இனி யாருக்கும் வழுக்கையே இருக்காது.. எலியை வைத்து நடத்திய சோதனையில் புதிய கண்டுபிடிப்பு!
நியூயார்க்: முடி உதிர்தல் என்பது பலருக்கும் பெரும் தலைவலியாக இருக்கிறது. இப்பிரச்னை குறித்து 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வில் தற்போது தீர்வு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரேல் போர், உக்ரைன் மீதான தாக்குதல், பெட்ரோல் விலை, நிரந்தர வேலையின்மை, பொருளாதார நெருக்கடி என பல பிரச்னைகள் இருந்தாலும், இன்றை இளைஞர்களை பெரிதும் வாட்டி வதைக்கும் விஷயம் முடி உதிர்தல்தான். மேற்குறிப்பிட்ட பஞ்சாயத்துகளுக்கெல்லாம் தீர்வு கிடைத்துவிடும். ஆனால், முடி கொட்டினால் மீண்டும் முளைக்குமா? முளைக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கடந்த 10 ஆண்டுகளாக 'மச்சம்' குறித்து ஆய்வு செய்து வந்திருக்கிறார்கள். இந்த ஆய்வில்தான் முடி உதிர்தலுக்கான தீர்வு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உடலில் ஏன் மச்சங்கள் தோன்றுகின்றன. மச்சம் என்ன வேலையை செய்கிறது? குறிப்பாக மச்சம் இருக்கும் இடத்தில் நீளமாக முடி வளர்கிறதே அது ஏன்? என்கிற கோணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன.
முடி உதிர்தல் என்றால் என்ன?: இது குறித்து விஞ்ஞானிகள் கொடுத்த விளக்கத்தை நேச்சர் இதழ் வெளியிட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மனிதர்களுக்கு சராசரியாக 50-100 முடிகள் உதிரும். பின்னர் தலையில் இருக்கும் ஸ்டெம் செல்கள் புதிய முடியை வளர்க்க உதவும். சிலருக்கு ஸ்டெம் செல்கள் செயலற்றதாக இருக்கும். இதனால் முடி வளராது. இதைதான் வழுக்கை என்று கூறுகிறோம். அறிவியல் இதை அலோபீசியா அல்லது ஆண்ட்ரோஜெனிக் என்று குறிப்பிடுகிறது.
ஆக முடியை மீண்டும் வளர்க்க, ஸ்டெம் செல்லை மீண்டும் ஆக்டிவேட் செய்ய வேண்டும். இந்த வேலையைதான் ஆஸ்டியோபொன்டின் என்ற மூலக்கூறு செய்கிறது. நமது மச்சத்தில் ஆஸ்டியோபொன்டின் மூலக்கூறு இருக்கிறது. இதனால்தான் மச்சத்திற்கு நடுவே முளைக்கும் முடிகள் நீளமாக இருக்கின்றன.
இதை ஆய்வு செய்ய, மனித தோலை வெட்டி எடுத்து அதை எலியின் உடலில் ஒட்டி, அந்த எலிக்கு ஆஸ்டியோபொன்டின் ஊசி மூலம் செலுத்தியுள்ளனர். சில நாட்களில் எலி உடலில் மனித தோல் இருந்த பகுதியில் புதியதாக முடிகள் 1 செ.மீ நீளம் வரை முளைத்திருக்கிறது.
இதே முறையை பின்பற்றி மனிதர்களுக்கும் முடியை வளர வைக்க முடியும். இளமை காலத்தில் வளர்ந்ததை போலவே முடி வளரும். அதாவது, இளமையில் சுருட்டை முடி இருந்தால், அதேமாதிரி இந்த சிகிச்சையின்போதும் முளைக்கும். ஆனால் இந்த ஆய்வை இதுவரை மனிதர்களிடையே நடத்தி பார்க்கவில்லை. இந்த ஆய்வு நடத்தப்பட்டால் இனி இந்த உலகத்தில் வழுக்கை எனும் பிரச்னையே இருக்காது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications