நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

50 கோடி ஃபைசர் வேக்சின்.. உலக நாடுகளுக்கு இலவசமாக அளிக்கும் அமெரிக்கா.. பிடன் அறிவிப்பு

Google Oneindia Tamil News

நியூயார்க்: 50 கோடி ஃபைசர் வேக்சின்களை உலக நாடுகளுக்கு அமெரிக்கா இலவசமாக அளிக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

Recommended Video

    Covaxin vs Covishield vs Sputnik வித்தியாசம் என்ன ? Best Corona vaccine எது?

    தங்கள் நாட்டு குடிமக்களுக்கு வேக்சின் போடுவதில் அமெரிக்க வேகமாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவில் ஹெர்ட் இம்மியூனிட்டி எட்டும் அளவிற்கு வேக்சின் போடப்பட்டுவிட்டதால், அங்கு மக்கள் மாஸ்க் அணிய வேண்டியது இல்லை என்ற நிலை வந்துவிட்டது.

    கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்! கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!

    அமெரிக்க அதிபர் பிடனின் இந்த வேகம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளுக்கு அமெரிக்கா உதவவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

     அமெரிக்கா

    அமெரிக்கா

    அமெரிக்கா வேக்சின்களை வாங்கி குவித்துவிட்டது. ஏழை நாடுகளுக்கு வேக்சின் கிடைக்கவில்லை. . உலக நாடுகளுக்கு வேக்சின் கொடுக்க அமெரிக்காவிற்கு தார்மீக ரீதியாக பொறுப்பேற்க வேண்டும் என்று பல வல்லுநர்கள், விமர்சகர்கள் அழுத்தம் கொடுத்தனர். இந்த நிலையில் ஏற்கனவே உலக நாடுகளுக்கு 8 கோடி டோஸ் கொரோனா வேக்சின்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது.

    பிடன்

    பிடன்

    இந்த நிலையில் இன்று அமெரிக்க அதிபர் பிடன் தனது பேச்சில், உலகம் முழுக்க பல்வேறு நாடுகளுக்கு வேக்சின் அனுப்புவதற்காக உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்பான கோவேக்ஸ் அமைப்பிற்கு அமெரிக்காதான் அதிகமாக பங்காற்றி உள்ளது. அமெரிக்காதான் இதற்கு அதிக நிதி அளித்துள்ளது. வேக்சின் உருவாக்க வேண்டும் என்று ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா உதவி உள்ளது.

    கனடா

    கனடா

    கனடா போன்ற அண்டை நாடுகளுக்கும் வேக்சின் அளித்துள்ளோம். ஏற்கனவே நம்மிடம் இருக்கும் 8 கோடி வேக்சின்களை ஜூன் மாத இறுதிக்குள் உலக நாடுகளுக்கு அளிக்கும் முடிவை எடுத்து இருக்கிறோம். இந்த நிலையில் 50 கோடி ஃபைசர் வேக்சின்களை உலக நாடுகளுக்கு அமெரிக்கா இலவசமாக வழங்க உள்ளது. ஃபைசர் நிறுவனத்திடம் வாங்கி, அமெரிக்கா உலக நாடுகளுக்கு கொடுக்கும்.

    லாபம்

    லாபம்

    லாப நோக்கமற்ற உதவி இது. இந்த வருடம் 20 கோடி வேக்சின் கொடுக்கப்படும். மீதம் 30 கோடி அடுத்த வருடம் தரப்படும். உலக நாடுகள் பல கொரோனாவை தடுப்பதில் ஒன்றாக உள்ளன. அவர்களுடன் அமெரிக்கா துணை நிற்கும். வருமானம் குறைவான, வளர்ந்து வரும் நாடுகள், ஏழை நாடுகள், ஆப்ரிக்க நாடுகள் என்று 92 நாடுகளுக்கு நாங்கள் வேக்சின் கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் பிடன் அறிவித்துள்ளார்.

    ஆனால்

    ஆனால்

    ஆனால் இதில் எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு வேக்சின் கொடுக்கப்படும். இந்தியாவிற்கு வேக்சின் கொடுக்கப்படுமா என்பது குறித்த விவரங்களை எல்லாம் அவர் வெளியிடவில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    The USA to give 500 Million Pfizer Corona Vaccines shots to nations for free says President Biden.'
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X