நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லட்சக்கணக்கான உயிர்களை பாதுகாக்க, இயல்பு நிலை திரும்ப ஒரே வழி தடுப்பு மருந்துதான்.. ஐநா

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நீங்கி இயல்பு நிலை திரும்ப வேண்டுமானால் கோவிட் 19க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. இந்த நோய் ஒரு தொற்று நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் பாதிப்புகளையும் தடுக்க போராடி வருகிறார்கள்.

UN Chief says only a Covid 19 vaccine brings back the normalcy

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதுகுறித்து ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியா குட்டரெஸ் புதன்கிழமை கூறுகையில் கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாப்பான மற்றும் நல்ல விளைவுகளை கொண்ட தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டும்.

அவ்வாறு கண்டுபிடித்தால் மட்டுமே உலகில் இயல்பு நிலை திரும்பும். அப்போதுதான் லட்சக்கணக்கான உயிர்களை பாதுகாக்க முடியும் என ஐநா உறுப்பினர்களுடனான வீடியோ கான்பிரன்சிங்கில் குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

மர்ம நபர் அளித்த டிப்ஸ்.. மூட்டையில் இருந்த 17 பிணங்கள்.. அமெரிக்காவில் தொடரும் கொரோனா கொடூரம்! மர்ம நபர் அளித்த டிப்ஸ்.. மூட்டையில் இருந்த 17 பிணங்கள்.. அமெரிக்காவில் தொடரும் கொரோனா கொடூரம்!

Recommended Video

    7 விதமான தடுப்பூசி... கொரோனாவுக்கு எதிராக களமிறங்கிய பில்கேட்ஸ்

    மேலும் 2020-ஆம் ஆண்டு இறுதிக்குள் கோவிட் 19 தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வேண்டும். இந்த ஊசியை உலகளவில் பயன்படுத்துவதற்குத் தேவையான வேகத்தை அதிகரிக்க சர்வதேச நாடுகள் இணக்கமான ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    English summary
    UN Secretary General Antonio Guterres says that Only a Vaccine against Coronavirus will bring back the normalcy in the world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X