"ட்வின் டவர் அட்டாக்கிற்கு பழி தீர்த்தவர்".. அமெரிக்காவின் போர் தந்தை.. "ரம்ஸ்பெல்ட்" திடீர் மரணம்!
நியூயார்க்: அமெரிக்காவில் நவீன போர் முறைகளில் தந்தை என்று போற்றப்பட்ட, ஆப்கானிஸ்தான், ஈராக் மக்களால் மூர்க்கமானவர் என்று விமர்சிக்கப்பட்ட டொனால்ட் ரம்ஸ்பெல்ட் அமெரிக்காவில் காலமானார்.
2001 செப்டம்பர் 11.. அமெரிக்காவின் அமைதியான காலைப்பொழுதில் அந்த தீவிரவாத தாக்குதல் நடந்தது. அமெரிக்காவின் பாதுகாப்பு அரணை உடைத்து அல் கொய்தா தீவிரவாதிகள் உலக வர்த்தக மையத்திலும், ராணுவ தலைமையகமான பென்டகனிலும் தாக்குதல் நடத்தினார்கள்.
விமானத்தை கடத்தி அல் கொய்தா தீவிரவாதிகள் ட்வின் டவரில் மோதி வெடிக்க வைத்த சம்பவம் உலகையே உலுக்கியது. அதே நாளில் அதே பென்டகனில் அமர்ந்து கொண்டு மொத்தமாக அல் கொய்தாவையும் பின்லேடனையும் தீர்த்து கட்ட சபதம் எடுத்தவர்தான் டொனால்ட் ரம்ஸ்பெல்ட்.

தாக்குதல்
அல் கொய்தா நடத்திய இந்த தாக்குதலில் மொத்தம் 3000 அமெரிக்கர்கள் பலியானார்கள். இதையடுத்து அதே வருடம் டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் புகுந்து தாக்கியது. இந்த ராணுவ தாக்குதலை முன்னின்று திட்டமிட்டு அரங்கேற்றிய மாஸ்டர்மைண்ட்தான் டொனால்ட் ரம்ஸ்பெல்ட். அந்த தாக்குதலில் அல்கொய்தா படையின் முக்கிய தலைகள் கொல்லப்பட ஆப்கானிஸ்தானில் தலிபான் சாம்ராஜ்ஜியமும் கவிழ்ந்தது.

ஆப்கானிஸ்தான்
இந்த தாக்குதலுக்காக அமெரிக்க ராணுவத்தின் கட்டமைப்பையே மாற்றி, புதிய போர் முறைகளை வகுத்து, 6 மாதங்களில் ராணுவத்தில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி தலிபான் கோட்டையை ஆபகானிஸ்தானில் சரித்தவர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட். அமெரிக்காவில் இரண்டு முறை பாதுகாப்பு செயலாளராக இருந்தவர். மிக இளம் வயதிலேயே அமெரிக்காவில் பாதுகாப்பு செயலாளராக அதிபர் புஷ் காலத்தில் நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் மாடர்ன் போர் தந்தை என்று போற்றப்பட கூடியவர்.

2008
2008ல் ஓய்வு பெறும் முன்பு வரை அமெரிக்க ராணுவத்திலும், அரசியலிலும், பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் நெருங்கிய நண்பராகவும், பாதுகாப்பு மாஸ்டர்மைண்டாகவும் திகழ்ந்தவர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட். அமெரிக்காவில் இரண்டு முறை பென்டகன் தலைவராக இருந்தது இவர்தான். 1975-77ல் மிக குறைந்த வயதிலும், 2001-06ல் மிக முதிய வயதிலும் அவர் பென்டகன் தலைவராக இருந்தார்.

போர்
பல்வேறு போர்களில் அமெரிக்காவை முன்னடத்தி அனுபவம் பெற்றவர், குடியரசு கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். 1988ல் அமெரிக்க அதிபராக போட்டியிட முயன்று, நாம்பினேஷன் வாய்ப்பு கிடைக்காமல் பிரைமரி தேர்தலில் தோல்வி அடைந்தார். அந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக ஜார்ஜ் புஷ் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ராணுவ போர் முறைகளை வகுத்தார், பாதுகாப்பை பலப்படுத்தினார், உளவு பணிகளை புதுப்பித்தார் என்று இவர் பல விஷயங்களுக்கு பாராட்டப்பட்டாலும், இன்னொரு பக்கம் இவர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் போர்
ஆப்கானிஸ்தான் போருக்கு பின் உடனே ஈராக்கிலும் இவர் போரை தொடுத்தார். காரணமே இன்றி ஈராக்கில் அணு ஆயுதங்கள் இருப்பதாக கூறி போரை தொடுத்தார். பல உளவு அதிகாரிகள், அமெரிக்க போர் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கூட 1 லட்சம் பேரோடு டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ஈராக்கில் போரை தொடுத்தார். இதில் பாக்தாத் வீழ்ந்து, சதாம் உசைன் ஆட்சியும் கவிழ்ந்தது.

ஆனால்
ஆனால் இந்த போரில் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் வழிநடத்திய படை மோசமான தாக்குதலை மேற்கொண்டதாகவும், ஈராக்கில் பொருளாதார ரீதியான திருட்டு சம்பவங்கள் நடந்ததாகவும், இது போர் அல்ல இன அழிப்பு என்றும் புகார்கள் வைக்கப்பட்டன. இந்த போரில் பொது மக்கள் கொல்லப்படுவதை டொனால்ட் ரம்ஸ்பெல்ட் ஊக்குவித்ததாகவும், இவர் போர் குற்றவாளி என்றும் மத்திய கிழக்கு நாடுகள் சில புகார் வைத்தன.

ஈராக்
அமெரிக்காவிற்கு பொருளாதார ரீதியான இழப்பை இது ஏற்படுத்தியது. ஈராக்கிலும் அண்டை நாடுகளிலும் இது மிகப்பெரிய அளவில் உள்நாட்டு போருக்கு வழி வகுத்து மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை குலைத்தது. பின்னாளில் இதுவே ஐஎஸ் அமைப்பு தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது. அதோடு ஈராக் கைதிகளை அபு காரிப் உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் கொடுமைப்படுத்தியதாகவும் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் மீது கடும் புகார்கள் வைக்கப்பட்டன.

எப்படி
இதற்கான புகைப்பட ஆதாரங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.பல ஆண்டுகளுக்கு இவர் ஈராக் போரை நியாயப்படுத்தி பேசி இருந்தார். ஆனால் தன்னுடைய ஈராக் நினைவு குறிப்பான "Known and Unknown," புத்தகத்தில் அந்த போர் குறித்து வருந்தியதாகவும், இதற்காக புஷ்ஷிடம் ராஜினாமா கடிதத்தை 2004ல் இரண்டு முறை கொடுத்தேன். ஆனால் அதை புஷ் ஏற்கவில்லை என்றும் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் குறிப்பிட்டு இருந்தார்.

பவர்
2006ல் காங்கிரஸ் அவையில் குடியரசு கட்சி பெரும்பான்மை பெரும் வரையில் இவர்தான் பென்டகன் தலைவராக இருந்தார். பின்னர் 2006ல் இவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 88 வயதான இவர் நேற்று நள்ளிரவில் நியூ மெக்சிகோவில் உள்ள டாவோஸ் பகுதியில் மரணம் அடைந்தார். வயோதிகம் மற்றும் நாள்பட்ட உடல்நலக்குறைவால் இவர் மரணம் அடைந்தார். அமெரிக்க அதிபர் பிடன், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்! -
அமெரிக்கா vs ஈரான்.. இஸ்லாமாபாத்தில் நடக்கும் 'மைண்ட் கேம்'. மிரட்டிய ட்ரம்ப்! பேச்சுவார்த்தை தோல்வி -
கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது? -
ஈரான் -அமெரிக்கா பேச்சுவார்த்தை! டெல்லிக்குக் கிடைக்காத பவர் பிளே! பாகிஸ்தான் தட்டி சென்றது எப்படி -
போரால் முடியாததை பேச்சுவார்த்தையில் கேட்குது அமெரிக்கா.. எப்படி சம்மதிக்க முடியும்.. ஈரான் விளக்கம் -
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை ரத்தகளறி! தங்கம் - பங்குகள் வீழ்ச்சி, எண்ணெய் உயர்வு? -
கடலில் கண்ணிவெடி வச்ச இடத்தை மறந்த ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியில் பெரிய டேஞ்சர்.. போச்சு! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு!












Click it and Unblock the Notifications