“ஸ்மார்ட் மனிதர்..” வடகொரிய அதிபர் குறித்து டிரம்ப் சொன்ன வார்த்தை! பின்னால் இருக்கும் பெரிய பிளான்
நியூயார்க்: அமெரிக்காவும், வடகொரியாவும் பாம்பும் கீரியுமாக இருந்து வரும் நிலையில், வடகொரிய அதிபருடன் பேச திட்டமிட்டிருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். இது ரஷ்யா-உக்ரைன் போரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) செய்தி ஊடகத்தில் நேற்று டிரம்ப் பேட்டி கொடுத்திருந்தார். இந்த பேட்டியில், வடகொரிய அதிபருடன் பேசுவதற்கு ஏதேனும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் "அதிபர் கிம் ஜாங் உன் உடன் நிச்சயம் பேசுவேன். அவர் ஸ்மார்ட் மனிதர். மட்டுமல்லாது மதவெறி இல்லாத தலைவரும் கூட. நான் அவருடன் பழகியிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

டிரம்ப் இப்படி பேசியதற்கு பின்னர் பல நோக்கங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை டிரம்ப்-கிம் ஜாங் உன் சந்தித்தால் அது ரஷ்ய-உக்ரைன் போரை வேறு ஒரு கட்டத்திற்கு நகர்த்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
போருக்கு முக்கிய காரணம் நேட்டோதான். சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அமெரிக்காதான் இதனை உருவாக்கியது. ஆனால், இன்று இந்த நேட்டோவிலிருந்தே அமெரிக்கா வெளியேற உள்ளதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். அமெரிக்காவின் நட்பு நாடுகள் நேட்டோவில் இருக்கின்றன. இதனை பாதுகாக்க அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவுக்கு பணத்தை வாரி கொடுக்கிறது.
அதாவது நேட்டோவில் அமெரிக்கா உட்பட 32 நாடுகள் இருக்கின்றன. ஆனால் நேட்டோவுக்கு வரும் மொத்த பணத்தில் மூன்றில் இரண்டு பங்கை அமெரிக்காதான் கொடுக்கிறது. கடந்த 2024ம் ஆண்டு நேட்டோவுக்கு 1,473.7 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.127 லட்சம் கோடி) தொகை நிதியாக வந்திருக்கிறது. இதில் அமெரிக்கா $967 பில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.83 லட்சம் கோடி) கொடுத்திருக்கிறது. மற்ற 31 நாடுகள் $506.7 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையைதான் கொடுத்திருக்கின்றன.
ஆக நேட்டோவுக்கு கொடுப்பது தண்ட செலவு என டிரம்ப் அறிவித்திருக்கிறார். உங்க நாட்டை காப்பாற்ற நாங்க ஏன் இவ்வளவு பணத்தை கொடுக்கனும்? எங்க நாட்டை காப்பாற்ற மட்டும் நாங்கள் பணத்தை கொடுத்தால் போதுமானது என்று கூறி, நேட்டோவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்.
அது மட்டும் நடந்துவிட்டால் உக்ரைன் இந்த போரில் தோற்றுவிடும். மறுபுறம் ரஷ்யாவுக்கு ஆதரவாக சுமார் 11,000 வடகொரிய வீரர்கள் போரில் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். ஒருவேளை டிரம்ப், கிம் ஜாங் உன்-ஐ சந்தித்தால் இதைப்பற்றி பேச வாய்ப்பு இருக்கிறது.
மட்டுமல்லாது அமெரிக்க வரலாற்றில், கொரிய போருக்கு பிறகு வடகொரிய அதிபரை சந்தித்த ஒரே அதிபர் என்கிற பெருமையை கடந்த 2019ம் ஆண்டு இவர் பெற்றிருந்தார். இந்த உறவை பலப்படுத்தி, வடகொரியாவுடன் வர்த்தகம் செய்ய முடிந்த அளவுக்கு டிரம்ப் முயற்சிகளை மேற்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.
எது எப்படியோ இரு நாடுகளும் பேசி ஒரு ஒற்றுமைக்குள் வந்தால், மொத்த உலகத்துக்குமே நல்லதுதான்.
-
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இருளில் மூழ்கும் ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியால் 48 மணிநேர கெடுவுடன் டிரம்ப் மிரட்டல்! ஷாக் அறிவிப்பு -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
ஈரானின் கதை முடிந்தது... 3 வார போரை முடிக்கப்போகிறோம்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு -
"கோழைகள்.." கண்கள் சிவந்த டிரம்ப்.. நேட்டோவில் இருந்து வெளியேறும் அமெரிக்கா? சரமாரி பாய்ச்சல் -
எல்லா பிரச்சினைக்கும் டிரம்ப் தான் காரணம்.. சரியா திட்டமிடல.. சிஐஏவின் ex தலைவர் காட்டம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications