ஜி 20 மாநாட்டில்.. அடித்து ஆடிய மோடி.. ஒரே அடியாக சொன்ன 6 முக்கியமான ஐடியா.. மாஸ்டர் பிளான்!
நியூயார்க்: ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி ஆறு புதிய திட்டங்களை முன்வைத்துள்ளார். உலகளாவிய வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இந்த திட்டங்களை அவர் முன் வைத்துள்ளார்.
1. உலகளாவிய பாரம்பரிய அறிவு களஞ்சியம் ஒன்றை உருவாக்க வேண்டும், என்று பிரதமர் மோடி கூறினார்.
2. ஆப்பிரிக்க நாடுகளில் மக்களின் திறனை உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில் ஆப்பிரிக்காவில் ஒரு மில்லியன் சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதே எங்கள் கூட்டு நோக்கம். இந்த பயிற்சியாளர்கள், பல மில்லியன் திறமையான இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். இந்த முன்முயற்சி பல மடங்கு விளைவுகளை ஏற்படுத்தும். இது உள்ளூர் திறனை வளர்த்து, ஆப்பிரிக்காவின் நீண்டகால வளர்ச்சியை பலப்படுத்தும், என்று பிரதமர் மோடி கூறினார்.

சுகாதார அவசரநிலையை சமாளிக்க குழு அவசியம்
3. உலகளாவிய அளவில் சுகாதார பிரச்சனைகள் வரும் நேரங்களில் அதற்கான பதிலளிப்பு குழு அமைத்தல் வேண்டும். சுகாதார அவசரநிலைகளின்போது வலுவான பதிலளிப்பை வழங்குவதற்கு உதவும் ஜி20 உலகளாவிய சுகாதாரப் பதிலளிப்பு குழுவை அமைக்குமாறும் பிரதமர் மோடி முன்மொழிந்தார். சுகாதார அவசரநிலைகள் மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள நாம் ஒன்றாகச் செயல்படும்போது வலிமையானவர்களாக இருப்போம். எந்தவொரு உலகளாவிய சுகாதார நெருக்கடி அல்லது இயற்கை பேரழிவு ஏற்பட்டாலும் விரைவாகப் பணியமர்த்தத் தயாராக இருக்கும் ஜி20 நாடுகளின் பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுக்களை உருவாக்குவதே நமது முயற்சியாக இருக்க வேண்டும், என்று பிரதமர் மோடி கூறினார்.
போதைப்பொருள் தடுப்பு பணிகள் வேண்டும்
4. போதைப்பொருள்-பயங்கரவாத வலைப்பின்னலை எதிர்கொள்ள புதிய திட்டங்களை வகுத்தல் வேண்டும். போதைப்பொருள் கடத்தலை எதிர்கொள்ளவும், ஃபெண்டானில் போன்ற அபாயகரமான பொருட்களின் பரவலைத் தடுக்கவும் போதைப்பொருள்-பயங்கரவாத வலைப்பின்னலை எதிர்கொள்ள ஒரு ஜி20 முன்முயற்சியையும் அவர் பரிந்துரைத்தார். இந்த முன்முயற்சியின் கீழ், நிதி, நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கருவிகளை ஒன்றிணைக்க முடியும். அப்போதுதான் போதைப்பொருள்-பயங்கரவாத பொருளாதாரத்தை பலவீனப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி கூறினார்.
5. திறந்த செயற்கைக்கோள் தரவுப் பங்களிப்பு திட்டத்தை உருவாக்குவதல் வேண்டும். திறந்த செயற்கைக்கோள் தரவுப் பங்களிப்பைப் பற்றிப் பேசிய பிரதமர், ஜி20 விண்வெளி செயற்கைக்கோள் தரவுகளை வளரும் நாடுகளுக்கு விவசாயம் மற்றும் மீன்வளம் போன்ற நடவடிக்கைகளுக்கும், அத்துடன் பேரிடர் மேலாண்மைக்கும் கிடைக்கச் செய்யலாம் என்று குறிப்பிட்டார்.
6. முக்கிய கனிமங்களை பகிர்தல், இதற்கான புதிய முன்முயற்சியை உருவாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். மறுசுழற்சி, நகர்ப்புற சுரங்கம், இரண்டாம் நிலை பேட்டரி திட்டங்கள் மற்றும் பிற புதுமைகளை வளர்ப்பதற்காக ஒரு முக்கிய கனிமச் சுழற்சி முன்முயற்சியையும் பிரதமர் மோடி முன்மொழிந்தார். இந்த முன்முயற்சியின் நோக்கம் விநியோகச் சங்கிலி பாதுகாப்பை பலப்படுத்துவதும், தூய்மையான வளர்ச்சிப் பாதைகளை உருவாக்குவதும் ஆகும்.
இந்த முயற்சிகள் உலகளாவிய வளர்ச்சியை உறுதிசெய்ய உதவும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த முதல் அமர்வில் பேசிய அவர், இந்தியாவின் நாகரிக மதிப்புகள் முன்னேற்றத்திற்கான வழியை வழங்குகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications