இந்தியாவில் கிறிஸ்துவர்களுக்கு பாதுகாப்பில்லை.. நியூயார்க் டைம்ஸின் முதல்பக்க கவர் ஸ்டோரி- சர்ச்சை!
நியூயார்க்: இந்தியாவில் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன, கிறிஸ்துவ மதம் மீதான தாக்குதல் புதிய உயரம் தொட்டு உள்ளது என்று அமெரிக்காவின் பிரபல தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
சரியாக கிறிஸ்துமஸ் தினத்தன்று அன்னை தெரசா மிசினரியின் அனைத்து வங்கி கணக்குகளையும் மத்திய அரசு முடக்கிவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி புகார் தெரிவித்துள்ள நிலையில்தான் இந்த நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியாகி இருக்கிறது. இதனால் நாடு முழுக்க இருக்கும் பல ஆயிரம் அன்னை தெரசா மிசினரிகள் பாதிக்கப்பட்டதாக மமதா உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
அதே சமயம் அன்னை தெரசா மிசினரியின் வங்கி கணக்குகளை நாங்கள் முடக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில்தான் "Arrests, Beatings and Secret Prayers: Inside the Persecution of India's Christians" என்று தலைப்பில் தி நியூயார்க் டைம்ஸ் இதழ் மிகப்பெரிய கட்டுரை ஒன்றை தனது அமெரிக்க பதிப்பில் முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல்
இந்த கட்டுரையில் கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விரிவாக எழுதப்பட்டு இருக்கிறது. 2021 ஜனவரி 26ம் தேதி இந்தூரில் சத்பிராக்ஷான் சன்சார் கேந்திர கிறிஸ்டியன் என்ற அமைப்பில் கிறிஸ்துவ கூட்டம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து இந்த கட்டுரை துவங்குகிறது. இதில் கிறிஸ்துவர்கள் மத கூட்டம் நடத்தியதற்கு மத மாற்றம் செய்வதாக கூறி இந்து அமைப்பினர் தாக்கியதாகவும், போலீசார் இந்துக்களை கைது செய்யாமல் கிறிஸ்துவர்களை கைது செய்ததாகவும் கட்டுரையில் புகார் வைக்கப்பட்டு இருக்கிறது.

மத பாதுகாப்புக்கு எதிராக உள்ளது
உலகின் மிகப்பழமையான, மிகப்பெரிய கிறிஸ்துவ நாடுகளில் ஒன்று இந்தியா. இங்கு 30 மில்லியன் கிறிஸ்துவர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் கிறிஸ்துவர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. பெரும்பாலான சம்பவங்களும் போலீசும், மத்திய அரசும் கிறிஸ்துவர்களுக்கு எதிராக இருக்கிறது. இந்த கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு பெரும்பாலான இடங்களில் ஆதரிக்கிறது. சர்ச்சுகளில் சாதாரண வழிபாட்டு கூட்டம் நடத்துவதே மிகப்பெரிய ரிஸ்க்காக மாறி உள்ளது என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

பேட்டிகள்
கிறிஸ்துவர்கள் மதம் மாற்றம் செய்கிறார்கள். அதனால் இவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என்று இந்து அமைப்புகள் இந்த தாக்குதல்களை நியாயப்படுத்துவதாகவும். ஆனால் இதனால் இந்து மதம் என்ற பெரிய மதத்திற்கு என்ன பாதிப்பு நேரிட்டுவிட போகும். அவர்கள்தான் இந்தியாவில் மெஜாரிட்டி என்று இந்த கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முக்கியமாக வடஇந்தியாவில், மத்திய இந்தியாவிலும் பிரதமர் மோடியின் பாஜக அரசு இருக்கும் மாநிலங்களில் இந்த தாக்குதல்கள் அதிகம் நடக்கின்றன.

இந்தியா எப்படி இருந்தது?
இதனால் இந்த மாநிலங்களில் ரகசியமாக கிறிஸ்துவ வழிபாடு நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இந்திய அரசின் மத சுதந்திர வழிபாட்டு உரிமைக்கு எதிரானது. 1947ல் நேரு முன்மொழிந்த மதசார்பற்ற ஜனநாயக நாடு மாறி வருகிறது. கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் போன்ற சிறுபான்மையினர் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். பிரதமர் மோடி மற்றும் அவரின் இந்து தேசிய வலதுசாரிகள் இந்தியாவை தீவிர வலதுசாரி நாடாக மாற்றி வருகிறது. இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்று அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

மோடி மீது விமர்சனம்
இந்த கட்டுரையில் பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவருக்கு எதிராக உலக நாட்டு தலைவர்கள் அழுத்தம் தருவதாகவும். The United States Commission on International Religious Freedom என்ற அமெரிக்க அரசு அமைப்பு இந்தியாவில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதால் சிறுபான்மையினருக்கான ரெட் லிஸ்ட் நாடாக இந்தியாவை அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளதாகவும் இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ்
மேலும் 1920களில் தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பு கிறிஸ்துவர்களுக்கு எதிராக மிக தீவிரமாக அழுத்தம் தருவதாகவும். இந்தியாவை இந்து தேசமாக்கவும். மற்ற மதத்தினரை வெளியேற்றவும் நினைக்கிறது என்றும், ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பழைய பேட்டிகளோடு விமர்சனம் வைத்துள்ளது. முக்கியமாக 2014க்கு பின் இந்தியாவில் எல்லாம் மாறிவிட்டது. பிரதமர் மோடி 2014ல் ஆட்சிக்கு வந்தார்.

2014 மாற்றம்
பொருளாதார மாற்றம் கொண்டு வருவதாக ஆட்சிக்கு வந்தார். ஆனால் அவர் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இதில் முதல் பலிகடா இஸ்லாமியர்கள்தான். இப்போது கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன என்று தி நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் "Arrests, Beatings and Secret Prayers: Inside the Persecution of India's Christians" என்று தலைப்பில் தி நியூயார்க் டைம்ஸ் இதழில் இன்று வெளியான கட்டுரையின் சாராம்சம்தான்.. ஒன்இந்தியா தமிழின் தனிப்பட்ட கருத்துக்கள் இதில் இடம்பெறவில்லை.
-
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications