பூமிக்கு திரும்பும் பெண் தேவதை.. சுனிதா வில்லியம்ஸ் ரிட்டர்ன்ஸ்! நாசா செய்திருக்கும் சூப்பர் ஏற்பாடு
நியூயார்க்: விண்வெளி ஆராய்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களாக சிக்கித் தவித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர். செவ்வாய்க்கிழமை மாலை 5.57 மணிக்கு அவர்கள் தரையிறங்குகிறார்கள். இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு அவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர். இதை அடுத்து அவர்கள் தரையிறங்கும் நிகழ்வை நாசா நேரடியாக ஒளிபரப்புகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்கியுள்ளன. விண்வெளியில் மிதந்தவாறு பல்வேறு ஆராய்ச்சிகளில் அந்த மையம் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அவ்வப்போது கட்டுமானம் ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்காக விண்வெளி வீரர்கள் அங்கு பயணம் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து அங்கு ஏழு பேர் கொண்ட குழு தங்கி இருந்து ஆய்வு செய்து வருகிறது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அந்த குழு பூமி திரும்புவது வழக்கம். கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்புவதை அமெரிக்காவில் நாசா நிறுத்திவிட்டது.
தற்போது அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ்,ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மட்டுமே அங்கு சென்று வருகின்றன. இதற்கிடையே அமெரிக்காவின் போயிங் நிறுவனம் ஸ்டார்லைனர் விண்கலத்தை தயாரித்த நிலையில் அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர். பத்து நாட்கள் ஆய்வுக்குப் பிறகு அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்டார்லைனர் விண்கலத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
தொடர்ந்து பலமுறை முயற்சித்தும் சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்ப முடியவில்லை. தொடர்ந்து செப்டம்பர் 7ஆம் தேதி ஸ்டார்லைனர் மட்டுமே பூமிக்கு திரும்பியது. தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் இருவரையும் மீட்டு வர முயன்றது. தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர், ரஷ்யாவின் அலெக்சி, இவான் வேகனர், அலெக்சாண்டர் ஆகிய ஏழு பேர் தங்கி இருக்கிறார்கள்.
இதற்கு இடையே சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டவரை மீட்க ஸ்பேஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றது. அதில் அமெரிக்காவின் ஆனி மேக், லைன் நிக்கோல், ரஷ்யாவின் கிரீஸ் ஆகியோர் சென்றனர். தொடர்ந்து வெற்றிகரமாக நேற்று முன்தினம் அந்த விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்தில் இணைந்தது.
புதிதாக வந்த வீரர்களை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து டிராகன் விண்கலம் பூமிக்கு திரும்ப தயாரானது. சுனிதா, வில்மோர் உள்ளிட்டோர் ட்ராகன் விண்கலத்தில் அமர்ந்த நிலையில் இன்று பூமிக்கு திரும்புகின்றனர். சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து 17 மணிநேரம் பயணத்திற்கு பிறகு இன்று மாலை அந்த விண்கலம் தரையிறங்குகிறது. அமெரிக்க நேரப்படி மாலை 5.57 க்கு அவர்கள் தரையிறங்குகிறார்கள்.
இந்திய நேரப்படி நாளை அதாவது புதன்கிழமை அதிகாலை 3.27 மணிக்கு அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அவர்களை வரவேற்க நாசா தயாராகி வருகிறது. மேலும் டிராகன் விண்கலம் தரையிறங்கும் நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது. விண்வெளியில் ஒன்பது மாதங்களை கழித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோரை வரவேற்க உலகம் முழுவதும் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் குவிந்து வருகிறது. தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்குப் பிறகே பொதுவெளிக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications