வருத்தம் தருகிறது.. ஸ்டேன் சாமி கஸ்டடி மரணம்.. ஐநா மனித உரிமைகள் ஆணைய தலைவர் வேதனை!
நியூயார்க்: ஸ்டேன் சாமியின் கஸ்டடி மரணத்திற்கு ஐநாவின் மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஸ்டேன் சாமி மரணம் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கிட்டத்தட்ட 7 மாதமாக பெயில் வேண்டி விண்ணப்பித்த ஸ்டேன் சாமி கடைசி வரை பெயில் கிடைக்காமல் நீதிமன்ற காவலிலேயே மரணம் அடைந்துள்ளார்.
2018ல் பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசி அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் கடந்த ஆண்டு ஸ்டேன் சாமி கைது செய்யப்பட்டார். இவரின் உடல்நிலை மோசமான நிலையில் நேற்று மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

மரணம்
இந்த நிலையில் ஸ்டேன் சாமியின் மரணத்திற்கு ஐநாவின் மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த ஆணையத்தின் தலைவர் மிட்சல் பேச்செல்ட், ஸ்டேன் சாமியின் மறைவிற்கு வருத்தம் தருகிறது. பாதிரியார் ஸ்டான் ஸ்வாமியின் மரணம் வேதனையளிக்கிறது.

ஐநா
கருத்து சுதந்திரம் என்னும் உரிமையை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது. ஸ்டேன் சாமி கஸ்டடியில் மறைந்தது வேதனையையும் , அதிர்ச்சியையும் உண்டாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் வருத்தமான செய்தி. இவரின் விடுதலைக்காக நாங்கள் ஏற்கனவே பலமுறை குரல் கொடுத்தோம்.

குரல் கொடுத்தோம்
ஸ்டேன் சாமி பொய்யான புகார்களால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது மிகுந்த வருத்தம் அலிகாக்கிறது. தங்களின் கருத்து உரிமையை வெளிப்படுத்தும் யாரும் ஒரு ஜனநாயக நாட்டில் கைது செய்யப்பட கூடாது. இந்தியாவில் இருந்து வந்திருக்கும் இந்த செய்தி பெரிய வருத்தம் அளிக்கிறது.

கஸ்டடி
ஸ்டேன் சாமி கஸ்டடியில் இறந்துள்ளார். 9 மாதங்கள் சிறையில், தவறு நிரூபிக்கப்படாமல் அவர் இறந்துள்ளது. மனித உரிமை போராளிகள் சிறையிலேயே மரணம் அடைவது கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாதது, என்று ஐநா மனித உரிமைகள் ஆணைய தலைவர் தலைவர் மிட்சல் பேச்செல்ட் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications