கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன..! டிரம்ப்பால் அமெரிக்காவுக்கு விழுந்த பேரிடி! இந்தியாவுக்கும் சிக்கல்
நியூயார்க்: அண்டை நாடுகள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் கூடுதல் வரி காரணமாக, அந்நாட்டின் பங்கு சந்தை சரிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. மறுபுறம் இது இந்தியாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதித்திருப்பது பொருளாதார போரை தொடங்குவதற்கான ஆரம்ப அறிகுறியாகும். இப்படி இருக்கையில் இன்று காலை நிலவரப்படி அமெரிக்க பங்கு சந்தை சரிவை சந்தித்திருக்கிறது.

காலை 9.30 நிலவரப்படி அமெரிக்க பங்கு சந்தை சரிவடைந்து வருவதாக பிரபல கணிப்பாளர்களான டவ் ஜோன்ஸ் மற்றும் நாஸ்டாக் (The Dow Jones and Nasdaq) கணித்திருக்கிறது.
அமெரிக்காவின் தொழில்நுட்பம், நிதி, சுகாதாரம், நுகர்வோர் பொருட்கள் ஆகிய துறைகளில் 30க்கும் மேற்பட்ட முக்கிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இதனை ப்ளு சிப் கம்பெனிகள் என்று அழைப்பார்கள். இந்த நிறுவனங்களின் பங்குகளை வைத்துதான் அமெரிக்க ஸ்டாக் மார்க்கெட் ஒவ்வொரு நாளும் தீர்மானிக்கப்படுகிறது. இப்படியான 30 நிறுவனங்களை டவ் ஜோன்ஸ் (The Dow Jones) கண்காணித்து வருகிறது.
மறுபுறம் நாஸ்டாக் (Nasdaq), அமெரிக்காவுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய நிறுவனங்களான அமேசான், ஆப்பிள், மைக்சோசாப்ட், பேஸ்புக் உள்ளிட்டவற்றின் பங்குகளை கண்காணித்து வருகிறது.
இந்த கண்காணிப்பு நிறுவனங்கள்தான் அமெரிக்காவின் பங்குசந்தை சரிந்து வருவதை கூறியிருக்கிறது. இனி வரும் நாட்களில் முக்கிய நிறுவனங்களின் பங்குகள் 650 புள்ளிகள் வரை சரியும் என்றும் இவை கணித்திருக்கின்றன.
இதற்கு முக்கிய காரணமாக டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை பார்க்கப்படுகிறது. மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவின் பொருட்களுக்கு அதிக விரி விதிக்கப்பட்டதன் மூலம், அமெரிக்காவில் விற்கப்படும் இந்த நாட்டின் பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. இதனால் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இது இனி வரும் நாட்களில் பங்கு சந்தையில் பிரதிபலிக்கும் என்பதைதான் டவ் ஜோன்ஸ் மற்றும் நாஸ்டாக் கணித்து கூறியிருக்கிறது.
சரி இதெல்லாம் அமெரிக்காவோட பிரச்சனை. இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? என்று கேட்கிறீர்களா! இந்தியாவுக்கும் பாதிப்பு இருக்கிறது. மேலே சொன்னதை போல அமெரிக்காவில் பண வீக்கம் உயரும்போது, அதை சமாளிக்க அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதங்களை உயர்த்தும். இதனால் டாலரின் மதிப்பு உயரும்.
ஆஸ்திரேலியாவிலிருந்தும், இந்தோனேஷியாவிலிருந்தும், ஜெர்மனியிலிருந்தும் இன்னும் பல நாடுகளிலிருந்தும் இந்தியா பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்கிறது. இவை அனைத்திற்கும் அமெரிக்க டாலர்தான் கொடுக்கப்படுகிறது. நமக்கு டாலர் வேண்டும் எனில், காசு கொடுத்துதான் வாங்க வேண்டும். இப்போது டாலரின் விலை உயர்ந்தால் அது நம்மைதான் பாதிக்கும். இந்தியாவின் அந்நிய செலாவனி கடுமையாக பாதிக்கும். நிலைமை இப்படியே போனால் இலங்கை மாதிரி நமது நாடு ஆகிவிடும்.
எனவே டிரம்ப் மற்ற நாடுகள் மீது விதிக்கும் வரியை ரத்து செய்ய வேண்டும். அல்லது இந்திய டாலருக்கு மாற்றாக வேறு ஒரு கரன்சியை தேட வேண்டும். இதற்கு நமக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் பிரிக்ஸ் கரன்சிதான்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications