எல்லைக்கு விரையும் ராணுவம்.. இப்பவே நடுக்கம் ஆரம்பிச்சிடுச்சே.. டிரம்ப் போட்ட ஒரு உத்தரவால் ட்விஸ்ட்
நியூயார்க்: அமெரிக்காவின் தெற்கு எல்லை பகுதிக்கு ராணுவம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கே விரைவில் எமர்ஜென்சி அமலுக்கு வரும். இதனால் அங்கே ராணுவ வீரர்கள் குவிக்கப்படுவார்கள்.
அங்கே உள்ளே நுழைய முயல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அதேபோல் ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள முறையான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர் இந்த வழியாக திருப்பி அனுப்பப்படுவார்கள். வரும் நாட்களில் இங்கே பல குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், பெண்கள் வெளியேற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு ராணுவம் அங்கே தெற்கு எல்லை நோக்கி விரைந்து உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதும், தெற்கு அமெரிக்கா எல்லையில் எமர்ஜென்சி தொடங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். எல்லா விதமான முறைகேடான எல்லை பகுதிகளும் மூடப்படும், அமெரிக்காவில் அத்துமீறி ஆவணங்கள் இன்றி உள்ளவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
தெற்கு அமெரிக்க எல்லை என்பது மெக்ஸிகோ -யுனைடெட் ஸ்டேட்ஸ் எல்லை ஆகும். மெக்ஸிகோவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் சர்வதேச எல்லைதான் அமெரிக்காவின் தெற்கு பார்டர் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350 மில்லியன் மக்கள் இந்த பகுதியை ஆவணங்கள் இன்றி கடந்து அமெரிக்கா உள்ளே நுழைகின்றனர். இங்கே ஏற்கனவே பெரிய பெரிய கம்பி வேலிகள், மின்சார வேலிகள் உள்ளன. அதை மீறி மெக்சிகோவில் இருந்தும்.. ஏன் குஜராத்திகள் கூட மெக்சிகோ வழியாக அமெரிக்கா உள்ளே நுழைகிறார்கள்.
ஏலியன் எனிமி சட்டம்:
இந்த சட்டத்தின்படி அதிபர் ஒருவர் தனது நாட்டில் அத்துமீறி குடியேறி உள்ளவர்களை வெளியேற்ற முடியும். வழக்கு விசாரணை எதுவும் இன்றி இந்த சட்டத்தை காட்டி ஒருவரை வெளியேற்ற முடியும்.
இந்த சட்டத்தைதான் டிரம்ப் பயன்படுத்துகிறார். நாட்டிற்குள் ஆவணங்கள் இன்றி புகும் வெளிநாட்டினரை தடுக்கும் விதமாக தெற்கு எல்லை பகுதியில் டிரம்ப் எமர்ஜென்சி கொண்டு வர முடிவு செய்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆட்சியிலேயே டிரம்ப் இந்த பகுதியில் எமர்ஜென்சி கொண்டு வந்தார். அதை நாடாளுமன்றம் எதிர்த்து வாக்களித்த நிலையில் அதை வீட்டோ அதிகாரம் மூலம் நீக்கி எமர்ஜென்சியை தெற்கு எல்லை பகுதியில் அமல்படுத்தினார்.
இந்த முறை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்.. இன்று பதவி ஏற்றவுடன் இந்த எமர்ஜென்சியை மீண்டும் கொண்டு வந்தார்.
சட்டவிரோத அகதிகள்:
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ஜே. டிரம்ப், தாமஸ் டி. ஹோமனை நாட்டின் எல்லைகள் கடல் மற்றும் வான்வெளி எல்லை பாதுகாப்புக்கு பொறுப்பான border czar துறைக்கு தலைவராக நியமிக்க உள்ளார். அதாவது அமெரிக்காவில் அத்துமீறி.. அனுமதியின்றி குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவதற்கும்.. புதிதாக மக்கள் ஊடுருவுவதை தடுக்கவும் தாமஸ் டி. ஹோமனை டிரம்ப் உள்ளே கொண்டு உள்ளார்.
டிரம்ப்பின் முந்தைய நிர்வாகத்தில் மூத்த குடியேற்ற அதிகாரியான தாமஸ் டி. ஹோமன் பதவி வகித்து வந்தார். அப்போது இந்த பணியை சிறப்பாக செய்தார். அதோடு அகதிகள் குடியேற்றத்தை வெகுவாக கட்டுப்படுத்தினர். இவர் டிரம்பிற்கு மிக நெருக்கம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்த தேர்தலில் அகதிகள் விவகாரம் உச்சத்தில் இருந்தது. அமெரிக்காவில் வெளிநாட்டினர் முறைகேடாக குடியேறுவதை டிரம்ப் கடுமையாக எதிர்த்தார். தாமஸ் டி. ஹோமனை இப்போது இவர்களை வெளியேற்றும் பணிகளை செய்ய உள்ளார்.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
நெதன்யாகு-க்கு வேற சாய்ஸே இல்லை.. நெருக்கும் டிரம்ப்! ஈரான் தாக்குதலால் மீண்டும் ஹை டென்ஷன் -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications