மெக்சிகோ, பனாமாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிவு.. அதிபர் டிரம்ப் அறிவிப்பு
நியூயார்க்: மெக்சிகோ இனி கல்ஃப் ஆஃப் அமெரிக்கா என்று அழைக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் பனாமாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வருவோம் என்று டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டிரம்ப் இன்று அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்றார். அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. பலம் மிகுந்த, சுதந்திரமான, நம்பிக்கையான தேசத்தை உருவாக்குவதே நோக்கம்,.

எனது ஆட்சி காலத்தில் ஒவ்வொரு நாளிலும் அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான நாடாக சீக்கிரம் மாறும். நான் கொலை தாக்குதலில் இருந்து தப்பித்து வந்திருக்கிறேன். நான் பிழைத்ததற்கு காரணம் உள்ளது. அமெரிக்காவை மீண்டும் மேலே கொண்டு வர கடவுள் எனக்கு தந்த வாய்ப்பு அது.
இதற்கு முன் எப்போதும் கிடைக்காத வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் இந்த நொடி முதல் சுதந்திரம் பிறந்திருக்கிறது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றம் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும், என்று டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டார். இதே விழாவில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸும் பதவி ஏற்றனர். முக்கிய உலக வல்லரசுகளுக்கும் இந்தியா உட்பட அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளுக்கும் அழைப்புகள் சென்றன. இந்திய அரசுக்கு முறையாக அழைப்பு சென்றுள்ளது. மாறாக இந்திய பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட அழைப்பு போகவில்லை என்று கூறப்படுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார்.
டிரம்ப் அறிவிப்பு:
மெக்சிகோ இனி கல்ஃப் ஆஃப் அமெரிக்கா என்று அழைக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் பனாமாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வருவோம் என்று டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
ஏற்கனவே 3 நாடுகளின் முக்கிய பகுதிகளை கைப்பற்றும் விதமாக அமெரிக்காவில் அதிபர் டிரம்பிற்கு சிறப்பு அதிகாரிகளை வழங்கும் சட்டத்தை கொண்டு வர அவரின் குடியரசு கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 3 புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி குடியரசு கட்சியின் பிரதிநிதி மார்ஜோரி டெய்லர் கிரீன் (மெக்ஸிகோ வளைகுடாவை "அமெரிக்கா வளைகுடா" என்று மறுபெயரிட வேண்டும்.. இதற்கான அதிகாரத்தை டிரம்பிற்கு அளிக்க வேண்டும் என்று மசோதா கொண்டு வந்தார்.
குடியரசு கட்சியின் பிரதிநிதி டஸ்டி ஜான்சன் பனாமா கால்வாயை அமெரிக்கா வாங்குவதற்கான பேச்சு வார்த்தைகளை அங்கீகரிக்கும் மசோதாவை அறிமுகப்படுத்தினார். இதுவும் டிரம்பிற்கு பனாமா கால்வாயை விலை பேசும் அதிகாரத்தை வழங்கும்.
குடியரசு கட்சியின் பிரதிநிதி ஆண்டி ஓகிள்ஸ் இரண்டு பக்கங்கள் கொண்ட "மேக் கிரீன்லேண்ட் கிரேட் அகைன் ஆக்ட்" ஐ அறிமுகப்படுத்துகிறார். இதன் மூலம் டிரம்ப் கிரீன்லாந்தை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்த அதிகாரம் வழங்கப்படும்.
4 நாடுகளை இணைக்க திட்டம்:
அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப் 4 முக்கியமான நாடுகளை அல்லது வேறு நாட்டின் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ராணுவ படைகளை களமிறக்கவும் தயார் என்று அவர் அறிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும். அதோடு கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பாக அவர் கடந்த சில நாட்களாகவே பேசி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் உடனே இந்த பகுதிகளை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும். பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து இரண்டும் அமெரிக்காவுடன் இருக்க வேண்டிய பகுதிகள். இந்த பகுதிகளை அமெரிக்காவிற்கு கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் அதற்காக படைகளை கூட அனுப்புவேன்.
தேவைப்பட்டால் மொத்த ராணுவத்தை கூட அனுப்புவேன். கனடாவை பொறுத்தவரை அப்படி இல்லை. அவர்களுக்கு பொருளாதார அழுத்தம் தருவேன். மெக்சிகோ அமெரிக்காவின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். செஸ் விளையாடுவது போலத்தான். இவர்களுக்கும் பொருளாதார தடை உள்ளிட்ட அழுத்தங்களை கொடுப்பேன். அவர்கள் அமெரிக்காவின் புதிய மாகாணங்களாக மாற வேண்டும்.
பணிகள் தொடங்கும்: பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து பகுதிகளை நான் அதிபர் ஆனதும் அமெரிக்காவுடன் இணைக்க பணிகளை செய்வேன் என்று கூறி உள்ளார். இந்த பகுதிகள் பாதுகாப்பு ரீதியாக அமெரிக்காவிற்கும் மிகவும் முக்கியம் என்பதை மறக்க வேண்டாம்.












Click it and Unblock the Notifications