‛கிப்ட்' மாறியதால் தான் மோதலே வெடித்தது! டிரம்புடன் நடந்த பிரச்சனையின் பின்னணி.. ஜெலன்ஸ்கி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குழுவை வெள்ளை மாளிகையில் இருந்து பாதியில் வெளியேற்றினார் டொனால்ட் டிரம்ப். இந்த மோதலுக்கு ‛கிப்ட்' மாறியது தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி செய்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் டிரம்ப் பேசி உள்ளார். அதேபோல் உக்ரைனுடனும் அமெரிக்கா பேசி வருகிறது.

இதற்கிடையே தான் சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் சந்தித்து பேசினர். உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் இருவரும் விவாதித்தனர். அதன்பிறகு கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கடும் மோதல் ஏற்பட்டது.

ukraine-president-zelenskyys-last-minute-choice-of-wrong-gift-instead-of-world-championship-belt

போர் நிறுத்தம் தொடர்பான தகவல்களை பரிமாறியபோது அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அதிபர் டிரம்ப் ஆகியோரின் பேச்சுக்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நேரலையில் இருநாட்டு தலைவர்களும் மோதிக்கொண்டனர். கோபத்தின் உச்சிக்கு போன டிரம்ப், உக்ரைன் அதிபரையும் அவரது குழுவினரையும் வெள்ளை மாளிகையில் இருந்து அதிரடியாக வெளியேற்றினார்.

இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்தபோது ஏற்பட்ட பிரச்சனை குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி விளக்கம் அளித்துள்ளார். அதோடு டொனால்ட் டிரம்பை சந்திப்பின்போது பாக்ஸிங் சாம்பியன்ஷிப் பெல்ட்டை எடுத்து சென்றது பற்றியும் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டைம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: வெள்ளை மாளிகைக்கு நான் கொண்டு சென்ற பெல்ட் என்பது ஹெவிவெயிட் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலெக்சாண்டர் உசிக் (உக்ரைன் பாக்சர்) வென்றதாகும். இதனை டொனால்ட் டிரம்பிற்கு நல்லெண்ணம் அடிப்படையில் பரிசளிக்க திட்டமிட்டு கொண்டு சென்றேன்.

ஆனால் மீட்டிங் தொடங்கியதும் டொனால்ட் டிரம்ப் அந்த பெல்ட்டை எடுக்கவில்லை. அதற்கு பதிலாக உக்ரைன் போர் கைதிகளின் கிராபிஃக் படங்கள் அடங்கியதை தான் அவர் தேர்வு செய்தார். அதனை டிரம்ப் பார்த்து. இது கடினமான சூழல்'' உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி முதலிலேயே அந்த பெல்ட்டை டொனால்ட் டிரம்பிடம் கொடுத்து இருந்தால் பிரச்சனை என்பது வந்திருக்காது. ஏனென்றால் அந்த போட்டோக்களை டிரம்ப் பார்த்த பிறகு தான் துணை அதிபர் ஜேடி வான்ஸ், ஜெலன்ஸ்கி அமெரிக்காவை குற்றம்சாட்டுகிறார். இந்த வீரர்களின் நிலைமைக்கு அமெரிக்கா தான் காரணம் என்று கூறினர். அதன்பிறகு தான் பிரச்சனை வெடித்தது. இதற்கிடையே தான் ஜெலன்ஸ்கி இப்படி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ‛‛அவருக்கும் (ஜேடிவான்ஸ்) குடும்பம் உள்ளது. அன்புக்குரியவர்கள் உள்ளனர். குழந்தைகள் உள்ளனர். ஒவ்வொரு நபர்களின் உணர்வுகளையும் மற்றவர்கள் உணர வேண்டும். மதிப்பு கொடுக்க வேண்டும். நான் காட்ட விரும்பியது என் நாட்டின் சூழலை தான். இந்த உரையாடலில் நான் எனது நாட்டின் கண்ணியத்தை பாதுகாத்தேன்'' என்று கூறினார்.

மேலும் வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் சந்திப்பின்போது மோதல் ஏற்பட்டதால் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குழுவினர் பாதியில் வெளியேறினர். ஜெலன்ஸ்கி ஒலெக்சண்டர் உசிக்கின் பெல்ட்டை அங்கேயே விட்டு சென்றார். அந்த பெல்ட்டின் தற்போதைய நிலைமை என்ன என்பது தெரியவில்லை. இதுபற்றி ஜெலன்ஸ்கியிடம் கேட்டபோது, ‛‛அந்த பெல்ட் வெள்ளை மாளிகையிலேயே இருக்கலாம்'' என்றார்.

இதுபற்றி வெள்ளை மாளிகையிடம் கேட்டபோது, ‛‛ஜெலன்ஸ்கி கொண்டு வந்த பெல்ட் என்பது அதிபர் டிரம்ப்பின் டைனிங் அறையில் உள்ள மற்ற பரிசுகளுடன் வைக்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+