அடி வெளுத்த கனடா.. பருத்தி மூட்டை-குடோன் கதை! நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் டிரம்ப்
நியூயார்க்: கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதிக்கும் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். பதிலுக்கு கனடாவும் கூடுதல் வரியை அறிவித்த நிலையில், தற்போது இந்த வரியை திரும்பப்பெற டிரம்ப் யோசித்து வருகிறார்.
நாளை இது தொடர்பாக அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக டிரம்ப்பின் வர்த்தக செயலாளர் தெரிவித்திருக்கிறார். இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே! என பலரும் கூறி வருகின்றனர்.

நேற்று ஃபாக்ஸ் நியூஸுக்கு டிரம்ப்பின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் அளித்த பேட்டியில் கூறியதாவது, "கனடாவுக்கு விதிக்கப்பட்ட வரியை திரும்ப பெற வாய்ப்பு இருக்கிறது. மெக்சிகோவுடனும் சமாதானமாக போகவும் சான்ஸ் இருக்கிறது. டிரம்ப் நிவாரணத்தை பரிசீலித்து வருகிறார். அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்த (USMCA) விதிகளின் அடிப்படையில் சமாதான நடவடிக்கைகள் தொடரும்.
மிகச்சரியாக சொல்வதெனில் ஏப்ரல் 2ம் தேதி இந்த வரி விவகாரங்கள் முடிவுக்கு வரும். கனடா மற்றும் மெக்சிகோவுடன் சமாதானமாக போக முயன்றாலும், முழுமையான வரி ரத்து எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. நாளை இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவித்திருக்கிறார்.
டிரம்ப்பின் நடவடிக்கைகள் வேலியில் போன ஓணானை தூக்கி வேட்டியில் விட்ட கதையாக இருக்கிறது. எதுக்கு இந்த வரியை அறிவிக்கனும்? எதுக்கு திரும்ப பெறனும்? தேவையில்லாத ஆணி இது என்று பலரும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
வரிக்கு டிரம்ப் சொல்லும் காரணம்:
கனடாவுடனும், மெக்சிகோவுடனும் அமெரிக்கா தனது எல்லையை பகிர்ந்துகொள்கிறது. இந்த எல்லை வழியாக சட்டவிரோதமாக பலர் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள் என்று தொடர்ந்து டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார். இதனை கனடா, மெக்சிகோ தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும், மட்டுமல்லாது இந்த எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தல் அதிக அளவில் நடக்கிறது என்றும் விமர்சித்திருந்தார். இதற்காக இரு நாடுகளின் பொருட்களுக்கும் தலா 25% கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தார்.
அமெரிக்காவுக்கு பாதிப்பு:
அமெரிக்காவின் மிக்பெரிய வர்த்தக கூட்டாளியாக கனடாவும், மெக்சிகோவும் இருக்கிறது. அமெரிக்காவில் தொழிலாளர் சட்டத்தின்படி, அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதிக கூலி கொடுக்க வேண்டும். எனவே, தொழில் நிறுவனங்கள் கனடாவிலும், மெக்சிகோவிலும் கடையை திறந்து உற்பத்தி செய்து, அதை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றன. அமெரிக்கா பக்கமாக இருப்பதால் ஏற்றுமதி செலவு குறைவு.
அதேபோல உணவு பொருட்கள் தொடங்கி ஆட்டோமொபைல் பொருட்கள் வரை பலவும் இந்த நாடுகளிலிருந்துதான் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது. இந்த கூடுதல் வரி காரணமாக அமெரிக்காவில் இந்நாட்டின் பொருட்களின் விலை உயரும். இதனால் வர்த்தகம் பாதிக்கப்படும்.
பதில் வரியை விதித்த கனடா:
இதையெல்லாம் பார்த்து சூடான கனடா, அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரியை விதித்தது. அதாவது "அமெரிக்காவிலிருந்து கனடாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் சுமார் ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிக்கப்படும். அமெரிக்கா தனது வரி நடவடிக்கையை வாபஸ் பெறாவிட்டால், சுமார் ரூ.7.6 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களுக்கு வரி விரிவு படுத்தப்படும்" என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருந்தார்.
மெக்சிகோவை பொறுத்தவரை பேச்சுவார்த்தைக்கு வர தயார் என்று கூறி பம்பிவிட்டது. ஆனால் சீனா கூடுதல் வரியை விதித்து சீறியது. இதனால் வர்த்தக போர் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. சூழலை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், இல்லையெனில் அமெரிக்க பொருளாதாரத்திற்குதான் ஆபத்து என்று நிபுணர்கள் எச்சரித்தனர். இப்படி இருக்கையில்தான் கனடா, மெக்சிகோ மீதான வரியை ரத்து செய்ய டிரம்ப் யோசித்து வருவதாக அவரது வர்த்தக ஆலோசகர் கூறியிருக்கிறார்.
டிரம்ப்பின் பருத்தி மூட்டை - குடோன் நடவடிக்கை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!
-
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications