கவனிச்சீங்களா.. டிரம்ப் பேச்சில் தென்பட்ட மிகப்பெரிய மாற்றம்.. திடீர் அமைதி.. ஆளே மாறிட்டாரே!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையில் இன்று தென்பட்ட மாற்றம் பலரையும் கவனிக்க வைத்தது. எப்போதும் உரையில் தெரியும் ஆவேசம் இல்லை. அமைதியாக டிரம்ப் உரையாற்றியது பலரையும் கவனிக்க வைத்தது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ஜே டிரம்ப் இன்று பதவி ஏற்றார். டொனால்ட் ஜே. டிரம்ப் 76 மில்லியன் வாக்குகளை பெற்று இந்த முறை அதிபராகி உள்ளார். . அமெரிக்க வரலாற்றில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிக வாக்குகள் இதுவாகும். டிரம்ப்: 76,133,250 ஹாரிஸ்: 73,237,314 வாக்குகள் பெற்றனர்..

இது போக கடந்த 20 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய சாதனையை அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் படைத்துள்ளார். . வாக்கு சதவிகித அடிப்படையில் 47 9 சதவிகித வாக்குகளை கமலா ஹாரிஸ் வென்றார். இன்னொரு பக்கம் டிரம்ப் 51 சதவிகித வாக்குகளை வென்றுள்ளார். மக்கள் வாக்கு அடிப்படையில் கடந்த 20 வருடங்களில் குடியரசு கட்சி முதல்முறை ஜனநாயக கட்சியை முந்தி உள்ளது. அதாவது எலக்ட்ரல் வாக்கு தாண்டி மக்களின் மொத்த வாக்கிலும் டிரம்ப் இந்த முறை சாதனை செய்துள்ளார்.
50 மாகாணங்களில் 30 மாகாணங்களில் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார் மீதம் 20 மாகாணங்களில் மட்டுமே கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் கலிபோர்னியா தவிர கமலா ஹாரிஸ் பெரிய மாகாணங்களில் எதுவும் பெரிதாக வெற்றிபெறவில்லை. அந்த வகையில் டொனால்ட் டிரம்பிற்கு இது மிகப்பெரிய வெற்றி ஆகும்.
பதவி ஏற்பு:
இதையடுத்து இன்று அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்றார் டிரம்ப். அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. பலம் மிகுந்த, சுதந்திரமான, நம்பிக்கையான தேசத்தை உருவாக்குவதே நோக்கம்,.
எனது ஆட்சி காலத்தில் ஒவ்வொரு நாளிலும் அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான நாடாக சீக்கிரம் மாறும். நான் கொலை தாக்குதலில் இருந்து தப்பித்து வந்திருக்கிறேன். நான் பிழைத்ததற்கு காரணம் உள்ளது. அமெரிக்காவை மீண்டும் மேலே கொண்டு வர கடவுள் எனக்கு தந்த வாய்ப்பு அது.
இதற்கு முன் எப்போதும் கிடைக்காத வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் இந்த நொடி முதல் சுதந்திரம் பிறந்திருக்கிறது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றம் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும், என்று டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டார்.
அதோடு தெற்கு அமெரிக்கா எல்லையில் எமர்ஜென்சி தொடங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எல்லா விதமான முறைகேடான எல்லை பகுதிகளும் மூடப்படும், அமெரிக்காவில் அத்துமீறி ஆவணங்கள் இன்றி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
மாற்றம்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையில் இன்று தென்பட்ட மாற்றம் பலரையும் கவனிக்க வைத்தது. எப்போதும் உரையில் தெரியும் ஆவேசம் இல்லை. அமைதியாக டிரம்ப் உரையாற்றியது பலரையும் கவனிக்க வைத்தது.
இன்று அவரின் உரையில் பெரிய அளவில் மாற்றம் தெரிந்தது. ஆவேசம் இன்று கவனமாக மெதுவாக அவர் பேசியதும்.. அவரின் பேச்சில் பொறுமை தென்பட்டதும் பலரையும் கவர்ந்தது.












Click it and Unblock the Notifications