அமெரிக்காவில் கால் வைத்த மோடி! டிரம்ப் உடன் பேச போகும் 2 பெரிய விஷயம்! சிவக்கும் வெள்ளை மாளிகை?
நியூயார்க்: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாகி அமெரிக்க சென்றுள்ளார். அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி ஜாயின்ட் ஆண்ட்ரூஸ் தளத்தில் வந்திறங்கியபோது புலம்பெயர்ந்த இந்தியர்கள் அவருக்கு வரவேற்பை அளித்தனர்.
அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவி ஏற்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்கவில்லை. இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில்.. ஏன் இந்த முறை மோடி பெயரை கூட எங்கும் டிரம்ப் சொல்லவில்லை.. அதோடு டிரம்ப் ஏன் மோடியை அழைக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியர்கள் பலர் அவருக்கு ஆதரவாக இருந்தும் மோடி பெயரை எங்கும் டிரம்ப் பேசவில்லை. மோடிக்கு ஏன் அழைப்பு போகவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நெருக்கம் போய்விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதோடு மோடி அனுப்பிய வாழ்த்து கடிதத்திற்கு டிரம்ப் நன்றி தெரிவித்து போஸ்ட் எதுவும் போடவில்லை. அமெரிக்காவின் வரி விதிப்பு, இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது பற்றி மோடி இந்த பயணத்தில் பேசலாம் என்று கூறப்படுகிறது.
1. வரி விதிப்பு
பரஸ்பர வரிகளை விதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தால் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள்தான் அதிக ஆபத்துகளை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் மார்கன் ஸ்டான்லி முதல் நோமுரா ஹோல்டிங்ஸ் இன்க் ஆகியோர் எச்சரித்து உள்ளனர்.
இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் அமெரிக்க மீது அதிக வரிகளை விதிக்கின்றன. 10-25 சதவிகிதம் வரை பல பொருட்கள் மீது இரண்டு நாடுகளும் அமெரிக்கா மீது விதிக்கின்றன. இப்போது பரஸ்பர விதிகள் காரணமாக இதே அளவிலான விதிகளை இந்தியா , தாய்லாந்து மீது அமெரிக்கா விதிக்கும். இப்போது 10%க்கும் கீழ்தான் இந்தியா , தாய்லாந்து பொருட்கள் மீது அமெரிக்கா விதிக்கிறது. அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா விதிக்கும் சராசரி விகிதம், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியை விட 10 சதவீத புள்ளிகளுக்கும் அதிகம் ஆகும்.
டிரம்ப்பின் விதி காரணமாக இந்தியா , தாய்லாந்து பொருட்கள் விற்பனை குறையும் . இதனால் இப்போதுதான் ஏற்றுமதியில் வேகம் எடுக்கும் இரண்டு நாடுகளும் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும். நாங்கள் மற்ற நாடுகளை சமமாக நடத்த விரும்புகிறோம், என்று டிரம்ப் எச்சரித்து உள்ளார். இறக்குமதி - ஏற்றுமதி வரியில் டிரம்ப் கண்டிப்பானவர். இந்தியா இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.. டிரம்ப் வரியை ஏற்றுவார். இதனால் இந்தியாவில் பொருட்கள் உயரலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட வரி விதிக்கப்படும் நாடுகளின் முதல் லிஸ்டில் இந்தியாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
நாடு கடத்தல்
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதற்காக "முதல் பேட்ச்" விமானம் இந்தியாவிற்கு வந்துள்ளது. இனியும் பல விமானங்கள் இந்தியாவிற்கு இப்படி வரலாம். ஆனால் இந்தியா இதுவரை இதில் நேரடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்திய அரசு அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை நேரடியாக இதுவரை எதிர்க்கவில்லை.
ஒரு நாட்டின் ராணுவ விமான நாடு கடத்தும் மக்களை கொண்டு வருவதை அந்த நாடு எதிர்க்க வேண்டும். ஆனால் இந்தியா இதை இதுவரை எதிர்க்கவில்லை. அமெரிக்க ராணுவம் விமானம் இந்தியாவிற்குள் அனுமதியோடுதான் வந்துள்ளது என்றாலும் கூட இந்தியர்களை நாடு கடத்தி கொண்டு வருவது மிகப்பெரிய நிகழ்வு.. இதை இந்திய வெளியுறவுத்துறை இதுவரை எதிர்க்கவில்லை.
பிரதமர் மோடி இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இந்தியா ஒன்றும் வலிமை இல்லாத நாடு கிடையாது. சர்வதேச அரசியலில் நல்ல பவர் கொண்ட நாடு. அப்படிப்பட்ட இந்தியா இந்த நடவடிக்கையை எதிர்க்க வேண்டும் என்று இல்லை.. குறைந்த பட்சம் இதில் ஏதாவது கருத்து சொல்லி இருக்கலாம். ஆனால் இதுவரை இந்தியா சார்பாக அதிரடி எதிர்ப்பு அல்லது கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இதை பற்றி டிரம்ப் உடன் மோடி பேசும் வாய்ப்புகள் உள்ளன.
-
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'












Click it and Unblock the Notifications