கடைசி நொடியில்.. போகிற போக்கில் பிடன் செய்த காரியம்.. கடுப்பான அமெரிக்கர்கள்.. என்னாச்சு?
நியூயார்க்: அமெரிக்க அதிபராக நேற்று டிரம்ப் பதவி ஏற்றார். இந்த நிலையில் அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பிடன் சரியாக ஆட்சியை விட்டு செல்லும் முன் முக்கியமான காரியம் ஒன்றை செய்துவிட்டு சென்றுள்ளார்.
பொதுவாக அமெரிக்க அதிபர்கள்.. அவர்கள் ஆட்சி காலத்தில் கடைசியில் யாரையாவது மன்னிக்கலாம். அதாவது அவர்கள் செய்த குற்றங்களில் இருந்து மன்னிப்பு வழங்கி செல்லலாம். சமயங்களில் செய்யாத குற்றங்களையும், செய்திருக்க வாய்ப்புள்ள குற்றங்களையும் குறிப்பிட்டு மொத்தமாக தண்டிக்கலாம். இதன் மூலம் அதிபர்கள் வழக்கில் இருந்து தப்பிக்க முடியும்.

அதேபோல் அதிபர்களுக்கு நெருக்கமானவர்கள் வழக்கில் இருந்து தப்பிக்க முடியும். மேலும் சில சமயங்களில் பழி வாங்கும் நடவடிக்கையாக புதிய அதிபர்கள் செயல்படுவதையும் தடுக்க முடியும். அந்த வகையில்
முன்னாள் அதிபர் ஜோ பிடன் நேற்று கடைசி நிமிடத்தில் முக்கியமான நபர்களுக்கு மன்னிப்பு வழங்கினார். தனது குடும்ப உறுப்பினர்கள், ஜனவரி 6ல் நடந்த கேபிடல் கட்டிட தாக்குதல் விசாரணைக் குழுவின் உறுப்பினர்கள் ( இவர்கள்தான் டிரம்பிற்கு எதிராக விசாரணை செய்து குற்றவாளி என்றனர், இதனால் டிரம்ப் மீது வழக்கு போடப்பட்டது). இந்த குழுவின் முன்னாள் தலைவர் மார்க் மில்லி, தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் அந்தோனி பவுச்சி , மற்றும் முன்னாள் குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் தலைவர் லிஸ் செனி ஆகியோருக்கு ஜோ பிடன் மன்னிப்பு வழங்கி உள்ளார்.
அதோடு தனது குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் அவர் மன்னிப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். தனது சகோதரர் ஜேம்ஸ் பிடன், ஜேம்ஸின் மனைவியான சாரா ஜோன்ஸ் பிடன், அவரது தங்கை, வலேரி பிடன் ஓவன்ஸ்; வலேரியின் கணவர், ஜான் டி ஓவன்ஸ்; மற்றும் அவரது சகோதரர், பிரான்சிஸ் பிடன் ஆகியோருக்கு முழுமையான மன்னிப்பு வழங்கி பிடன் உத்தரவிட்டு உள்ளார். அமெரிக்கர்கள் பலரையும் பிடனின் இந்த நடவடிக்கை கடுப்பாக்கி உள்ளது.
அதிபர் டிரம்ப் பேச்சு:
அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டிரம்ப் நேற்று அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்றார். அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது. பலம் மிகுந்த, சுதந்திரமான, நம்பிக்கையான தேசத்தை உருவாக்குவதே நோக்கம்,.
எனது ஆட்சி காலத்தில் ஒவ்வொரு நாளிலும் அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான நாடாக சீக்கிரம் மாறும். நான் கொலை தாக்குதலில் இருந்து தப்பித்து வந்திருக்கிறேன். நான் பிழைத்ததற்கு காரணம் உள்ளது. அமெரிக்காவை மீண்டும் மேலே கொண்டு வர கடவுள் எனக்கு தந்த வாய்ப்பு அது.
இதற்கு முன் எப்போதும் கிடைக்காத வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் இந்த நொடி முதல் சுதந்திரம் பிறந்திருக்கிறது. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றம் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும், என்று டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டார். இதே விழாவில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸும் பதவி ஏற்றனர். முக்கிய உலக வல்லரசுகளுக்கும் இந்தியா உட்பட அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகளுக்கும் அழைப்புகள் சென்றன. இந்திய அரசுக்கு முறையாக அழைப்பு சென்றுள்ளது. மாறாக இந்திய பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட அழைப்பு போகவில்லை என்று கூறப்படுகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications