CAA அமலாக்கம் கவலையளிக்கிறது! இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்! சட்டென டோனை மாற்றிய அமெரிக்கா
நியூயார்க்: இந்தியாவில் சிஏஏ அமலாக்கப்படுவதாக வெளியான அறிவிப்பு கவலையளிப்பதாக அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே சிஏஏ-வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில், இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. அதில் திருத்தம் செய்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிருத்துவர்கள் ஆகியோர் இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது.

இசுலாமியர்களை மட்டும் திட்டமிட்டுப் புறந்தள்ளிவிட்டு மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதன் மூலம் இந்நாட்டின் அடித்தளமான மதச்சார்பின்மைக் கோட்பாடே முற்றுமுழுதாக துடைத்தெறியப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
எனவே இச்சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. டெல்லி பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா, அசாம் அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு என மாணவர்கள் தீவிரமாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அதேபோல எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர்களான மு.க.ஸ்டாலின், பிரனாயி விஜயன், மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் சிஏஏ-வை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் சிஏஏ அமல்படுத்தப்பட்டிருப்பது கவலையளிப்பதாக அமெரிக்கா கருத்து தெரிவித்திருக்கிறது. இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், "சிஏஏ அமல்படுத்தப்படுவதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மத சுதந்திரம், அனைத்து மதத்தினரும் சமமாக நடத்தப்படுவது அடிப்படை ஜனநாயக கோட்பாடுகளாகும்" என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக சிஏஏ அமல்படுத்தப்பட்டதற்கு, அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்திருந்தது. இந்த சட்டம் தாமதமாக இயற்றப்பட்டாலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசத்திலிருந்து வரும் சிறுபான்மையினரை பாதுகாக்கும் என்று கூறி, சிஏஏ அமலாக்கத்தை இந்து குழுவினர் கொண்டாடியிருந்தனர். இப்படி இருக்கையில், அமெரிக்க அரசு சிஏஏ அமலாக்கம் கவலையளிப்பதாக கூறியிருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
மறுபுறம் சிஏஏவை எக்காரணத்தை கொண்டும் வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசு கறாராக கூறியுள்ளது. அதாவது "சிஏஏ-வை கொண்டு வந்தது பாஜக, பிரதமர் நரேந்திர மோடி. இதனை அவ்வளவு எளிதில் ரத்து செய்ய முடியாது. நாங்கள் இதனை திரும்பப் பெற மாட்டோம். இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த சமரசமும் செய்துகொள்ள மாட்டோம். நாடு முழுவதும் சிஏஏ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
சிஏஏ-வை ரத்து செய்ய விரும்புவோருக்கு இங்கு இடம் கிடையாது. சிஏஏ குறித்து நாங்கள் தெளிவான பார்வையை கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு சட்டம் வரும் என்று ஏற்கெனவே 2019 லோக்சபா தேர்தல் வாக்குறுதியில் கொடுத்திருந்தோம். எனவே இதில் எந்த குழப்பத்திற்கும் இடமில்லை. எதிர்க்கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிகளை ஒன்று சேர்க்க போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன" என்று அமித்ஷா கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications