ஹிட்லர் போன பின்.. ஜெர்மனியை கூட உலக நாடுகள் இப்படி தண்டிக்கவில்லை.. உக்ரைனுக்கு டிரம்ப் வைத்த ஆப்பு
நியூயார்க்: உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி, வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்தித்து, உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்கா பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். அமெரிக்காவுடனான பூர்வாங்க ஒப்பந்தம் இதற்காக கையெழுத்தாக உள்ளது.
இரண்டாம் உலகப்போருக்கு பின் ஜெர்மனியை உலக நாடுகள் பல தண்டித்தன. முக்கியமாக ஹிட்லர் மரணத்திற்கு பின் ஜெர்மனி மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால் அதை எல்லாம் மீறக்கூடிய கட்டுப்பாடுகளை உக்ரைன் மீது அதிபர் டிரம்ப் விதிக்க உள்ளார்.

உக்ரைன் - அமெரிக்கா நட்பு நாடுகள் தானே.. அவர் ஏன் உக்ரைனை எதிர்க்கிறார் என்று கேட்கலாம். இதற்கு 4 எளிமையான காரணங்கள் உள்ளன.
1. உக்ரைன் - ரஷ்யா போரை டிரம்ப் விரும்பவில்லை. இந்த போருக்கு காரணமாக அமைந்த உக்ரைன் நேட்டோவில் இணையும் விருப்பத்தை அவர் ரசிக்கவில்லை.
2. உக்ரைன் போருக்கு அமெரிக்கா செலவு செய்வதை அவர் விரும்பவில்லை.
3. உக்ரைன் அதிபர் பணத்தை கொள்ளையடிக்கிறார்.. போர் என்ற பெயரை காரணம் காட்டி ஆட்சியில் நீடிக்கிறார். அவருக்கு ஏன் நாம் உதவ வேண்டும் என்று டிரம்ப் நினைக்கிறார்.
4. ரஷ்யாவுடன் பிஸ்னஸ் செய்வது தொடங்கி பல ஒப்பந்தங்களை செய்ய டிரம்ப் நினைக்கிறார். இதனால் உக்ரைனை கழற்றிவிட்டு விட்டார்.
சரி என்ன தண்டனை
சரி உக்ரைனுக்கு டிரம்ப் தரப்போகும் தண்டனை என்ன என்று நீங்கள் கேட்கலாம். உக்ரைனை கட்டுப்படுத்துவதற்கான சில விதிகளை அமெரிக்கா உக்ரைனிடம் தனியாக தெரிவித்து உள்ளதாம். அதாவது உக்ரைனிடம் அமெரிக்கா சார்பாக சில
கட்டுப்பாடுகள், கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளதாம். இதில்தான் இரண்டு நாட்டு அதிபர்கள் கையெழுத்திட உள்ளனர்.
உக்ரைனுக்கு வைக்கப்படும் கட்டுப்பாடுகள்
1. உக்ரைனின் இயற்கை வளங்கள், துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் வருவாயில் 50 சதவிகிதப் பங்கை அமெரிக்கா கோரி உள்ளதாம்.
2. 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா இதுவரை உக்ரைனுக்கு வழங்கி
உள்ளதாம். போர் செலவுகளை சமாளிக்க, ஆயுதங்களை வழங்க 500 பில்லியன் அமெரிக்க
டாலர்களை அமெரிக்கா இதுவரை உக்ரைனுக்கு வழங்கி உள்ளது.
3. இந்த செலவிற்கு ஈடுகட்டும் விதமாக உக்ரைனுக்கு கிடைக்கும் வருவாயில் 50 சதவிகிதப் பங்கை அமெரிக்கா கோரி உள்ளதாம்.
4. அதன்படி உக்ரைனின் இயற்கை வளங்களில் இருந்து, உற்பத்தியில் இருந்து வரும் வருவாயில் முதல் பங்கு அமெரிக்காவிற்கே வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா உக்ரைனிடம் தெரிவித்து உள்ளதாம்.
5. 3 வருடங்களாக செய்த உதவிகளுக்கு பதிலாக இதை வழங்க வேண்டும் என்று உக்ரைனிடம் அமெரிக்கா கண்டிப்பாக கூறி உள்ளதாம்.
6. கிட்டத்தட்ட உக்ரைனை அமெரிக்காவின் பொருளாதார காலனியாக மாற்றும் வகையில்
இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளதாம்.
7. அமெரிக்கா சார்பாக உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட ரிப்போர்ட் ஒன்றில் இது தொடர்பான கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
8. இரண்டாம் உலகப்போருக்கு பின் ஜெர்மனிக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட மிக மோசமான கட்டுப்பாடுகள் உக்ரைன் மீது விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உக்ரைனை பொருளாதார ரீதியாக கிட்டத்தட்ட அமெரிக்காவின் காலனியாக மாற்றிவிடும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications