ஹிஸ்புல்லா கைக்கு வரும் பயங்கர ஆயுதம்! திசை மாறும் போர்? வாக்னர் குழு உதவுவதாக அமெரிக்கா அலறல்
நியூயார்க்: பாலஸ்தீனம் மீது 28வது நாளாக இஸ்ரேல் இன்று தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக லெபனானின் ஹில்புல்லா அமைப்பு சண்டையிட்டு வருகிறது. இச்சூழலில் ஹில்புல்லாவுக்கு ரஷ்யாவின் வாக்னர் குழு ஆயுதங்களை அளிக்க முன்வத்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த 7ம் தேதியன்று அதிகாலையில் மத்திய கிழக்கில் திடீரென குண்டு சத்தங்கள் கேட்க தொடங்கின. இதற்கு காரணம் ஹமாஸ் படைகள்தான். பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என்று கூறி ஹமாஸ், காசாவிலிருந்து சுமார் 5000 ராக்கெட்களை ஒரேநேரத்தில் வீசியது. கடந்த காலங்களில் ஹமாஸுக்கும், இஸ்ரேலுக்கும் மோதல் போக்கு நீடித்து வந்ததால், இப்படியான தாக்குதல் நடக்கும் என ஏற்கெனவே இஸ்ரேல் கணித்திருந்தது.

எனவே இதை தடுக்க அயன் டோம் எனும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியிருந்தது. இது இஸ்ரேல் மீது பாயும் ராக்கெட்டுகளை வானத்திலிலேயே வழி மறித்து தாக்கி அழித்துவிடும். இருப்பினும் ஒரே நேரத்தில் அதிக அளவில் ராக்கெட்கள் பாய்ந்ததால் அயன் டோம் பாதுகாப்பையும் மீறி இஸ்ரேலுக்குள் விழுந்தன. இதில் 1,400 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இஸ்ரேல், காசாமீது கடுமையான தாக்குதலை தொடுத்தது.
இந்த தாக்குதல் 28வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. அதேபோல இஸ்ரேல் ராணுவத்திற்கு சவால்விடும் வகையில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மோதலில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலை அனைத்து இஸ்லாமிய நாடுகளும் கண்டித்திருக்கின்றன. தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. ஐநா சபையிலும் போர் நிறுத்தம் குறித்து ஜோர்டன் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனாலும் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
இப்படி இருக்கையில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிஸ்புல்லா அமைப்பு பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் இறங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாகதான், ரஷ்யாவின் வாக்னர் குழு, ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதம் சப்ளை செய்ய முன் வந்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. ஹிஸ்புல்லாவுக்கு SA -22 எனும் வான் பாதுகாப்பு அமைப்பை வாக்னர் குழு வழங்க இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்திருக்கிறது. இதனை அந்நாட்டின் முன்னணி பத்திரிகை ஊகடங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைனுக்கு எதிரான போரில் முன் களத்தில் நின்று சண்டை செய்த அமைப்புதான் வாக்னர் குழு. இது ரஷ்யாவின் கூலிப்படையாகும். ரஷ்யாவில் கூலிப்படைக்கு தடை இருக்கிறது. ஆனால் வாக்னர் குழு காலங்காலமாக ரஷ்ய அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் அதற்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு பிரதிபலனாகதான் உக்ரைனுடன் வாக்னர் குழு சண்டையிட்டது. இன்றுவரை உக்ரைனால் ரஷ்யாவை நோக்கி முன்னேறாததற்கு காரணம் இந்த குழுதான்.
இப்படிப்பட்ட குழுதான் லெபனானிலிருந்து இயங்கும் ஹிஸ்புல்லாவுக்கு உதவ முன் வந்திருக்கிறது. இது ஹிஸ்புல்லாவுக்கு வழங்க இருக்கும் SA -22 எனும் வான் பாதுகாப்பு அமைப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இதிலிருந்து பாயும் ராக்கெட்டுகள் ஒலியை விட 3.5 மடங்கு வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் திறன்கொண்டது. இது இன்னும் ஹிஸ்புல்லாவுக்கு கைமாற்றப்படவில்லை. இருப்பினும் அப்படி நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்றுதான் அமெரிக்க உளவுத்துறை கணித்திருக்கிறது. இந்த கணிப்பு சாத்தியமானால் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மேலும் சில காலம் வரை நீடிக்கும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications