இதுதான் ரஷ்யா! ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போர் மூளும் முன்.. புடின் தந்த ஷாக்.. அமெரிக்கா அதிர்ச்சி
நியூயார்க்: ஈரான் ரஷ்யாவிடம் நவீன ஆயுதங்களை கேட்ட நிலையில்.. ரஷ்யா ஈரானுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் கருவிகளை வழங்கத் தொடங்கியுள்ளது. இதில் அணு ஆயுதங்களும் இருக்கலாம் என்ற சந்தேகம் உலகம் முழுக்க எழுந்துள்ளது.
பொதுவாக சர்வதேச அளவில் இக்கட்டான காலங்களில் ஈரானிய தேசத்திற்கு ஆதரவாக நின்ற நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாகும். அந்த வகையில் தற்போது ஈரான் ரஷ்யாவிடம் நவீன ஆயுதங்களை கேட்டது. ஈரான் மீது சில பொருளாதார ரீதியான தடைகள் உள்ளன. இதனால் ஈரானால் சில ஆயுதங்களை வாங்க முடியாது, தயாரிக்க முடியாது.

இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யா ஈரானுக்கு மேம்பட்ட ஆயுதங்களை வழங்கி உள்ளது. கப்பல் மூலமாக வான் பாதுகாப்பு மற்றும் ரேடார் கருவிகளை வழங்கத் தொடங்கியுள்ளது. இதனால் இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் போரில் ரஷ்யாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற நாடுகள் தலையீடு: ஈரான் - அமெரிக்க - இஸ்ரேல் இடையிலான போரில் தற்போது மற்ற நாடுகளும் தலையிடும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றது. இந்த விவகாரத்தில் தற்போது ரஷ்யா நேரடியாக கருத்து தெரிவித்து உள்ளது. நேரடியாக இந்த விவகாரத்தில் ரஷ்யா களமிறங்கி உள்ளது.
ரஷ்ய பாதுகாப்புத் தலைவர் செர்ஜி ஷோய்கு ஈரான் நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தெஹ்ரானுக்குச் சென்றுள்ளார். அங்கே நடந்த மீட்டிங்கிற்கு பிறகு ஈரானுக்கு ஆதரவாக இருப்போம். ஈரானுக்கு தேவையான உதவிகளை செய்வோம்.
ஈரானுக்கு தேவையான உதவிகளை நாங்கள் வழங்குவோம். ஈரானுக்கு உறுதுணையாக இருப்போம். தேவையான ஆதரவு நிலைப்பாடுகள், சப்போர்ட்டுகளை வழங்குவோம் என்று ரஷ்யா அறிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் வருகை பிரச்னையை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள மோதல் உலக நாடுகளுக்கு இடையிலான போராக, மிகப்பெரிய மோதலாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
என்ன மோதல்?: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு ரஷ்ய பாதுகாப்புத் தலைவர் செர்ஜி ஷோய்கு ஈரான் நாட்டு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெஹ்ரானுக்குச் சென்றுள்ளார். ஏற்கனவே, ஈரான் கேட்ட ராணுவ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நவீனரேடார்களை மாஸ்கோ வழங்கத் தொடங்கியுள்ளது. ஈரானுக்கு ராணுவ உதவிகளை ரஷ்யா தீவிரமாக வழங்கி வருகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பே இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனிஹ் சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த ஹமாஸ் அமைப்புதான் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வருகிறது. இவர்களுக்கு உறுதுணையாக ஹிஸ்புல்லா அமைப்பு உள்ளது. சமீபத்தில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஃபுவாட் ஷுக்ர் இதேபோல் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஹிஸ்புல்லா அமைப்பு ஈரான் ஆதரவை பெற்று இஸ்ரேலில் போர் செய்து வருகிறது. லெபனாலில் இருந்து இந்த அமைப்பு இயங்கி வருகிறது. இந்த இரண்டு அமைப்புகளின் தலைவர்கள் கொலை செய்யப்பட்டது, சிரியாவில் தங்களுடைய தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல், இஸ்ரேல் பாலஸ்தீன போரின் ஒரு பகுதியாக காஸாவில் உள்ள Al-Ahly Baptist என்ற மருத்துவமனை மீது ராக்கெட் தாக்குதல், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து, பாலஸ்தீன போர் தொடங்கி பல விஷயங்கள் இந்த மோதலுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு பழிவாங்கவே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது என்றால் அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்கள் மீதும் தாக்குதல்களை கண்டிப்பாக நடத்தும். அதன்படி, அறிவித்தப்படியே ஈரான் தற்போது அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தி உள்ளது. ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ மையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications