கர்மா இஸ் எ பூமராங்.. ஐடி ஊழியர்கள் வயிற்றில் அடித்த ட்ரம்ப்! அப்போ அவருக்கே அமெரிக்காவில் சிக்கல்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு ஹெச்-1பி நுழைவு விசா கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் (11,000 டாலர்) இருந்து ரூ.88 லட்சம் (1 லட்சம் டாலர்) வரை உயர்த்தும் உத்தரவை வெளியிட்ட நிலையில், அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ட்ரம்பின் முடிவுக்கு எதிராக அமெரிக்க வர்த்தக சபை (US Chamber of Commerce) சட்டப்படி வழக்கு தொடர்ந்துள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய மென்பொருள் பொறியாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக, வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் எச்1பி (H-1B) விசாவுக்கான விதிமுறைகள் திடீரென கடுமையாக்கப்பட்டுள்ளன.
விசாவுக்கான கட்டணமும் ரூ.1.32 லட்சத்திலிருந்து நேரடியாக ரூ.88 லட்சம் வரை (அதாவது 1 லட்சம் அமெரிக்க டாலர்) உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எச்1பி விசா என்பது அமெரிக்காவில் தற்காலிகமாக வேலை செய்ய வெளிநாட்டிலிருந்து வரும் திறமையான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் முக்கியமான வேலை அனுமதி ஆகும்.

டொனால்ட் டிரம்ப்
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக மென்பொருள் பொறியாளர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், மத போதகர்கள் இந்த விசாவைப் பெற்று அமெரிக்காவில் பணியாற்றுகின்றனர். அமெரிக்காவில் தற்போதுள்ள எச்1பி விசா வைத்திருப்போரில் மூன்றில் ஒரு பங்கு பேர் இந்த துறைகளில் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறி, கடந்த ஆட்சிக் காலத்தில் எச்1பி விசா கட்டணத்தை 2,000 டாலரிலிருந்து முதலில் 5,000 டாலராக உயர்த்தினார்.
H1B கட்டணம்
அதனை அடுத்து அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் ரத்து செய்த நிலையில், மீண்டும் அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற நிலையில், அவரது புதிய உத்தரவின்படி, அதை 1 லட்சம் டாலராக உயர்த்தியிருப்பது உலக தொழில்நுட்ப உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த திடீர் உயர்வு காரணமாக, அமெரிக்காவில் வேலை செய்ய நினைக்கும் இந்தியர்கள் மட்டுமல்லாமல், இந்திய ஐடி நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ட்ரம்ப் அரசின் இந்த முடிவை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் இணைந்து சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
அமெரிக்க வர்த்தக சபை வழக்கு
இந்நிலையில் ட்ரம்பின் முடிவுக்கு எதிராக அமெரிக்க வர்த்தக சபை சட்டப்படி வழக்கு தொடர்ந்துள்ளது. கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு சட்டத்திற்கு மாறாகவும், நாடாளுமன்ற விரோதமானது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஹெச்-1பி விசா அமெரிக்க தொழில் நிறுவனங்களுக்கு திறமையான வெளிநாட்டு பணியாளர்களை ஆண்டுக்கு 85,000 பேர் வரை பணியமர்த்த அனுமதிக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த தீர்மானம் எடுக்க இருந்தது. இதனை மீறி, விசா கட்டணத்தை பன்மடங்கு உயர்த்துவது சட்டப்படி அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறுவதாக சபை வாதிட்டுள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்கள்
இதுதொடர்பாக பேசியுள்ள அமெரிக்க வர்த்தக சபை செயல் துணைத் தலைவர் நீல் பிராட்லி கூறியுள்ளார். "டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, திறமையான பணியாளர்களை குறைக்கும். எனவே, அமெரிக்காவுக்கு போட்டியாகச் செயல்படும் நாடுகள் புதிய திறமையான பணியாளர்களை ஈர்க்கும் வாய்ப்பு பெறும்" என்று தெரிவித்துள்ளார். ஹெச்-1பி விசா கட்டண உயர்வு அமெரிக்காவின் தொழில்நுட்ப வர்த்தக சூழலிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனா "கே-விசா" எனும் புதிய விசா திட்டத்தை அறிமுகப்படுத்தி, திறமையான வெளிநாட்டு நிபுணர்களை ஈர்க்கும் முயற்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications