மனம் குளிர்ந்த அமெரிக்கா.. ஆணுஆயுதத்தை கைவிடும் ஈரான்? 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?
நியூயார்க்: ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் வகையில் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 2ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று ரோமில் நடைபெற்றது. நேரடியாக நடந்த இந்த பேச்சுவார்த்தையால் அமெரிக்கா மனம் குளிர்ந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் உள்ளது. ஈரான் அணுசக்தி திட்டத்தின் கீழ் அணுஆயுதம் தயாரிக்க முயன்று வருகிறது. இதனை தடுக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சி செய்கிறார். அதன்படி அணுசக்தி திட்டம் மூலம் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனிக்கு, டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.

இதையடுத்து இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த 12ம் தேதி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்தது. அதன்பிறகு 2வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று இத்தாலி தலைநகர் ரோமில் நடந்தது.
ரோமில் நேற்று நடந்த இந்த பேச்சுவார்த்தை என்பது இருநாடுகள் இடையே நேரடியாக நடந்தது. அதன்படி அமெரிக்கா சார்பில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்ஃகாப் மற்றும் ஈரான் சார்பில் அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோர் பங்கேற்றனர். ரோமில் உள்ள ஓமன் நாட்டின் தூதரகத்தில் மூடிய அறையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை என்பது சமூகமாக நடந்து முடிந்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், ‛‛ரோமில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. 4 மணிநேரம் இந்த மீட்டிங் நடந்தது. நேரடி மற்றும் மறைமுக பேச்சுவார்த்தையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது'' என்றார். இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. ஆனாலும் இருநாடுகள் இடையேயான தொடர் பேச்சுவார்த்தை என்பது மோதலை குறைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுது்து அமெரிக்கா - ஈரான் இடையேயான அடுத்தக்கட்ட மீட்டிங் என்பது ஏப்ரல் 26ம் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறுகையில், ‛‛தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இது சாத்தியமான ஒப்பந்தத்தை நோக்கி இருநாடுகளின் நகர்வை உருவாக்கும். இருநாடுகளும் ஏற்கனவே பகிர்ந்த கொள்கைகள் பற்றி நல்ல புரிதலை கொண்டுள்ளன'' என்று கூறியிருந்தார். இதனால் ஈரான் அமெரிக்கா கொடுக்கும் ஆஃபரை ஏற்று அணுஆயுதம் தயாரிப்பதை கைவிடுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி நேற்றைய மீட்டிங்கின்போது சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் (IAEA or International Atomic Energy Agency) தலைவர் ரபேல் மரியானா குரோஸி, மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் விட்ஃகாப்பை சந்தித்து பேசினார். அப்போது, அவர் ‛‛ஈரான் - அமெரிக்கா இடையே அணுசக்தி திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் அதனை எங்களுடன் சரிபார்க்க வேண்டும்'' என்று கூறினார்.
மேலும் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுக்க அமெரிக்கா முயற்சி செய்வதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் அது அமெரிக்காவுக்கு பிரச்சனையாக மாறும். இருநாடுகள் இடையே பிரச்சனை உள்ளதால் ஈரான் அணுஆயுதத்தை கொண்டு அமெரிக்காவை மிரட்டலாம். உதாரணமாக அமெரிக்கா உடனான மோதலால் வடகொரியா அணுஆயுதம் தயாரித்தது. இப்போது அதனை வைத்து அமெரிக்காவை வடகொரியா மிரட்டி வருகிறது. இதுபோன்ற மிரட்டலை இனி எந்த நாடும் விடுக்க கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளை எடுத்து கொண்டால் இஸ்ரேலிடம் மட்டுமே அணுஆயுதம் உள்ளது. இஸ்ரேல் அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ளது. இப்போது ஈரானும் அணுஆயுதம் தயாரித்தால் அது அமெரிக்காவுக்கு பிரச்சனையாகும் என்பது மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சக்திவாய்ந்த நாடாக மாறும். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் என்பது சரியலாம். இதனால் எப்படியாவது ஈரானை அணுஆயுதம் தயாரிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்பது தான் டிரம்பின் முதல் நோக்கமாக உள்ளது.
இதனால் எப்படியாவது ஈரானை வழிக்கு கொண்டு வர டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மிரட்டி வருகிறார். இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முதலில் ஈரான் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ஈரான் மீது குண்டு வீசப்படும் என்று டிரம்ப் வார்னிங் செய்தார். அதன்பிறகு முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டினார். இப்போது 2வது கட்ட பேச்சுவார்த்தையிலும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. ஆனாலும் பேச்சுவார்த்தை என்பது முதற்கட்டத்தை போல் மறைமுகமாக நடக்காமல் நேரடியாக நடந்துள்ளது. இதனால் அமெரிக்கா மனம் குளிர்ந்துள்ள நிலையில் அடுத்தக்கட்டமாக வரும் 26ம் தேதி அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு முடிவு செய்தது. அந்த 3ம் கட்ட பேச்சுவார்த்தையில் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஈரானை ஒப்பந்தம் செய்ய வைக்க தேவையான நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கி உள்ளது.
-
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா!











Click it and Unblock the Notifications