பூமிக்கு பக்கத்தில் வரும் பெரிய அண்ணன்! இன்னைக்கு வானத்தில் நடக்கும் அதிசயம்.. மிஸ் பண்ணாதீங்க
நியூயார்க்: விண்வெளியில் தினம் தினமும் ஆயிரக்கணக்கான மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் சூரிய குடும்பத்தின் பெரிய அண்ணன் என்று அழைக்கப்படும் வியாழன் கிரகம் இன்று பூமிக்கு மிக நெருக்கமாக வருகிறது.
வியாழன் கிரகம் பூமிக்கு பக்கத்துல வந்தா எனக்கென்ன? தூரமாக போனா எங்களுக்கு என்ன என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். ஆனால் இந்த வியாழன் கிரகமே இல்லை என்றால் நாம் உயிருடன் இருக்க முடியாது. எனவே இந்த சமாச்சாரங்கள் பற்றியெல்லாம் நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்தான்.

அதாகப்பட்டது மக்களே.. முன்னொரு காலத்தில், சரியாக சொல்வதென்றால் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூரிய குடும்பம் தோன்றியது. குடும்பம் என்றாலே அதில் தலைவர் என்பவர் இருப்பார்தானே. அது நம்ம சூரியன்தான். அப்புறம் சில உறுப்பினர்கள் புதன், வெள்ளி, பூமி, சனி, வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன். இதில் பெரிய அண்ணன்தான் வியாழன். சைஸில் பெரியவர். அதனால் பெரிய அண்ணன் பொறுப்பு அவருக்குதான் கரெக்டா இருக்கும்.
பெயருக்கு ஏற்றார் போல, எல்லா கஷ்டங்களையும் தாங்கி கொண்டு அவர் தனது இளைய சகோதரர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். புரியும்படி சொல்வதெனில், பூமிக்கு விண்கற்களால்தான் ஆபத்து. சட்டுனு வந்து பொட்டுனு போட்டுவிட்டு போய்டும். டைனோசர்கள் அழிந்ததும் இப்படித்தான். ஆக விண்கற்கள் தாக்குதலில் இருந்து நம்மை காப்பாற்ற வியாழன் உதவி செய்து கொண்டிருக்கிறது. வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு சக்தி அதிகம். எனவே அதை தாண்டி சூரிய குடும்பத்தில் நுழையும் அனைத்து விண்கற்களையும் அது ஈர்த்து தனக்குள் போட்டுக்கொள்ளும்.
கடந்த பல கோடி ஆண்டுகளாக வியாழன் அண்ணன் நமக்காக இதை செய்து கொண்டிருக்கிறார். இந்த பணி இன்னும் சில கோடி ஆண்டுகள் வரை கூட தொடரும். இப்படி இருக்கையில், வியாழன் கோளை பற்றி தெரிந்துக்கொள்வதற்கும், அதை பார்த்து ரசிப்பதற்கும் விஞ்ஞானிகள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் கூட ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆர்வத்திற்கு விருந்தளிக்கும் வகையில், இன்று இரவு ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது. ஆம் மக்களே வியாழன் கோள் இன்று நமது பூமிக்கு நெருக்கமாக வருகிறது.
ஒவ்வொரு 13 மாதங்களுக்கு ஒரு முறையும் இப்படி நடக்கும். இப்படி நடக்கும்போது வியாழன் கோளை வெறும் பிரகாசமாக கண்களால் பார்க்க முடியும். அதுவும் 2 மடங்கு பெரியதாக. அதேபோல அதிலிருந்து வரும் ஒளியும் வழக்கத்தைவிட 25% அதிகமாக இருக்கும்.
இதெல்லாம் ஒரு அதிசயமா பாஸ் என்று உங்களுக்கு கேள்வி எழுந்தால்.. வியாழன் கோள் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை நான் கொஞ்சம் விளக்க வேண்டி உள்ளது என்று அர்த்தம்.
வியாழனை ஒரு கூடைப்பந்து அளவு உள்ள ஒரு பொருள் என்று கற்பனை செய்துக்கொண்டாலும் கூட, பூமிக்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட தூரம் ஏறத்தாழ அரை கி.மீ ஆக இருக்கும். உண்மையான தூரம் 92 கோடி கி.மீ ஆகும்.
அவ்வளவு தூரத்தில் உள்ள ஒரு கிரகம் வழக்கத்தைவிட 25% அதிக பிரகாசமாக தெரிவது நிச்சம் பிரபஞ்ச அதிசயம்தான். ஒருவேளை இன்று இரவு நீங்கள் இந்த அதிசயத்தை பார்க்க தவறிவிட்டால், 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை காத்திருக்க வேண்டும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications