தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் கார்.. அடித்து தூக்கிய ரயில்.. கோமாவுக்கு சென்ற பெண் கைதி!
நியூயார்க்: அமெரிக்காவில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ரயில் மோதியதில் அதில் இருந்த பெண் கைதி படுகாயம் அடைந்து கோமாவுக்கு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸாரின் உச்சக்கட்ட அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளதால், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் சமீபகாலமாக போலீஸாரின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரம்பு மீறும் அமெரிக்க போலீஸார்..
அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக போலீஸாரின் நடவடிக்கைகள் பெரும் விமர்சனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஆளாகி வருகின்றன. குறிப்பாக, அமெரிக்காவின் மினியோபொலிஸ் மாகாணத்தில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவரை சாதாரண வழக்கில் விசாரிக்க சென்ற போலீஸ் அதிகாரி ஒருவர், அவர் கழுத்தில் மீது காலை வைத்து அழுத்தியதில் அந்த நபர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் புயலை கிளப்பியது. ஆனால் அதன் பின்னரும், அமெரிக்க போலீஸ் அதிகாரிகளின் சில பொறுப்பற்ற நடவடிக்கைகளில் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்தது. இதனால் அமெரிக்க காவல்துறை மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதுபோன்ற மேலும் ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

துப்பாக்கியை எடுத்து மிரட்டிய பெண்..
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் லுப்டான் நகரில் கடந்த வாரம் கார்கள் மோதிக்கொண்ட சம்பவத்தில் இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது பெண் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸ் அதிகாரிகள் இருவர் வந்து, அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்த துப்பாக்கியை பறித்த போலீஸார், அவரது கையை பின்பக்கமாக வைத்து விலங்கிட்டு அப்பெண்ணை தங்கள் போலீஸ் வாகனத்தில் அமர வைத்தனர்.

தண்டவாளத்தில் நிறுத்தப்பட்ட கார்..
அந்த போலீஸ் வாகனம் ரயில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, அங்கிருந்தவர்களிடம் என்ன நடந்தது என போலீஸார் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது தூரத்தில் ரயில் வரும் சத்தம் கேட்டது. இதையடுத்து, அங்கிருந்த அனைவரும், "ரயில் வருகிறது.. அந்தப் பெண்ணை காரில் இருந்து வெளியே கொண்டு வாருங்கள்" எனக் கூச்சலிட்டனர். இதையடுத்து, போலீஸ் அதிகாரி ஒருவர் காரை நோக்கி ஓடினார். ஆனால் ரயில் அருகே வருவதை பார்த்தும் அவர் பின்னால் ஓடி வந்துவிட்டார்.

அடித்து தூக்கிய ரயில்
காருக்குள் அமர்ந்திருந்த பெண்ணும் கதவை திறக்க முடியாமல் பயத்தில் அலறினார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரயில் அதிவேகமாக போலீஸ் காரின் மீது மோதியது. இதில் பல அடி தூரத்துக்கு அந்த கார் தூக்கி வீசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கு சென்று பார்த்த போது அப்பளம் போல நொறுங்கிய காருக்குள் ரத்த வெள்ளத்தில் அந்தப் பெண் அசைவற்று கிடந்தார். பின்னர் அவரை மீட்டு போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், உடல் முழுவதும் எண்ணற்ற எலும்பு முறிவுகளுடனும், கோமா நிலையிலும் அந்தப் பெண் இருப்பதால் அவரை காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட போலீஸாரை கட்டாய விடுப்பில் அனுப்பி அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications