நடிகையுடன் உல்லாசம்.. சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்.. டொனால்ட் டிரம்புக்கான வாய்ப்பு இது ஒன்றுதானாம்
நியூயார்க்: பிரபல ஆபாச பட நடிகையுடன் தனக்கு இருந்த தொடர்பை மறைக்க அந்த நடிகைக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அவர் எப்படி கைது செய்யப்படுவார்? அவருக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். ஆனால், இதற்கு முன்னர் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கு தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார். அப்போதுதான் இவருக்கும் ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த சமயத்தில், டிரம்ப் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட வைத்ததாக ஸ்டோர்மி டேனியல்ஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக தான் சார்ந்த குடியரசுக் கட்சியின் பிரசார நிதியிலிருந்து ரூ.1 கோடியை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு டிரம்ப் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்குதான் தற்போது பூதாகரமாக வெடித்து கிளம்பியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல்முறையாகும். இப்படி இருக்கையில் இந்த குற்றச்சாட்டு அமெரிக்கா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பேசு பொருளாகியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் டிரம்ப் கைது செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

சிக்கல்கள்
இந்நிலையில் டிரம்ப் கைது செய்யப்பட்டால் என்ன ஆகும்? என்று பல்வேறு தரப்பினர் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்த வழக்கை பொறுத்தவரை டிரம்ப் ஒரு அப்பாவி என்று அவரது வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர். இருந்த போதிலும் எதிர் தரப்பினரின் வாதம் வலுவானதாகவும் ஆதாரப்பூர்வமாகவும் இருப்பதால் அடுத்த வாரத்தில் டிரம்ப் கைது செய்யப்படாலம். இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. முதல் சிக்கல் டிரம்புக்கு தற்பொது வரை அந்நாட்டின் உளவுத்துறை வேல செய்துக்கொண்டிருக்கிறது. டிரம்ப் மட்டுமல்லாது எல்லா முன்னாள் அமெரிக்க அதிபர்களுக்கும் அந்நாட்டு உளவுதுறை/ரகசிய சேவை அதிகரிகள் வேலை செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

தப்பிக் வாய்ப்பு
ஒருவேலை கைது நடவடிக்கை குறித்து இவர்கள் மூலம் டிரம்புக்கு முன்கூட்டியே தெரிய வந்தால் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடவும் வாய்ப்புகள் அதிகம். இரண்டாவது சாவல் கைது நடவடிக்கைதான். ஒரு முன்னாள் அதிபரை கைவிலங்கு போட்டு ரோட்டில் இழுத்து வர முடியாது. அது அந்நாட்டின் பெயரை டேமேஜ் செய்வதை போல ஆகிவிடும். எனவே டிரம்ப் தானாக முன்வந்து சரணடைய வேண்டும். ஆனால் தற்போது இருக்கும் சூழலில் அவர் தானாக முன்வந்து சரணடையும் மனோ நிலையில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இது காவல்துறையினர் பக்கம் உள்ள சவால்கள். அதேபோல டிரம்ப் பக்கமும் சில சவால்கள் இருக்கின்றன.

ஜாமீன்
முதல் சவால் இந்த வழக்கிலிருந்து ஜாமீன் கிடைப்பது அரிது. ஜாமீன் கிடைக்க வேண்டும் எனில் இவர் தானாக சென்று சரணடைய வேண்டும். அது கட்சிக்கும், தனக்கும் பெரிய இழுக்கு என டிரம்ப் கருதுகிறார். ஏனெனில் அடுத்து வருவுள்ள அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் களமிறங்க முடிவெடுத்துள்ளார். அப்படி இருக்கும்போது நீதிமன்றத்தில் சரணடைவது தனது வாக்கு வங்கியை பெரும் அளவுக்கு சரித்துவிடும் என டிரம்ப் யோசித்து வருகிறார். ஏற்கெனவே இப்படி பல பிரபலங்கள் நீதிமன்றத்தில் சரணந்து உடனடியாக ஜாமீன் பெற்றிருக்கின்றனர். எனவே இது நிச்சயம் ஒரு நல்ல ஐடியா என்று சட்ட வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

உதாரணம்
கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய ஐஎம்எஃபின் தலைவராக இருந்த டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் இதேபோன்ற ஒரு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார். கடைசியில் அவர் விமானம் ஏற முயன்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அதன் பின்னர் அவருக்கு ஜாமீன் ஏதும் வழங்கப்படவில்லை. அவர் உடனடியாக சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். நீண்ட நாட்களுக்கு பின்னர் ரூ.10 லட்சம் கோடி மதிப்பில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது அவர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்கதக்கது.












Click it and Unblock the Notifications