2023-ம் ஆண்டுக்கான ஹெச்.1 பி விசாவுக்கான முன்பதிவு மார்ச் 1-ல் தொடக்கம்
நியூயார்க்: 2023-ம் ஆண்டுக்கான ஹெச்.1 பி (எச்1 பி) விசாவுக்கான முன்பதிவு மார்ச் 1-ந் தேதி தொடங்குவதாக அமெரிக்காவின் குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு வழங்கப்படுவது ஹெச்.1 பி விசா. ஆண்டுதோறும் 65,000 பேருக்கு ஹெச்.1 பி விசா வழங்கப்படும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு என 25,000 விசாக்களையும் அமெரிக்கா வழங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70% இந்தியர்கள் ஹெச்.1 பி விசா பெறுகின்றனர். 2023-ம் ஆண்டுக்கான ஹெச்.1 பி விசாவுக்கு மார்ச் 1-ந் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அமெரிக்காவின் குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது.
பல லட்சம் பேர் விண்ணப்பிப்பதால் ஹெச்.1 பி விசா குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வந்தது. இதனை மாற்றி தகுதி மதிப்பெண் அடிப்படையில் வழங்குவதாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் புதிய அதிபர் ஜோ பைடன் இதனை நிராகரித்து பழைய முறையையே அமல்படுத்தி உள்ளார்.
2023-ம் ஆண்டுக்கான ஹெச்.1 பி விசாவுக்கு மார்ச் 1-ந் தேதி முதல் மார்ச் 18-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு பதிவு எண் வழங்கப்படும். ஆன்லைன் பதிவுக்கு $10 கட்டணம் செலுத்த வேண்டும். முன்பதிவு செய்பவர்கள் பிப்ரவரி 21-ந் தேதி முதல் அக்கவுண்ட் ஓபன் செய்து கொள்ளலாம்.
இந்த அக்கவுண்ட்டில் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம். பின்னர் அவற்றை எடிட் செய்து கொள்ளலாம். ஹெச்.1 விசா தேர்வு தொடர்பான அறிவித்தல்கள் மார்ச் 31-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications