பூமிக்கு இன்னொரு லிட்டில் மூன்! நாசா விஞ்ஞானிகள் சொன்ன சூப்பர் தகவல்.. வானியல் அதிசயம்!
நியூயார்க்: விண்கற்களால்தான் பூமிக்கு ஏழரை இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட விண்கல் ஒன்று, பூமியின் தற்காலிக நிலவாக மாறும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை இருக்கிறது. சிலர் இந்த பிரச்னைகளை நினைத்தே வாழ்க்கையை தொலைத்துக்கொள்கிறார்கள். ஆனால், இதெல்லாம் என்ன பிரச்னை.. நமது பூமிக்கு இருக்கும் சிக்கலை கொஞ்சம் பாருங்க.. என்கிற டோனில் விஞ்ஞானிகள் புதிய குண்டை தூக்கி போட்டிருக்கிறார்கள்.

அதாவது, விண்வெளி நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரியது. இதில், நாம் வாழும் சூரிய குடும்பத்தில் நமக்கே தெரியாமல் பல பொருட்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இந்த விண்கற்கள் இருக்கிறதே.. இதோட தொல்லை ரொம்ப அதிகம். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2 விண்கற்களாவது பூமிக்கு நெருக்கமாக வந்து செல்லும். ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இப்படி வந்த விண்கல் ஒன்னு, பாதை மாறி பூமி மீது மோதிவிட்டது.
அதுக்கப்புறம் டைனோசர் அழிந்தது, இதர பெரிய உயிரினங்கள் அழிந்தது என நடந்த கதைதான் நம் எல்லோருக்கும் தெரியுமே. மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடப்பதற்கான வாய்ப்பை முன்கூட்டியே கணிக்க, விஞ்ஞானிகள் தீவிரமான ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பூமியை நெருக்கமாக கடக்கும் விண்கற்களை கண்காணித்து, அதன் மூலம் பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்தும் அவ்வப்போது விளக்கமளித்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கல் ஒன்று, பூமியின் நிலவாகவே மாற இருப்பதாக கூறியுள்ளனர். கடந்த ஆக.7ம் தேதி நாசாவின், 'ஆஸ்டிராய்ட் டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம்' எனும் வானியல் அமைப்பு மூலம் 2024 PT5 எனும் விண்கல்லை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இது பெரிசு ஒன்றும் கிடையாது. வெறும் 33 அடி நீளம் மட்டுமே இருக்கிறது.
இது தன்னுடைய பாதையில் தேமே என்றுதான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், இதன் பாதை பூமியின் சுற்றுவட்ட பாதையை ஒட்டி இருந்ததுதான் பிரச்னை. மட்டுமல்லாது பூமியின் சுற்றுவட்ட பாதையை இந்த விண்கல் கடப்பதற்கும், சரியாக அந்த நேரம் பார்த்து பூமி உள்ளே வருவதற்கும் நேரம் சரியாக இருந்திருக்கிறது.
இப்படி நடக்கும் போது சில நேரங்களில் விண்கல் பூமியை மோதிவிடும். ஆனால், இது சைஸில் சிறியது. எனவே பூமியின் நிலவாக மாறக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். அதாவது, பூமியின் ஈர்ப்பு விசையால் நிலவு எப்படி நம்மை சுற்றி வருகிறதோ.. அதேபோல இந்த விண்கல்லும் நம்மை சுற்றி வரும். ஆனால் கொஞ்ச நாளைக்கு மட்டுமே.
செப்டம்பர் 29 முதல் நவம்பர் 25 வரை, இரண்டு மாதங்கள் வரை மட்டுமே இந்த விண்கல், பூமியின் நிலவாக சுற்றி வரும். அதன் பின்னர் அது தன்னுடைய பாதையை நோக்கி மீண்டும் தள்ளப்பட்டு நகர்ந்து போய்விடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதை வெறும் கண்களால் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications