நான் சொல்வதை கேளுங்கள்..இல்லையென்றால் நீங்கள் சாக போகிறீர்கள்..டிரம்ப் விடுத்த மிகப்பெரிய எச்சரிக்கை
நியூயார்க்: ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது உள்ளது. இந்த நிலையில்தான் ஹமாஸ் படைகளுக்கு டிரம்ப் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பணயக்கைதிகள் அனைவரையும் இப்போது விடுவிக்கவும், பின்னர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.. இப்போதே விடுவியுங்கள்.. நான் சொல்வதை கேளுங்கள்.. இல்லையென்றால் நீங்கள் சாக போகிறீர்கள்.. நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் கதை முடிந்துவிட்டது என்று அர்த்தம் என, டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

ஹமாஸ் டிரம்ப் மோதல்
முதல் கட்டமாக 42 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. 33 இஸ்ரேல் பிணை கைதிகள் இதன் மூலம் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளனர். மொத்தமாக 96 பேர் ஹமாஸ் மூலம் இஸ்ரேலில் பிடிக்கப்பட்டனர். இதில் 34 பேர்
பலியாகிவிட்ட நிலையில் அடுத்த சில நாட்களில் 33 பேர் வரை முதல் கட்டமாக விடுவிக்கப்படுவார்கள்.
ஆனால் மீதம் உள்ள பிணைக்கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் நரகமே உங்கள் மீது இறங்கும் என்று ஹமாஸுக்கு டிரம்ப் நேற்று எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு பதிலடி தந்த ஹமாஸ்.. உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் அடிபணிய முடியாது. நரகம் பூமிக்கு வந்தால் வரட்டும். உங்கள் மிரட்டலை நாங்கள் ஏற்க மாட்டோம். அதற்கு அடிபணிய மாட்டோம் என்று ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அக்டோபர் 7, 2023 தாக்குதலின் போது இஸ்ரேலில் இருந்து கைப்பற்றப்பட்ட 94 பணயக்கைதிகளை ஹமாஸ் மற்றும் அவர்களின் இணை அமைப்புகள் இன்னும் சிறையில் வைத்திருக்கிறார்கள் என்று இஸ்ரேலிய அரசாங்கம் நம்புகிறது, அவர்களில் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர். இதில்தான் 33 பேர் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
டிரம்ப் எச்சரிக்கை:
ஏற்கனவே மத்திய கிழக்கில் மிகப்பெரிய நரகத்தையே கொண்டு வர நான் தயார்.. இதற்கான காலக்கெடு தொடங்கி உள்ளது. அதற்குள் ஹமாஸ் அமெரிக்காவிற்கு அடிபணிய வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், நேட்டோ பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், மத்திய கிழக்கு நாடுகளை நரகமாக மாற்றவும் தயார்.. அங்கே நரகத்தை இறக்கவும் நான் தயார் என்று எச்சரித்து உள்ளார். .
அமெரிக்கா பணயக்கைதிகளை.. நேட்டோவின் பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. நான் அதிபராக முன் இது நடக்க வேண்டும். அதற்கு பின் பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பே இல்லை. நான் அதிபர் ஆன பின் நடவடிக்கை மட்டுமே எடுப்பேன்.. ஹமாஸ் அடிபணிய வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு அது நல்லதல்ல.. ஏன் யாருக்குமே அது நல்லதல்ல..
அவ்வளவுதான் நான் சொல்வேன். அவர்களுக்கு ஏற்கனவே போதுமான நேரம் கொடுத்துவிட்டேன். இனியும் நேரம் கொடுக்க முடியாது. எனக்கு இஸ்ரேலில் இருந்து தினமும் கால் வருகிறது. இந்த பிணைக்கைதிகள் விவகாரம் முக்கியமானது.
என்னிடம் அவர்களின் குடும்பத்தினர் வந்து கதறுகின்றனர். கண்ணீர் வடிக்கின்றனர்.
இனியும் என்னால் அதை கேட்டுக்கொண்டு இருக்க முடியாது. அந்த தாய்மார்களுக்கு அவர்களின் மகன்களை திருப்பி கொடுக்க வேண்டியது என் கடமை. இதற்கான காலக்கெடு தொடங்கிவிட்டது. நான் பதவி ஏற்க உள்ள நாளுக்கு முன் ஹமாஸ் இதை செய்ய வேண்டும், என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார் . ஏற்கனவே பாலஸ்தீனத்தில் விடுதலைக்காக போராடி வரும் ஹமாஸ் குழு அமெரிக்காவிற்கு எதிராக அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது. அதன்படி அமெரிக்காவின் மேற்பார்வையில் இஸ்ரேல் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்க முடியாது என்று ஹமாஸ் அறிவித்து உள்ளது.
அதாவது போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கையின் பெயரில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம். போர் நிறுத்தும் வாய்ப்பே இல்லை. ஹமாஸ் சிறைபிடித்து உள்ள இஸ்ரேல் படைகளை விடுதலை செய்தால்.. போர் நிறுத்தம் செய்வோம் என அமெரிக்காவின் வாக்குறுதியின் அடிப்படையில் இஸ்ரேல் பேச்சுவார்த்தை செய்தது.
ஆனால் இந்த பேச்சுவார்த்தை முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்ரேல் மீது கண்டிப்பாக போர் தொடுப்போம் என்று ஹமாஸ் தெரிவித்து உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications