விவேக் ராமசாமிக்கு பேரதிர்ச்சி! அமைச்சரவையில் இடமில்லை! டிரம்ப் எடுத்த முடிவு? உள்ளே வரும் வேறு தலை!
நியூயார்க்: ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில் தனது அமைச்சரவையில் செயல்பட போகும் செயலாளர்கள் பெயர்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார். அமெரிக்காவில் இந்தியா, யு.கே போன்ற ஆட்சி முறை கிடையாது. இதனால் அமைச்சர் பதவி என்ற பெயரில் பொறுப்புகள் வழங்கப்படாது. மாறாக அதே மத்திய அமைச்சரின் அதே பொறுப்புகளோடு அதிகாரத்தோடு செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்கள் அதிபர் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு.. செனட் தரும் அடையாள ஒப்புதலுடன் செயலாளர்கள் ஆவார்கள்.
அந்த வகையில் அமெரிக்காவில் மிக முக்கிய அமைச்சரவை பொறுப்பான வெளியுறவுத்துறை செயலாளர் பதவிக்கு டிரம்ப் தனக்கு நெருக்கமான செனட்டர் மார்கோ ரூபியோவை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியை கொண்டு வர டிரம்ப் இருப்பதாக செய்திகள் வந்தன.

ஆனால் விவேக் ராமசாமியை புறக்கணித்து, செனட்டர் மார்கோ ரூபியோவை தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்சிக்கு.. வெளியுறவுத்துறை செயலாளராக தேர்வு செய்ய டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டிரம்பின் 2024 பிரச்சாரத்தின் போது அதில் முக்கிய பங்கு வகித்தவர் ரூபியோ. இவரின் தேர்வு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஏனென்றால் அமெரிக்க உயர்மட்ட தூதர் பதவியை வகிக்கும் முதல் லத்தீன் அமெரிக்கர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் லத்தீன் அமெரிக்கர்கள் அதிகம். அதில் சிலர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். இவர்களை வெளியேற்ற போவதாக டிரம்ப் கூறி வருகிறார். இப்படி இருந்தும் கூட லத்தீன் அமெரிக்கர்கள் வாக்கு வெகுவாக டிரம்பிற்கு வந்தது. கமலா ஹாரிஸை விட லத்தீன் அமெரிக்கர்கள் வாக்கு டிரம்பிற்கு அதிகம் வந்தது.
இதற்கு செனட்டர் மார்கோ ரூபியோ டிரம்பிற்காக செய்த பிரச்சாரம் முக்கிய காரணமாக அமைந்தது. ஏற்கனவே சட்ட விரோதமாக் குடியேறியவர்களை வெளியேற்ற டிரம்ப் முனைப்பு காட்டி வருகிறார். அதன்படி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ஜே. டிரம்ப், தாமஸ் டி. ஹோமனை நாட்டின் எல்லைகள் கடல் மற்றும் வான்வெளி எல்லை பாதுகாப்புக்கு பொறுப்பான border czar துறைக்கு தலைவராக நியமிக்க உள்ளார். அதாவது அமெரிக்காவில் அத்துமீறி.. அனுமதியின்றி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவதற்க்கும்.. புதிதாக மக்கள் ஊடுருவதை தடுக்கவும் தாமஸ் டி. ஹோமனை டிரம்ப் உள்ளே கொண்டு உள்ளார். டிரம்ப் வென்ற நிலையில் விரைவில் அங்கே முறைகேடாக குடியேறி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் அவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர்.. பொறுப்பு லத்தீன் அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்த பொறுப்பிற்கு வருவார் என்று கணிக்கப்பட்ட விவேக் ராமசாமி அதற்கு தேர்வு செய்யப்படவில்லை. டிரம்பிற்கு நெருக்கமாக இருந்தும்.. டிரம்ப்பே.. எனக்கு அவரை பிடித்து இருக்கிறது என்று விவேக் ராமசாமி பற்றி கூறியும் கூட.. அவருக்கு இந்த பதவி வழங்கப்படவில்லை.
ஆனால் விவேக் ராமசாமிக்கு பாதுகாப்பு துறையில் வேறு முக்கிய பவர்புல் பதவிகள் வழங்கப்படலாம் என்கிறார்கள். இல்லையென்றால் இப்போது ஜேடி வேன்ஸ் துணை அதிபர் ஆகிறார். இதனால் ஒஹையோ மாகாண செனட் பதவி காலியாகிறது. இந்த பதவிக்கு விவேக் ராமசாமி முயல்வார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications