Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பவே எச்சரித்த டிரம்ப்.. சிக்கிய தென்னாப்பிரிக்கா! அடுத்து இந்தியாதான்!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: 'பிரிக்ஸ்' நாடுகள் மீது கண் வைத்திருந்த டிரம்ப், சமீபத்தில் அந்நாடுகளுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபடும் என்று எச்சரித்திருந்தார். இந்த எச்சரிக்கைக்கு முதல் பலிகடாவாக தென்னாப்பிரிக்கா சிக்கியிக்கிறது. விரைவில் இந்தியா மீதும் டிரம்ப் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, அர்ஜென்டினா, ஈரான், சவுதி அரேபியா, எகிப்து, எத்தியோப்பியா உட்பட 10 நாடுகள் சேர்ந்த கூட்டமைப்புதான் பிரிக்ஸ் (BRICS). இந்த கூட்டமைப்பு அமெரிக்க பொருளாதாரத்திற்கு சவலாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக சர்வதேச வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலரை பயன்படுத்துவதற்கு பதில், பிரிக்ஸ் நாடுகளுக்கு என ஒரு கரன்சியை உருவாக்கலாம் என திட்டமிட்டு வருகிறது.

donald trump us south africa

இதற்காக டிரம்ப் கடுமையாக எச்சரித்திருந்தார். பிரிக்ஸ் கரன்சி என ஒன்று உருவாக்கப்பட்டால் அமெரிக்காவுடன் பொருளாதார உறவை வைத்துக்கொள்ள முடியாது என்று வார்னிங் செய்திருந்தார்.

இப்போது வரை பிரிக்ஸ் கரன்சி உருவாக்கப்படவில்லை. ஆனால் விரைவில் உருவாக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே டிரம்ப் கண்களில் விளக்கு எண்ணெய்யை ஊற்றிக்கொண்டு பிரிக்ஸ் நாடுகளை நோட்டம் விட்டு வருகிறார். இந்த கண்காணிப்பில் தற்போது தென்னாப்பிரிக்கா சிக்கியுள்ளது.

அந்நாட்டில் 'நிலச்சீர்திருத்த சட்டம்' தீவிரமாக அமலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது கடந்த 1948-1994 வரை தென்னாப்பிரிக்காவில் காலனித்துவ, நிறவெறி ஆட்சி உச்சத்தில் இருந்தது. ஐரோப்பாவில் இருந்த வெள்ளையர்கள், ஆப்பிரிக்காவில் தங்களுக்கு என நிலங்களை வளைத்து போட்டு வைத்திருந்தார்கள். இந்த நிலங்களை இவர்களால் நேரடியாக கண்காணிக்கவோ பராமரிக்கவோ முடியவில்லை.

எனவே தங்களின் பிரதிநிதிகளாக வெள்ளை ஆப்பிரிக்கர்களை தேர்ந்தெடுத்தார்கள். உண்மையில் ஆப்பிரிக்க பூர்வகுடிகளில் யாரும் வெள்ளை கிடையாது. இந்த வெள்ளை ஆப்பிரிக்கர்கள் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள். இவர்கள் ஆப்பிரிக்க மொத்த மக்கள் தொகையில் 10%க்கும் குறைவாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களிடம் இந்நாட்டில் உள்ள மொத்த விவசாய நிலங்களில் 72%க்கும் அதிகமான நிலம் இருக்கிறது. இது ஆப்பிரிக்காவின் நீண்ட நாள் பிரச்சனை.

வெள்ளை ஆப்பிரிக்கர்கள், நிலத்தில் வரும் லாபத்தை தங்கள் ஐரோப்பிய முதலாளிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் பூர்வகுடி ஆப்பிரிக்கர்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள். எனவே இந்த நிலத்தை பிடுங்கி, பூர்வகுடி ஆப்பிரிக்க மக்களுக்கு வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டது. இதற்காக கடந்த காலங்களில் நாடாளுமன்றங்களில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. தீர்மானம் தோல்வியடைந்தது. இருப்பினும் அந்நாட்டு அரசியலமைப்பு சட்டம் 15ல் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இந்த திருத்தம் மூலம் வெள்ளை ஆப்பிரிக்கர்களிடமிருந்து நிலம் பிடுங்கப்படும். இதற்காக எந்த இழப்பீடும் அரசு வழங்காது. பிடுங்கப்பட்ட நிலம், கறுப்பு ஆப்பிரிக்கர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும். இதற்கான முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

ஆனால், இப்படி செய்ததால் அமெரிக்கா உங்களுக்கு எந்த நிதியையும் கொடுக்காது என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். நிலச்சீர்திருத்தத்தை ஆப்பிரிக்கா அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு எந்த உதவியையும் அமெரிக்கா செய்யாது என்று கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு கடந்த 2023ம் ஆண்டு மட்டும் 440 மில்லியன் டாலர்களை (ஏறத்தாழ ரூ.38 ஆயிரம் கோடி) அமெரிக்கா உதவியாக வழங்கியிருந்தது. 2025ம் ஆண்டுக்கான நிதியை அமெரிக்கா நிறுத்துவதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகியவை பாதிக்கப்படும்.

இந்த விஷயம் குறித்து பேசும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள், உண்மையில் நிலச்சீர்திருத்தம் குறித்து டிரம்ப்புக்கு கவலை இல்லை. மாறாக பிரிக்ஸ் கரன்சியில், பிரிக்ஸ் நாடுகள் நுழைந்துவிட கூடாது என்பதற்காக தென்னாப்பரிக்காவை வைத்து மற்ற நாடுகளை எச்சரிக்க பார்க்கிறார் என்று கூறியுள்ளனர். இன்று தென்னாப்பிரிக்கா சிக்கியிருக்கிறது. நாளை இந்தியாவை ஏதாவது ஒரு காரணம் சொல்லி டிரம்ப் குற்றம்சாட்டவும், நமக்கான நிதியை வெட்டவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் எச்சரிக்கின்றனர்.

தென்னாப்பிரிக்காவின் நிலச்சீர்திருத்தம் குறித்தும், டிரம்பின் எச்சரிக்கை குறித்தும் உங்கள் கருத்து என்ன?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+