ஒரு லேப்டாப்பால் வந்த வினை.. 51 உளவு அதிகாரிகளின் ப்யூசை பிடுங்கிய டிரம்ப்! கதி கலங்கி நிற்கும் சிஐஏ
நியுயார்க்: சிஐஏ உளவு அமைப்பை சேர்ந்த 51 உளவு அதிகாரிகளின் security clearanceஐ.. அதாவது அவர்கள் சிஐஏ அலுவலகம் உள்ளே பல்வேறு பணிகளை செய்வதற்காக வழங்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அனுமதியை டிரம்ப் பறித்து உள்ளார்.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற சுமார் 1-2 மணிநேரத்திற்குப் பிறகு, செனட் புலனாய்வுக் குழு ஜான் ராட்க்ளிஃப்பை சிஐஏ இயக்குநராக நியமித்து உத்தரவிட்டு உள்ளது. அவரின் பதவி ஏற்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் பிடன் மகன் ஹண்டர் பிடன் மீதான வழக்கில் பொய்யான சாட்சி கூறியதாக புகார் வைக்கப்பட்ட 51 உளவு அதிகாரிகளின் ப்யூசை பிடுங்கி உள்ளார் டொனால்ட் டிரம்ப்.

என்ன வழக்கு அது:
ஒபாமா ஆட்சி காலத்தில் துணை அதிபராக இருந்த பிடன் செய்த முறைகேடு தொடர்பான ஆவணங்கள் பிடன் மகன் ஹண்டர் பிடன் லேப்டாப்பில் இருந்ததாக புகார் வைக்கப்பட்டதே இந்த வழக்கின் பிரதானம்.
இந்த லேப்டாப் மர்ம நபர் ஒருவர் மூலம் அமெரிக்க ஊடகங்களுக்கு வழங்கப்பட அதில் இருந்த பல தகவல்கள் கசிந்தன.
முதல் விஷயம் உக்ரைன் நாட்டுடன் அரசியல் ரீதியாக பிடன் தவறான ஒப்பந்தங்களை செய்தார், நிறைய பிஸ்னஸ் டீலிங்கை செய்தார், இதன் மூலம் அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல் செய்தார் என்பது புகார்.
அதோடு ஹண்டர் பிடன் அந்த கணினியில் சிறுமிகளின் அந்தரங்க வீடியோக்களை வைத்து இருந்தார். பல சிறுமிகளின், பெரிய தலைவர்களின் வீடியோக்கள் இருந்ததாகவும் புகார் வைக்கப்பட்டது.
இந்த புகார்களை பிடன் - ஹண்டர் பிடன் இருவரும் மறுத்தனர்.
இந்த வழக்கில் அந்த லேப்டாப் ஹண்டர் பிடன் லேப்டாப் என்று உறுதி செய்யப்பட்டது.
ஆனால் பிடன் செய்த முறைகேடு தொடர்பான ஆவணங்கள் அதில் இல்லை என்றும் உக்ரைன் நாட்டுடன் அரசியல் ரீதியாக பிடன் தவறான ஒப்பந்தங்களை செய்தார், நிறைய பிஸ்னஸ் டீலிங்கை செய்தார் என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் இல்லை என்றும் கூறப்பட்டது.
இந்த வழக்கில் நிறைய சாட்சிகள் வைக்கப்பட்டன. பிடன் அதிபராக இருந்த சமயத்திலேயே வழக்கு விசாரணை 2024ல் நடந்தது. இதில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அதன்பின் ஜோ பிடன் தனது மகனை அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தி மன்னித்தார். அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர் ஆட்சியை விட்டு செல்லும் முன் பொதுவாக சில குற்றவாளிகளை தண்டிக்க முடியும். இந்த முறை ஜோ பிடன் இதை பயன்படுத்தி பலாத்கார குற்றத்தில் கைது செய்யப்பட்ட தனது மகன் உட்பட பலரை விடுதலை செய்துள்ளார். முக்கியமாக மரண தண்டனையில் இருக்கும் பலருக்கும் கூட மன்னிப்பு வழங்கி உள்ளார்.
ஜனாதிபதி பிடன், தனது பதவியில் இருக்கும் கடைசி மாதத்தில், மரணதண்டனைக்காக காத்திருக்கும் 40 கைதிகளில் 37 பேரின் தண்டனைகளை குறைத்து உள்ளார். பரோலில் செல்ல வாய்ப்பு இல்லாத ஆயுள் தண்டனை கைதிகளாக இவர்களை அறிவித்தார்.
இப்படிப்பட்ட விடுவிக்கப்பட்டவர்களில் 9 பேர் சக கைதிகளைக் கொன்ற குற்றத்திற்காகவும், 4 பேர் வங்கிக் கொள்ளையின் போது செய்யப்பட்ட கொலைகளுக்காகவும், சிறைக் காவலரைக் கொன்றதற்காகவும் சிறையில் இருந்தனர். இவர்களைத்தான் பிடன் விடுதலை செய்துள்ளார். அதோடு பலாத்கார குற்றத்தில் கைது செய்யப்பட்ட தனது மகன் உட்பட பலரை விடுதலை செய்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதும் பல பேருக்கு தூக்கு தண்டனை கொடுக்க போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
நீக்கம்:
இந்த வழக்கில் சிஐஏ அதிகாரிகள் சிலர் பிடன் குடும்பத்திற்கு ஆதரவாக பொய் சாட்சியம் சொன்னதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் சிஐஏ உளவு அமைப்பை சேர்ந்த 51 உளவு அதிகாரிகளின் security clearanceஐ.. அதாவது அவர்கள் சிஐஏ அலுவலகம் உள்ளே பல்வேறு பணிகளை செய்வதற்காக வழங்கப்பட்டு உள்ள பாதுகாப்பு அனுமதியை டிரம்ப் பறித்து உள்ளார். பொய் சாட்சி சொன்னவர்களின் பவரை டிரம்ப் பறித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications