நான் வெள்ளை மாளிகையில் தனியாக இருக்கிறேன்.. சிங்கிளாக புலம்பும் டிரம்ப்.. ஏன் தெரியுமா?

நான் வெள்ளை மாளிகையில் மிகவும் தனியாக பாவமாக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நான் வெள்ளை மாளிகையில் மிகவும் தனியாக பாவமாக இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.

கிறிஸ்துவர்கள் அதிகம் வாழும் அமெரிக்காவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மட்டும் கிறிஸ்துமசை சந்தோசமாக கொண்டாடவில்லை என்று கூறியுள்ளார்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கலின் போது, அமெரிக்க அதிபர் அமெரிக்காவின் எல்லையை சுற்றி சுவர் எழுப்ப வேண்டி பணம் ஒதுக்க திட்டமிட்டு இருந்தார். மெக்சிகோ எல்லையில் சுவரை எழுப்புவதற்காக பணம் ஒதுக்க திட்டமிட்டு இருந்தார். இதனால் டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் பெரிய பிரச்சனை ஏற்பட்டது.

முடங்கியது

முடங்கியது

இதனால் 75 சதவிகித அரசு அமைப்புகளுக்கு பணம் ஒதுக்கப்படவில்லை. சுவர் எழுப்பும் திட்டத்திற்கு பலர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால் அமெரிக்க அரசு பாதியாக முடங்குவதாக அறிவிக்கப்பட்டது. 8 லட்சத்திற்கும் அதிகமானோர் இதனால் நீண்ட விடுமுறை பெற்று வீடு திரும்பினார்கள். இந்த ஷட் டவுன் எப்போது சரியாகும் என்று விவரங்கள் வெளியாகவில்லை.

அதிபர் வருத்தம்

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று கிறிஸ்துமஸை முன்னிட்டு டிவிட் ஒன்று செய்துள்ளார். அதில் ''நான் தனியாக இருக்கிறேன் (பாவம்). வெள்ளை மாளிகையில் ஜனநாயக கட்சியினர் மீண்டும் வந்து பார்டர் ஒப்பந்தத்திற்கு கையெழுத்து இடுவார்கள் என்று தனியாக காத்து இருக்கிறேன். அவர்களுக்கு தெரியவில்லை, எல்லையில் சுவர் எழுப்புவதை விட இப்படி அவர்கள் அரசை முடக்குவதால்தான் அதிக செலவு இழப்பு ஏற்படுகிறது என்று'' என அவர் தனது டிவிட்டரில் கூறியுள்ளார்.

மக்கள் கண்டனம்

மக்கள் கண்டனம்

அதிபரின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது. பலரும் அவரை கிண்டல் செய்து டிவிட் செய்து வருகிறார்கள். டிரம்ப்பின் விடாப்பிடி தனத்தால்தான் இப்படி நடக்கிறது என்று மக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+