11 நிமிடங்கள்.. உலகில் முதல்முறையாக "சொர்க்கத்துக்கு" போய் வந்த பெண்.. அங்கே என்ன இருந்தது தெரியுமா?
நியூயார்க்: சொர்க்கத்தில் தன்னுடைய அப்பா, அம்மாவை சந்தித்து விட்டு வந்ததாக ஒரு பெண் கூறி, மொத்த உலக மக்களுக்கும் ஆச்சரியத்தை கிளப்பிவிட்டுள்ளார்.. இந்த அதிசய சம்பவம்தான் பரபரப்பாக மீடியாக்களில் பேசப்பட்டு வருகிறது.
ஆன்மாவுக்கும் என்றும் அழியவே அழியாது கிடையாது என்று ஆன்மீகம் காலம் காலமாக சொல்லி வரும்நிலையில், மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்? என்பதை பற்றின ஆய்வுகள் இன்னமும் உலக அளவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது..

மூளை செயலுடன் இருக்கும் வரைதான் நினைவுகள் மற்றும் செயல்கள் எல்லாமே.. மூளை செயலிழந்துவிட்டால், உடலும், நினைவுகளும் அழிந்துவிடும் அழிந்துவிடுவதால், மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை இல்லை என்கிறார்கள் பெரும்பாலானோர்.
மரணம்: ஆனால், சில வருடங்களுக்கு முன்பு, மரணத்துக்கு பிந்தைய மனிதர்களின் வாழ்க்கையை பற்றி ஜெர்மானிய மருத்துவர்கள் குழு ஒன்று ஆய்வு செய்தார்கள்.. அப்போது, மூளை தன்னுடைய செயலை இழந்தாலும் வாழ்க்கை வேறு வடிவில் உள்ளது என்றும், மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை உள்ளது என்றும் மருத்துவ பரிசோதனை மூலம் கண்டறிந்தனர்.
அதுமட்டுமல்ல, பல்வேறு வகைகளில் 100 பேர்களின் மரணத்தறுவாயை அவர்களுக்கு பக்கத்திலேயே இருந்து, அவர்களுக்கு நேரிட்ட அனுபவங்களையும் நவீன ரக அறிவியல் சாதனங்களின் உதவியுடன் கண்டறிந்தார்கள். அதேபோல, உயிரிழந்தவர்கள் திடீரென உயிர்பிழைத்த சம்பவங்களும் உண்டு.
சமீபத்தில்கூட அமெரிக்காவில் ஒரு பெண் இறந்து, மீண்டும் உயிர் பிழைத்திருந்தார்.. புளோரிடாவில் உள்ள போகா ரேடன் பகுதியை சேர்ந்தவர் ரூபி.. இவருக்கு 40 வயதாகிறது.. இவர் நிறைமாத கர்ப்பிணி ஆவார்.. பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ரூபி. அங்கு அவருக்கு, பிரசவம் சிக்கலானதால், ஆபரேஷன் செய்து பார்க்கப்பட்டது.
ரூபியின் ரத்தம்: அப்போது திடீரென அவரது பனிக்குடம் உடைந்து அதிலிருந்த நீர் ரூபியின் ரத்தத்தில் கலந்தது. இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. படிப்படியாக ரூபியின் நாடித் துடிப்பு குறையத் தொடங்கியது. பிறகு நாடித்துடிப்பு மொத்தமாக நின்றுவிட்டது. இதனால், ரூபி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தாரிடம் டாக்டர்கள் அறிவித்து விட்டனர்.
எனினும், ரூபியின் வயிற்றிலிருந்த பெண் குழந்தையை பத்திரமாக டாக்டர்கள் வெளியில் எடுத்தனர். ஆனால், சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு திடீரென ரூபியின் உடலில் அசைவு தெரிந்ததைக் கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்து ரூபியை மீண்டும் அவர்கள் உயிர் பிழைக்க வைத்தார்கள். இந்த சம்பவம் அமெரிக்காவில் ஆச்சரியமாக அப்போது பேசப்பட்டது.
ஆச்சரியம்: அதேபோல எத்தனையோ பேர், தங்கள் மரணத்துக்கு பிறகு என்ன நடந்தது என்பதை ஆச்சரியமும், அதிர்ச்சியும் விலகாமல் பகிர்ந்து கொள்ளும் சம்பவங்களையும் உலக அளவில் காண முடிகிறது. இதோ இப்போதுகூட ஒரு சம்பவம் இதே அமெரிக்காவில் நடந்துள்ளது.
கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண் சார்லோட் ஹோம்ஸ்.. இவருக்கு 68 வயதாகிறது.. 2019ம் ஆண்டு, ஏதோ உடல்நல கோளாறு உள்ளதாக நினைத்துள்ளார்.. இதற்காக வழக்கமான மருத்துவ பரிசோதனையை செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால், அதற்குள் திடீரென அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டது.. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அங்கு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, ஒரு கட்டத்தில் சுய நினைவையே இழந்துவிட்டார்.
டாக்டர்கள்: இதனால் டாக்டர்கள் அந்த பெண்ணை பரிசோதித்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துவிட்டனர்.. ஆனால், அடுத்த 11 நிமிடத்தில் அந்த பெண் திடீரென உயிர்பெற்று எழுந்து உட்கார்ந்துவிட்டார். அதுமட்டுமின்றி, சுயநினைவின்றி இருந்த அந்த 11 நிமிடத்தில், சொர்க்கம், நரகம் இரண்டையுமே பார்த்ததாக கூறி அனைவரையும் தற்போது ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்சார்லோட்.
இதுகுறித்து சார்லோட் சொல்லும்போது, "நான் சொர்க்கம், நரகம் இரண்டுமே பார்த்தேன்.. தேவதைகள், குடும்ப உறுப்பினர்களை பார்த்தேன்.. மரங்களும், புல்லும், இசையுடன் அசைவதை பார்த்தேன்.. பரலோகத்தில் கடவுளை வணங்குவதையும் பார்த்தேன்.
தேவதைகள்: என்னுடைய அப்பா, அம்மா இருவரையும் சந்தித்தேன்.. சொர்க்கத்தில் உள்ள என்னுடைய சகோதரியையும், இறந்த அன்பானவர்களையும் பார்த்தபோது, அவர்கள் என்னை வாழ்த்தினார்கள்.. ஆனால், அவர்கள் நோய்வாய்ப்படவில்லை.. அவர்கள் என் கண்களுக்கு அற்புதமாக தோன்றினார்கள்" என்று பரவசத்துடன் கூறினார் அந்த பெண்.
இப்படித்தான், கடந்த வருடம் இங்கிலாந்தில் வசிக்கும் என்ஆர்ஐ ஒருவர் 7 நிமிடங்கள் சுய நினைவின்றி விழுந்துவிட்டார்.. அவரும் இப்படிதான், சொர்க்கம், நரகத்தை பார்த்த நிகழ்வுகளை அனுபவித்ததாக கூறியிருந்து பலரையும் திணறடித்தார்..
ஆய்வுகள்: இப்போது சார்லோட்டின் அனுபவமும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றிய விவாதத்தை மிகவும் சுவாரஸ்யமாகவே சோஷியல் மீடியாக்களில் கிளப்பிவிட்டுள்ளது. இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட அனுபவம், கருத்துக்களாக இருக்கலாமே தவிர, மரணத்திற்கு பின்பு என்ன நடக்கும்? என்பதற்கு இதுவரை விடை தெரியவில்லை.. ஆராய்ச்சியாளர்களும் இதை விடுவதாக தெரியவில்லை.. ஆய்வுகளும், சோதனைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன...!












Click it and Unblock the Notifications