எதிர்பார்ப்புகளுடன் தொடங்கியது 96வது ஆஸ்கர் விருது விழா! விருதுகளை அள்ள தொடங்கியது 'ஓபன்ஹெய்மர்'
நியூயார்க்: 96வது ஆஸ்கர் விருது விழா இன்று தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டால்பி தியேட்டரில் இந்த விழா நடைபெற்று வருகிறது. ஜிம்மி கிம்மல் 4வது முறையாக ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கி உள்ளார்.
திரைத்துறையில் சிறப்பான படைப்புகளுக்கு ஆஸ்கர் விருதுகள் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், சிறந்த படைப்புகளை அடையாளப்படுத்தும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டு இந்த விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது.

பார்பி படத்தில் வரும் காட்சியுடன் தொடங்கிய ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், முதல் விருதை பிரபல இயக்குநரான கிறிஸ்டோபர் நோலனின் 'ஓபன்ஹெய்மர்' திரைப்படம் தட்டிச் சென்றிருக்கிறது. இந்த திரைப்படம் 13 பிரிவுகளில் போட்டியிட்ட நிலையில், சிறந்த படத்தொகுப்புக்காக தனது முதல் விருதை வென்றிருக்கிறது. பெண் எடிட்டர் 'ஜெனிஃபர் லேம்' இந்த விருதை பெற்றிருக்கிறார். அதேபோல சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை ஓபன்ஹெய்மர் படத்தின் ஒளிப்பதிவாளர் 'ஹோய்ட் வன் ஹோய்ட்மா' வென்றிருக்கிறார்.
கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஓபன்ஹெய்மர் மற்றும் பார்பி என இரண்டு படங்களுக்குதான் கடும் போட்டி இருந்தது. விமர்சன ரீதியாக ஓபன்ஹெய்மர் டாப்பில் இருந்தாலும், வசூல் ரீதியாக பார்பிதான் முன்னணியில் இருந்தது என்றும் சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில், ஆஸ்கர் விருது வழங்கும் விழா பார்பி படத்தில் வரும் காட்சியுடன் தொடங்கிய சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.
விருதுகளை பொறுத்த அளவில், சிறந்த ஆடை வடிவமைப்பு பிரிவில் 'தி புவர் திங்க்ஸ்' எனும் திரைப்படம் ஆஸ்கர் விருதை தட்டி சென்றிருக்கிறது. இந்த விருதை அறிவிக்க நிர்வாணமாக ஜான்சினா மேடைக்கு வந்த சம்பவம் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான பிரிவில் 'காட்ஸில்லா மைனஸ் ஒன்' திரைப்படம் விருதை வென்றிருக்கிறது. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு இந்த விருதை வழங்கியுள்ளார். அதேபோல சிறந்த தழுவல் திரைப்படம் எனும் பிரிவில் 'அமெரிக்கன் ஃபிக்ஷன்' எனும் திரைப்படம் விருதை வென்றுள்ளது. சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதை 'தி லாஸ்ட் ரிப்பேர் ஷாப்' திரைப்படம் வென்றுள்ளது.
சிறந்த ஆவணப்படம் பிரிவில், இந்தியாவில் பிறந்த நிஷா பஹுஜா இயக்கிய 'To Kill the Tiger' எனும் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் '20 Days in Mariupol' எனும் திரைப்படம் இந்த விருதை தட்டி சென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications