அமைதி பேச்சுவார்த்தைக்கு நடுவே.. அமெரிக்கா கொடுத்த மிரட்டல்! ஈரான் கதை முடியப்போகுது?
நியூயார்க்: ஈரான் போர் நிறுத்தம் தொடர்பாக, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடக்க இருக்கிறது. இந்நிலையில், ஈரானுக்கு அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஹெக்செத் கடும் வார்னிங் கொடுத்திருக்கிறார்.
ஏற்கெனவே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கிறது. இந்நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படுமா? என்று மொத்த உலகமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த நிலையில், பேச்சுவார்த்தையை கெடுக்கும் விதமாக ஹெக்செத் வாயை விட்டிருக்கிறார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "நாங்கள் உங்களைக் கண்காணித்து வருகிறோம். எங்கள் இராணுவத்தின் திறன்களும் உங்கள் இராணுவத்தின் திறன்களும் ஒன்றல்ல. நினைவில் கொள்ளுங்கள், இது ஒரு நியாயமான போர் அல்ல. நீங்கள் எந்த இராணுவச் சொத்துக்களை எங்கு நகர்த்துகிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
உங்களிடம் பாதுகாப்புத் தொழில் துறை இல்லை. உங்கள் தாக்குதல் அல்லது தற்காப்புத் திறன்களை மீண்டும் நிரப்பும் ஆற்றலும் இல்லை. உங்களிடம் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். உங்களால் பொருட்களை இடம் மாற்ற முடியும், ஆனால் உண்மையில் மீண்டும் கட்டமைக்க முடியாது என்பது எங்களுக்குத் தெரியும்" என்று மிரட்டும் தொணியில் பேசியிருக்கிறார்.
இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்தியாவுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை எல்பிஜி இறக்குமதிக்கு வளைகுடா நாடுகளைதான் நம்பியிருக்கிறது. தற்போது போர் காரணமாக எல்பிஜி சப்ளை பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஈரா்ன-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை, சற்று பாசிட்டிவ் சிக்னலை கொடுத்திருந்தது. ஆனால் முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டது.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடக்க இருக்கிறது. சரி இப்படியாவது பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்று இந்தியா போன்ற நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
ஆனால், இந்த பேச்சுவார்த்தையை சொதப்பும் விதமாக, அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஹெக்செத் பேசியிருக்கிறார். அவரது பேச்சை நிச்சயமாக ஈரான் ரசிக்காது. எனவே அடுத்த கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தால் பெரிய சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம்












Click it and Unblock the Notifications