ராணுவத்தை விட மாட்டோம்.. டிரம்பையே எதிர்த்த அமெரிக்க ராணுவ தலைமையகம்.. பென்டகன் முடிவால் பரபரப்பு!
அமெரிக்க அதிபர் டிரம்பை அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் முதல்முறையாக எதிர்க்க தொடங்கி உள்ளது.
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்பை அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் முதல்முறையாக எதிர்க்க தொடங்கி உள்ளது.
Recommended Video
கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு மரணம் காரணமாக அமெரிக்காவில் இப்போதும் போராட்டம் நடந்து வருகிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு தீவிரமாக போராட்டங்கள் நடந்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த 24ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் போலீசாரால் கொல்லப்பட்டார்.
அவரை போலீசார் கைது செய்து அழைத்து செல்லும் போது கழுத்தை நெரித்தலில் சம்பவ இடத்திலேயே ஜார்ஜ் பலியானார். போலீஸ் செய்த இந்த கொடூரத்திற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. மிக கடுமையான போராட்டங்கள் நடந்து வருகிறது.

ராணுவம் திட்டம்
இதனால் அங்கு ஏற்பட்ட போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு ராணுவம் தற்போது வரை களமிறக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் விதிப்படி அமெரிக்க மண்ணுக்குள் ராணுவத்தை களமிறக்க முடியாது. Insurrection Act என்ற அவசர சட்டத்தை அமலுக்கு கொண்டு வராத வகையில் அந்நாட்டு மண்ணில் ராணுவத்தை களமிறக்க முடியாது.

டிரம்ப் முடிவு என்ன
இந்த நிலையில் அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் ராணுவத்தை களமிறக்க டிரம்ப் முடிவு செய்து இருந்தார். Insurrection Act சட்டத்தையே கையில் எடுத்து, வாஷிங்டன் உள்ளே ராணுவத்தை களமிறக்க டிரம்ப் முடிவு செய்து இருந்தார். இதனால் 700 வீரர்கள் விமானம் மூலம் வேகமாக வாஷிங்டன் வந்தனர். விமானப்படை மூலம் இவர்கள் வாஷிங்டன் உள்ளே களமிறங்கினர்.

பென்டகன் உள்ளது
ஆனால் இவர்கள் களமிறங்கிய 30 நிமிடத்தில் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டார்கள். வாஷிங்டனில் இருந்து வேகமாக இவர்கள் திருப்பி வாஷிங்டனுக்கு வெளியே இருக்கும் ராணுவ மையத்திற்கு அனுப்பப்பட்டனர். டிரம்பின் இந்த திடீர் பல்டிக்கு பின் அந்நாட்டு ராணுவ தலைமையகம் பென்டகன் இருப்பதாக கூறுகிறார்கள். ராணுவத்தை களமிறக்குவது தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை அந்நாட்டு ராணுவ தலைமையகம் பென்டகன் கடுமையாக எதிர்த்து உள்ளது.

கடும் எதிர்ப்பு
அமெரிக்க மண்ணில் ராணுவத்தை கொண்டு வர கூடாது என்று பென்டகன் மிக உறுதியாக கூறி உள்ளது. பென்டகன் தலைவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் இது தொடர்பாக நேரடியாக எதிர்த்து இருக்கிறார். என்ன நடந்தாலும் ராணுவத்தை உள்ளே கொண்டு வர கூடாது என்று கூறியுள்ளார். முதல்முறை பென்டகன் இப்படி நேரடியாக டிரம்பை எதிர்த்து உள்ளது. இது டிரம்பை நிலைகுலைய வைத்துள்ளது.

கடும் எதிர்ப்பு
Insurrection Act சட்டம் மூலம் யாருடைய அனுமதியும் இன்றி அதிபர் ராணுவத்தை நாட்டிற்குள் கொண்டு வர முடியும். ஆனால் டிரம்ப் அந்த சட்டத்தை பயன்படுத்த முயன்றும் கூட முடியாமல் போய் உள்ளது. அதோடு டிரம்பை எப்போதும் சப்போர்ட் செய்யும் மார்க் எஸ்பர் கூட அவரை எதிர்த்துள்ளார். அந்நாட்டு ராணுவ தலைமையகமே அதிபர் டிரம்பின் பேச்சை கேட்கவில்லை. அதோடு அவரை எதிர்த்து உள்ளது. அமெரிக்காவில் நாளுக்கு நாள் நிலைமை இப்படி மோசமாகி வருவது அதிர்ச்சி அளிக்க தொடங்கி உள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications