இந்திய தூதரக அதிகாரிகளை வெளியேற்றுகிறோமா? மறுப்பு தெரிவித்த அமெரிக்கா!
நியூயார்க்: கனடாவுடன் கைகோர்த்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்க இறங்கியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, அமெரிக்காவிலிருந்து இந்திய தூதுரக அதிகாரிகள் வெளியேற்றப்படுகிறார்கள் என்றும் செய்திகள் வந்தன. இதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் செயல்பாட்டுக்கு மத்திய அரசு தொடர்ந்து முற்றுப்புள்ளி வைத்து வருகிறது. ஆனால், சிலர் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக கனடாவிலிருந்து இந்த செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனை கண்காணித்து வந்த இந்திய அதிகாரிகள், பிரிவினைவாதிகளின் செயல்பாடுகள் குறித்து கனடா அரசுக்கு எச்சரித்திருந்தனர். ஆனால் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு இதனை பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை.

சூழல் இப்படி இருக்கையில், கடந்த ஆண்டு கனடாவில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவதி, நிஜ்ஜார் கொல்லப்பட்டடார். அவரது கொலை வழக்கை கடனா அரசு சிரியஸாக விசாரித்தது. இக்கொலையில் இந்திய தூதரக அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கனடா குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டு இரு நாடுகளுக்கு இடையே பெரும் அதிருப்தியாக வெடித்தது. கடனாவும், இந்தியாவும் அவரவர் நாட்டு தூதர்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். இன்னும் இந்த பஞ்சாயத்துக்கு ஒரு முடிவு வரவில்லை.
இப்படி இருக்கையில், அமெரிக்காவிலும் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுனை, முன்னாள் 'ரா' அதிகாரியான விகாஸ் யாதவ் கொலை செய்ய முயன்றார் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அதாவது பன்னுனை கொலை செய்ய யாதவ் தொழில்முறை கொலையாளியை அணுகியுள்ளார். கடைசியாக ஒருவரிடம் பேரம் பேசியும் முடித்திருக்கிறார். ஆனால், அந்த நபர் அமெரிக்க உளவுத்துறையை சேர்ந்தவர். இப்படியாக விகாஸ் சிக்கியுள்ளார் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இந்நிலையில், கனடாவிலிருந்து இந்திய தூதுரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டதை போல, அமெரிக்காவிலிருந்தும் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுவார்கள் என்று செய்திகள் வெளியாகின. இதனை அமெரிக்கா மறுத்திருக்கிறது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், "அமெரிக்காவிலிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்படுவதாக கூறப்படும் தகவல்கள் உண்மையில்லை. இப்போதுவரை அப்படியான எந்த நடவடிக்கையையும் அமெரிக்கா எடுக்கவில்லை" என்று கூறியுள்ளார். அதேபோல, விகாஸ் நாடு கடத்தப்படுவாரா? என்றும் செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "இது முழுக்க முழுக்க அமெரிக்க நீதித்துறை சார்ந்த விஷயம். இதில் நீதிமன்றம்தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும்" என்று கூறியுள்ளார்.
கொலை முயற்சி வழக்கில் விகாஸ் யாதவ் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்றும் அமெரிக்கா சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army!












Click it and Unblock the Notifications