1 மணி நேரம்.. கடுகடுக்க காத்திருந்த டொனால்ட் டிரம்ப்.. காக்க வைத்து சிரித்த புடின்.. என்ன நடந்தது?
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினால் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. புடினிடம் போனில் பேசுவதற்காக டிரம்ப் போனில் ஒன்றரை மணி நேரம் காத்து இருந்ததாக கூறப்படுகிறது.
டிரம்ப் உடனான தொலைபேசி உரையாடலுக்கு முன்னதாக விளாடிமிர் புடின் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டார். அங்கே அவரிடம்.. டிரம்ப் உடன் உங்களின் அப்பாயிண்ட்மெண்ட் உள்ளது. நீங்கள் போனில் பேச வேண்டிவரும் என்று கூறி உள்ளனர். ஆனால் அதை கிண்டலாக புடின் சிரித்தபடி கடந்துள்ளார். அவர் முதலில் நாம் இன்று டிரம்ப் உடன் பேச வேண்டும் என்பதையே மறந்துவிட்டார்.
ஆனால் அதன்பின் நினைவு படுத்தியும் கூட.. அவர் போனில் பேசுவதற்கு விருப்பமோ, ஆர்வமோ காட்டவில்லை என்று கூறப்படுகிறது. உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவது தொடர்பாக இவர்கள் இருவரும் போனில் ஆலோசனை நடத்தி உள்ளனர். போரை நிறுத்துவது பற்றி நீண்ட நேரம் ஆலோசனை செய்துள்ளனர்.

ஆலோசனை கூட்டம்
சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் உயர்மட்ட சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்தனர். இந்த போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான முதல்படி இது.. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது.
எல்லா தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதுவே இந்த சந்திப்பின் இலக்கு. உக்ரைன் மட்டுமன்றி.. மற்ற உலக நாடுகளும் இதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என்று இரண்டு நாட்டு தலைவர்களும் தெரிவித்து உள்ளனர்.
இதில் ரஷ்யா தனது கோரிக்கைகளை உறுதியாக வைத்துள்ளது. உக்ரைன் போரை முடிவிற்கு கொண்டு வருவதற்கான ஆலோசனைகள் இதில் நடந்து உள்ளன. டிரம்ப், புடின் ஆகியோர் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினர். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க இரண்டு பேரும் ஒப்புக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் இல்லாத காரணத்தால்.. ரஷ்யாவின் கையே ஓங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்கா - ரஷ்யா இடையே 1960களில் நடைபெற்ற பனிப்போருக்கு பின்பாக மிக மிக மோசமான மோதல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் உக்ரைன். உக்ரைன் நேட்டோ படையில் இணைய விரும்பியது. இதற்காக முயற்சிகளை செய்தது.
சோவியத் யூனியன் ஒன்றாக இருந்த போது ரஷ்யாவும் - உக்ரைனும் ஒன்றாக இருந்த நாடுகள் ஆகும். அதன்பின் 1991 டிசம்பரில் சோவியத் யூனியன் உடைந்த போது உக்ரைன் தனியாக பிரிந்தது. இப்படிப்பட்ட நிலையில் உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு ஆபத்து. ஏற்கனவே ரஷ்யாவை சுற்றி இருந்த பெரும்பாலான பழைய சோவியத் நாடுகள் அமெரிக்காவின் நேட்டோ படையில் இணைந்துவிட்டது. இதில் உக்ரைனும் இணைந்தால் அது ரஷ்யாவிற்கு பெரிய சிக்கலாகும். பாதுகாப்பு ரீதியாக ரஷ்யாவிற்கு நேட்டோ வைக்கும் செக்காக இது அமைந்துவிடும். இதனால் உக்ரைனை நேட்டோ படையில் சேர விடாமல் தடுக்க ரஷ்யா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இரண்டு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications