Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹிரோஷிமா நினைவிருக்கா? அதைவிட 24 மடங்கு சக்திவாய்ந்த அணுகுண்டு! அமெரிக்கா வெளியிட்ட ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் மீது அணுகுண்டை வீசி அமெரிக்கா பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இதை விட 24 மடங்கு சக்தி வாய்ந்த அணுகுண்டு தங்களிடம் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

சுமார் 78 ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் மாதத்தின் காலை பொழுதொன்றில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தது. அது இரண்டாம் உலகப்போர் காலகட்டம். அப்போதுதான் அமெரிக்காவின் துறைமுகத்தை ஜப்பானியர்கள் வெற்றிகரமாக தாக்கியிருந்தார்கள். இந்த உற்சாகம் போரில் மேலும் தீவிரமாக இறங்க ஜப்பானுக்கு உந்து சக்தியாக இருந்தது. ஹிரோஷிமாவில் வர்த்தகர்கள், போர் வீரர்கள், பொதுமக்கள் என அனைத்து மக்களும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலை வேளையில் திடீரென பலத்த சத்தம். சுமார் 100 அடி உயரம் வரை நெருப்பு பிழம்பு எரிந்ததைதான் மக்கள் கடைசியாக பார்த்த காட்சி.

The US claims to have a nuclear bomb 24 times more powerful than the one dropped on Hiroshima

அதன் பின்னர் அதை பார்த்த மக்கள் யாரும் உயிருடன் இருக்கவில்லை. தப்பி பிழைத்தவர்கள் கூட இந்த 78 ஆண்டுகளில் கொடூரமான கதிர்வீச்சு தாக்கத்தால் உயிரிழந்துவிட்டனர். மொத்தமாக இந்த தாக்குதலில் 1.40 லட்சம் கொல்லப்பட்டனர். தங்கள் நாட்டில் என்ன நடந்தது என்பதே ஜப்பானுக்கு 16 மணி நேரம் கழித்துதான் தெரிய வந்தது. லிட்டில் பாய் அணுகுண்டின் தாக்கம்தான் இது எல்லாம். 78 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட இந்த வடுவுடன்தான் மக்கள் இன்னமும் வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில், இந்த லிட்டில் பாய் அணுகுண்டை விட 24 மடங்கு சக்தி வாய்ந்த அணுகுண்டு தங்களிடம் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்க பாதகாப்புத் துறையின் அறிவிப்பில் பெண்டகன் இதனை உறுதி செய்திருக்கிறது. அமெரிக்காவின் விண்வெளிக்கொள்கைக்கான பாதுகாப்பு செயலாளர் ஜான் பிளம்ப்-ம் இதை உறுதி செய்திருக்கிறார். இந்த அணு குண்டுக்கு B61-13 என பெயரிடப்பட்டுள்ளது. இது வெடித்தால் நாகாசாகியில் போடப்பட்ட அணுகுண்டை விட 14 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பென்டகன் கூறியுள்ளது. நிலத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் இந்த குண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல தரையில் விழுந்த பின்னர் வெடிப்பதற்கு பதிலாக, தரையை தொடுவதற்கு முன்னரே அது வெடித்துவிடும். இது வெடித்தால் குறைந்தபட்சம் 3.5 கி.மீ பரப்பில் எல்லாம் உரு தெரியாமல் அழிந்துவிடும்.

சமீபத்தில் சீனா தனது அணு ஆயுதங்களை 20230ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்துதான் தற்போது அமெரிக்கா தரப்பில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. மட்டுமல்லாது தற்போது அமெரிக்காவையே மிஞ்சிவிடும் அளவுக்கு சீனா பல்வேறு துறைகளில் சாதனைகளை செய்து வருகிறது. ரஷ்யாவும் சீனாவுடன் கைகோர்த்திருக்கிறது. எனவே உலக அரங்கில் தனது பலத்தை மீண்டும் நிரூபிக்க அமெரிக்கா இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+