சிறையில் உயிரிழந்த பிக்பாக்கெட் திருடன்! 128 ஆண்டுகளுக்கு பிறகு உடலை புதைத்த போலீஸ்! காரணம் இதுதான்
நியூயார்க்: அமெரிக்காவில் சுமார் 128 ஆண்டுகளாக புதைக்கப்படாமல் பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டு வந்த சிறை கைதியின் உடல் தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பிலடெல்பியாவின் ரீடிங் பகுதியில் கடந்த 1895ம் ஆண்டு இளைஞர் ஒருவர் பிக்பாக்கெட் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் சிறையில் இருந்தபோது சிறுநீரக தொற்று ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர் விடுவிக்கப்படாமல் சிறையிலேயே வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறார். கடைசியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது பின்புலத்தை விசாரித்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது, இவருடைய பெயரை தவிர வேறு எதுவும் காவல்துறைக்கு தெரியவில்லை. இதில் சோகம் என்னவெனில் இவர் சிறை துறை அதிகாரிகளுக்கு கொடுத்த பெயரும் கூட உண்மையானது கிடையாது.

எனவே இவரது உண்மையான அட்ரஸை போலீசார் தேட தொடங்கினர். ஆனால் தற்போது வரை அவருடைய உண்மையான முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே உடலை யாரிடம் ஒப்படைப்பது என தெரியாமல் இருந்த காவல்துறையினர் அதை எம்பாமிங் செய்து பதப்படுத்தி வைத்திருக்கின்றனர். காலம் வேகமாக நகர்ந்திருக்கிறது. இதற்கிடையில் சில புலனாய்வு அதிகாரிகள் உயிரிழந்த சிறை கைதி தொடர்பான சில தகவல்களை கண்டுபிடித்தனர்.
அதாவது இவர் ஐரிஷ் வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், இவரது குடும்பம் பணக்கார குடும்பம் எனவும் கண்டுபிடித்தனர். நியூயார்க்கில் இவர்கள் வாழ்ந்து வந்தபோது சிறிய பிக்பாக்கெட் திருட்டில் இவர் சிக்கிக்கொண்டார். இவரது குடும்பம் பணக்கார குடும்பம் என்பதால் இந்த விஷயம் தந்தைக்கு தெரிந்தால் அவமானமாகிவிடும் என்பதால் தனது உண்மையான பெயருக்கு பதில் போலியான பெயரையும், முகவரியையும் கொடுத்திருக்கிறார். இருப்பினும் எப்போதாவது இவரது உறவினர்கள் வந்து உடலை பெற்று செல்வார்கள் என்கிற நம்பிக்கையில் காவல்துறையினர் ரீடிங் பகுதியில் உள்ள ஆமன் தேவாலயத்தில் வைத்திருந்தார்கள்.
பல ஆண்டுகள் ஆகியும் யாரும் வராததால் இந்த உடலை பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்ட தொடங்கினர். இப்படியாக இவரது உடல் பிரபலமடைந்தது. இந்த உடலுக்கு காவல்துறையினர் ஸ்டோன்மேன் வில்லி என்றும் பெயர் சூட்டினர். ஒரு கட்டத்தில் இவரை கைது செய்த காவல்துறையினர் கூட உயிரிழந்துவிட ஸ்டோன்மேன் வில்லியின் உடலை மற்றும் யாரும் பெற்றுக்கொள்ள வரவில்லை. இப்படியே 128 ஆண்டுகள் கடந்த நிலையில், இதன் பின்னரும் இவரது உடலை வைத்திருப்பதில் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்த காவல்துறையினர் தற்போது பாரெஸ்ட் ஹில்ஸ் மெமோரியல் பூங்காவில் உள்ள கல்லறையில் வில்லியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 128 ஆண்டுகள் கழித்து சிறை கைதி ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவில் பேசுபொருளாகியுள்ளது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications