Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

9 வருட அமெரிக்க கனவு.. 2 நாசா வீரர்களை விண்ணுக்கு ஏந்தி செல்லும் ஸ்பேஸ் எக்ஸ்.. எலோன் மஸ்க் மாஸ்!

நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் வரும் புதன் கிழமை விண்ணில் ஏவப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் வரும் புதன் கிழமை விண்ணில் ஏவப்படுகிறது.

Recommended Video

    நாசாவின் 2 வீரர்களை விண்ணுக்கு ஏந்தி செல்லும் ஸ்பேஸ் எக்ஸ்

    விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அவ்வப்போது ரஷ்யா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி வீரர்களை அனுப்புவது உண்டு. இதில் அமெரிக்கா கடந்த 2000ம் ஆண்டில் இருந்தே வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப தனியார் நிறுவன ராக்கெட்டுகளை நாடி வருகிறது.

    2003ம் ஆண்டில் அமெரிக்காவின் கொலம்பியா ராக்கெட் வெடித்த காரணத்தால், நாசா தனியார் நிறுவனங்களுடன் இணைந்து விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி முடிவு செய்தது. இந்த நிலையில்தான் நாசாவுடன் ஸ்பேஸ் எக்ஸ் கை கோர்த்தது.

    ஸ்பேஸ் எக்ஸ் வந்தது

    ஸ்பேஸ் எக்ஸ் வந்தது

    கடந்த 2014ல்தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா கை கோர்த்தது. அதன்படி நாசாவின் வீரர்களை விண்ணுக்கு அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் தற்போது முதல்முறையாக விண்ணுக்கு மனிதர்களை ஸ்பேஸ் எக்ஸ் அனுப்புகிறது. நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபல்கான் 9 ராக்கெட் வரும் புதன் கிழமை விண்ணில் ஏவப்படுகிறது.

    எலோன் மஸ்க் சாதனை

    எலோன் மஸ்க் சாதனை

    அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் எலோன் மஸ்க் மூலம் தொடங்கப்பட்டது. இவர்தான் டெஸ்லா கார் நிறுவனத்திற்கும் தலைவர். தன்னுடைய சிவப்பு நிற டெஸ்லா காரை இவர்தான் பல்கான் ஹெவி ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் மனிதர்களை அனுப்பி முயன்று வருகிறது. தற்போது ஸ்பேஸ் எக்ஸ்தான் நாசாவின் வீரர்களை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்புகிறது.

    9 வருட கனவு

    9 வருட கனவு

    2011ல் இருந்து நாசா தன்னுடைய விண்வெளி ராக்கெட் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது இல்லை. ரஷ்யாவின் சோயஸ் விண்வெளி ராக்கெட்டைதான் நாசா நம்பி இருக்கிறது. இதற்காக பல கோடி டாலர்களை நாசா ரஷ்யாவிற்கு தடுக்கிறது. இந்த நிலையில் 9 வருடங்களுக்கு பின் அமெரிக்க மண்ணில் இருந்து முதல் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் புறப்படுகிறது.

    இரண்டு வீரர்கள்

    இந்த ஃபல்கான் 9 ராக்கெட்டின் முன் பக்கத்தில் க்ரூ டிராகன் (Crew Dragon) என்ற பகுதி இருக்கும். இதில்தான் விண்வெளி வீரர்கள் இருப்பார்கள். இதில் 7 வீரர்கள் வரை இருக்க முடியும் . ஆனால் அமெரிக்கா இந்த முறை இரண்டு விண்வெளி வீரர்களை மட்டுமே அனுப்புகிறது. அதில் இருக்கும் மற்ற இடங்களில் முக்கிய ஆராய்ச்சி பொருட்கள், ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருப்பவர்களுக்கு உணவுகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    எங்கிருந்து ஏவுகிறார்கள்

    அமெரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் Kennedy Space Center's Complex 39A இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்ட உள்ளது. இங்கு இருந்துதான் அப்போலோ 11 மூலம் நிலாவிற்கு நாசா மனிதர்களை அனுப்பியது. வரும் புதன் கிழமை இவர்கள் ஸ்பேஸ் ஸ்டேஷன் நோக்கி செல்வார்கள். அமெரிக்கா நேரப்படி மாலை 4.30 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாயும்.

    ராக்கெட் எப்படி

    ராக்கெட் எப்படி

    இந்த ஃபல்கான் 9 ராக்கெட்டில் மொத்தம் இரண்டு ஸ்டேஜ் உள்ளது. அதன்படி முதல் ஸ்டேஜ் ராக்கெட் 2.5 நிமிடம் விண்ணில் பறக்கும். இதுதான் ராக்கெட்டை விண்ணுக்கு கொண்டு செல்லும். அதன்பின் அந்த பகுதி தனியே கழன்று கீழே பாதுகாப்பாக எஞ்ஜின் உதவியுடன் தரையிறங்கும். அடுத்த ஸ்டேஜ் 2 மொத்தம் 6 நிமிடம் பறக்கும். இது ராக்கெட்டை வட்டப்பாதையில் நிறுத்திவிட்டு கழன்று விடும்.

    க்ரூ டிராகன் எங்கே செல்லும்

    க்ரூ டிராகன் எங்கே செல்லும்

    அதன்பின் ராக்கெட்டின் முன் பகுதியில் இரண்டு வீரர்களுடன் இருக்கும் க்ரூ டிராகன் தனித்து விடப்படும். இதில் இருக்கும் திரஸ்டர் எனப்படும் சிறு சிறு எஞ்சின்கள் மூலம் அது மெல்ல மெல்ல ஸ்பேஸ் ஸ்டேசன் நோக்கி நகரும். அங்கு இருக்கும் வாயில் ஒன்றில் சரியாக இந்த க்ரூ டிராகன் இணையும். பின் ஸ்பேஸ் ஸ்டேசன் உடன் மொத்தமாக க்ரூ டிராகன் இணைந்து ஏர் லாக் செய்யப்படும். அதன்பின் உட்பக்கம் கதவுகள் திறக்கப்பட்டு, க்ரூ டிராகனில் உள்ள வீரர்கள் ஸ்பேஸ் ஸ்டேசன் உள்ளே செல்வார்கள்.

    செம அறிவியல்

    செம அறிவியல்

    இந்த அனைத்து விஷயமும் தானாக ஆட்டோமெட்டிக் முறை மூலம் நடக்கும். நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் இதில் செல்ல இருக்கிறார்கள். இவர்கள் 2000ம் ஆண்டே இதற்கு தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பயிற்சிகளை செய்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் விண்ணுக்கு பறந்தவர்கள். அதிக அனுபவம் கொண்டவர்கள். இவர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்ய இருக்கிறார்கள்.

    ரிட்டர்ன் எப்போது

    ரிட்டர்ன் எப்போது

    முக்கியமாக இவர்களை விண்வெளிக்கு கொண்டு சென்று ஆராய்ச்சி மையத்துடன் இணைக்கும் க்ரூ டிராகன் குறித்தும் இவர்கள் ஆராய்ச்சி செய்வார்கள். அதிக பட்சம் 2 மாதம் இவர்கள் விண்வெளியில் இருப்பார்கள். ஆனால் அதற்கு முன்பே கூட இவர்கள் திரும்ப வாய்ப்புள்ளது. க்ரூ டிராகன் மூலம் மீண்டும் இவர்கள் பூமிக்கு திரும்புவார்கள். இந்த க்ரூ டிராகன் பூமிக்கு திரும்பும் போது கடலில் இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+