயார்க்: சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்த அமெரிக்க முயன்று வரும் நிலையில், இந்திய ராணுவத்துடனான அமெரிக்காவின் உறவு குறித்து பென்டகன் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் எதிராக அமெரிக்கா உலக நாடுகளை அணிதிரட்டி வருகிறது. இதற்கு உக்ரைன் போர் ஒரு முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும், அதற்கு முந்தைய காலங்களிலிருந்தே ரஷ்யாவுடன் அமெரிக்கா மோதல் போக்கைதான் கடைபிடித்து வருகிறது. நேட்டோ படைகளின் விரிவாக்கம் இதற்கான உதாரணமாக சொல்லலாம். சோவியத் யூனியன் இருந்த காலத்தில் அதனுடன் பல சிறிய நாடுகள் இணைந்தன.
இதனை தடுக்கும் நோக்கில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டதுதான் நேட்டோ. இப்படி இருக்கையில், தற்போது சோவியத் யூனியனே உடைந்துவிட்ட போதும் கூட நேட்டோ கலைக்கப்படாமல் இன்னமும் இயங்கி வருகிறது. மட்டுமல்லாது சோவியத் யூனியன் செய்த வேலையை தற்போது நேட்டோ கையில் எடுத்து முன்னாள் சோவியத் நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துவருகிறது. இப்படியாக நேட்டோவில் உக்ரைன் இணைய கையெழுத்து போட்டதையடுத்துதான் ரஷ்ய-உக்ரைன் போர் மூண்டது.

ஆயுத உதவி
போரில் உக்ரைனுக்கு இதுவரை ஏராளமான ஆயுத உதவிகளை அமெரிக்கா செய்து வரும் நிலையில் மறுபுறம் இப்போரை காணரம் காட்டி ரஷ்யாவை தனிமைப்படுத்தும் வேலையையும் செய்து வருகிறது. இதுவரை சர்வதேச பிரச்னையாக இருந்த விவகாரம் தற்போது இந்தியாவுக்கான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. காரணம், உக்ரைன் போர் விவகாரத்தில் நடுநிலை வகித்த இந்தியாவை அமெரிக்கா தனது பக்கம் இழுக்க முயற்சிப்பதுதான். நேற்று இந்த போர் விவகாரம் குறித்து ஐநாவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்க இந்தியாவும் சீனாவும் வாக்களிக்காமல் விலகிக்கொண்டது.

எதிர்பார்ப்பு
சூழல் இவ்வாறு இருக்கையில் தற்போது அமெரிக்கா பாதுகாப்பு துறையின் உயர்மட்டமான பெண்டகன் இந்தியாவுடனான உறவு குறித்து சில கருத்துகளை தற்போது கூறியுள்ளது. அதாவது பென்டகன் செய்தித் தொடர்பாளர், விமானப்படை பிரிக் ஜெனரல் பாட் ரைடர் கூறுகையில், "அமெரிக்காவும் இந்தியாவும் தொடர்ந்து நட்பாக பழகி வருகிறோம். இந்திய ராணுவத்துடன் எங்களது உறவை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள நாங்கள் முயன்று வருகிறோம்" என கூறியுள்ளார். என்னதான் அமெரிக்காவுடன் இந்தியா நட்பாக இருந்தாலும், ரஷ்யா அளவுக்கு அமெரிக்காவை இந்தியா நம்பியது கிடையாது.

உறவு
ஏனெனில் ரஷ்யா-இந்தியா உறவு என்பது நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது. நமக்கு ரஷ்யா செய்த உதவிகள் இன்றியமையாதவை. ஐந்தாண்டு திட்டம் தொடங்கி விண்வெளி பயணம் வரை நாம் ரஷ்யாவிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியாவிலிருந்து முதன் முதலில் விண்வெளிக்கு சென்றவர் ரகேஷ் ஷர்மா. இவரை ரஷ்யாதான் தனது சொந்த செலவில் விண்வெளிக்கு அனுப்பியது. அப்படி தொடங்கிய இந்த நட்பு சமீபத்தில் S-400 வகை ஏவுகணையை வாங்கியது வரை தொடர்ந்துக்கொண்டிருக்கிறது.

வர்த்தகம்
இந்த நட்பு அமெரிக்காவின் கண்களை உறுத்திக்கொண்டிருக்கிறது. எனவே இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களை அமெரிக்கா அதிகரிகத்து வருகிறது. 1997ம் ஆண்டு அமெரிக்கா-இந்தியா வர்த்தகம் குறைவாக இருந்த நிலையில் இது தற்போது ரூ.16 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications