டீச்சரின் "கசமுசா".. தண்டனையிலிருந்து தப்பிக்க மாணவனை திருமணம் செய்து, குழந்தை பெற்று.. செம எஸ்கேப்

பள்ளி மாணவனையே மணந்து குழந்தை பெற்றுள்ளார் ஒரு ஆசிரியை

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: தன்னிடம் படிக்கும் மாணவன் ஒருவனுடன் பள்ளி ஆசிரியை உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார்.. இந்த விஷயம் கோர்ட் வரை சென்றுவிட்டது.. ஆனால், தண்டனையில் இருந்து தப்பித்து கொள்ள அந்த டீச்சர் செய்த காரியத்தை பாருங்க..!

3 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.. அமெரிக்காவின் கான்கார்ட் நகரில் காக்ஸ் மில்லி என்ற உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இங்கு வேலை பார்த்து வந்தவர் கேதரின் ரிடென்ஹார்.. 23 வயது டீச்சர்.

இவருக்கம் அதே பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவன் ஒருவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.

 விவகாரம்

விவகாரம்

இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்ததும், அந்த ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த மாணவனுக்கு 17 வயது என்பதால் மைனர் என்ற அடிப்படையில் தப்பித்துவிட்டான். உயர் பொறுப்பில் இருந்து கொண்டு மாணவனுடன் தகாத உறவு கொண்டது கிரிமினல் குற்றம் என்பதால் டீச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.. இதையடுத்து அந்த டீச்சர் தன்னுடைய பணியை ராஜினாமா செய்துவிட்டார்.. ஆனாலும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

டீச்சர்

டீச்சர்

இதேபோல ஒரு சம்பவம் இதே அமெரிக்காவில் மிசௌரி என்ற மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்தது.. இவரும் ஒரு இளம் வயது டீச்சர்தான்.. டீச்சருக்கு 23 வயது.. ஒரு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார்.. தன்னிடம் படிக்கும் மாணவனுக்கு 19 வயது.. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு விடுதியில் முதன்முதலாக இவர்கள் சந்தித்துள்ளனர்.. சிறுவனை பார்த்ததுமே டீச்சருக்கு பிடித்துபோய்விட்டது.. கட்டிப்பிடித்து அன்பை பொழிந்துள்ளார்.. அப்போது முதல் இருவருமே நெருக்கமாகிவிட்டனர்.

 வழக்குகள்

வழக்குகள்

தன்னுடைய வீட்டிற்கும் அழைத்து சென்றுள்ளார். ஒருநாள் மாணவனுடன் ஆசிரியை பாலியல், உடலுறவு செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்... விஷயம் மாணவன் வீட்டுக்கு தெரிந்துவிட்டது.. பள்ளி நிர்வாகத்துக்கும் தெரிந்துவிட்டது.. இறுதியில் கோர்ட், கேஸ் என்று வழக்குகள் பதிவாகின.. டீச்சரை போலீசார் கைது செய்து விசாரித்தபோதுதான் அனைத்து உண்மையையும் சொன்னார்.. ஆசிரியரின் முறைகேடான செயல்கள் கண்டிக்கத்தக்கவை என்று கூறப்பட்டன. இறுதியில் 2019, பிப்ரவரியில் டீச்சர் கைதானார்.. 2 வருடம் ஜெயில் தண்டனையும் அனுபவித்தார்.. இதற்கு பிறகு ஜாமீனில் விடுதலையானார்.

நடவடிக்கை

நடவடிக்கை

ஆனால், தன் மீதான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்று நினைத்த அந்த ஆசிரியர், சம்பந்தப்பட்ட மாணவனையே திருமணம் செய்து கொண்டார்.. இந்த தம்பதிக்கு குழந்தையும் உண்டு.. இப்போது சிக்கல் என்னவென்றால், ஏற்கனவே தொடுத்த வழக்கின்படி, மாணவனை சீரழித்தது தொடர்பாக டீச்சர் மீது நடவடிக்கை பாயுமா? அல்லது மனைவிக்கு எதிராக மாஜி மாணவனான கணவன் சாட்சி சொல்வாரா? என்பதுதான் சிக்கலாகவும், குழப்பமாகவும் எழுந்தது.

உடலுறவு

உடலுறவு

இறுதியில் டீச்சர் மீதான கேஸ் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.. காரணம், மாணவனுடன் உடலுறவு வைத்து பாலியல் டார்ச்சர் தந்திருந்தாலும், அவரையே திருமணம் செய்து கொண்டதால், இப்போது தம்பதிகளாகிவிட்டனர்.. எனவே, இவர்கள் மீதான புகார் வழக்குகளை போலீசாரே வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளனர்.. வழக்கும் கைவிடப்பட்டுவிட்டது.. எந்த சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க, மாணவனையே டீச்சர் மணம் முடித்தாரோ, இப்போது அவருக்கு சாதகமாகவே வழக்கு சுமூகமாக முடிவாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+